மோசேயின் பேரிலான போதனை 56-0513 சரி. சகோதரன் நெவில், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. காலை வணக்கம், நண்பர்களே. இது காலையா அல்லது மாலையா என்று சில சமயங்களில் நான் பார்க்க வேண்டியதாய் உள்ளது. பாருங்கள், இந்தக் காலை வேளையில் நான் இங்கிருப்பதற்கு மகிழ்ச்சியடைகிறேன். இது வெப்பமாய் உள்ளது, நிச்சயமாக நீங்கள் ஒரு நல்ல வரவேற்பை பெற்றீர்கள். நமக்கு வசந்த காலம் என்பது இனி கிடையாது; இங்கு நமக்கு கோடைக் காலமும் குளிர் காலமும்தான் உண்டு, நமக்கில்லைதானே? எப்படியாயினும், எல்லாக் காரியங்களும் ஒழுங்கற்ற நிலையில் இருப்பது போன்று தெரிகின்றது. 2 பாருங்கள், என்னை காலதாமதமாக்கிவிட்டது எதுவென்றால், நான்—நான் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தேன். அதனால் நான் இக்காலையில் சரீர வலியோடு இருந்தேன். நான் சீக்கிரமாகவே எழுந்துவிட்டேன், ஆனால் ஒரு ஸ்திரீ செய்ய வேண்டிய வேலை எவ்வளவு உள்ளது என்று நான் உணரவேயில்லை, அவள் மூன்று பிள்ளைகளையும் தயார்படுத்தி பிறகு அவர்களை ஞாயிறு பள்ளிக்கு அனுப்ப வேண்டும். ஓ, என்னே! நான் நினைத்ததை விட, செய்யவேண்டிய காரியங்கள் மிக அதிகமாய் உள்ளன. மேலும் நான், “பாருங்கள், இப்பொழுது…” எண்ணிப் பார்த்தேன். நான்—நான் சுவிசேஷ களத்தை விட்டு…?…கடந்த மாலை வந்து உதவி செய்துகொண்டிருந்தேன். என்னே, அதைச் செய்ய கடினமாக பிரயாசப்பட வேண்டியதாயிருக்கிறதல்லவா? ஹும்! குழந்தையை கவனித்துக்கொள்ள முன் வரும் யாராவது ஒருவருக்கு வாரம் முப்பத்தைந்து டாலர் அளிக்க முன்வந்தேன், யாராலும் அதைச் செய்ய முடியவில்லை. 3 அண்மையில் இங்கு ஒரு துண்டு காகிதத்தில் ஒரு நபர் எழுதியிருந்தார். உண்மையாகவே, ஒருவேளை இதற்கும் அதற்கும் சம்பந்தம் இராது. அவர் இங்கே இருந்தார் என்றும், இங்கே கென்டக்கியில் ஒரு விதமான அரசியல்வாதியாக இருந்தார் என்றும் கூறப்பட்டிருந்தது, அந்த நபர் இராணுவத்தில் இருமுறை இருந்து, மூன்று முறை காயப்பட்டு, ஒரு போர் வீரனாக இருந்தார், அவர் ஒரு குடிமகனாக வாழ்ந்திருந்த அக்கம்பக்கத்தில், அவர் அநேக காரியங்களை செய்திருந்தார், இரண்டு சிறு பிள்ளைகளுடைய உயிரை, ஒரு பிள்ளையை ஒரு சிற்றோடையிலிருந்தும் மற்ற ஒன்றை வேறொன்றிலிருந்தும் காப்பாற்றினார், அவர் செய்திருந்த யாவும் மறக்கப்பட்டுவிட்டது. மேலும் கடைசியாக, பாருங்கள், அவர்கள் சுற்று வட்டாரத்தை சரியான முறையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணி, ஒரு பதவிக்காக போட்டியிட்டார். அவ்வாறு அவர் போட்டியிட்டபோது, ஒரு இலட்சம் மக்களில் ஐந்து வாக்குகள் மாத்திரமே அவர் பெற்றார். ஆகவே அவர் அக்கம்பக்கத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு சிறு துப்பாக்கியை அவர் பெற்றுக்கொள்ள முடியுமா என்று காவலரிடம் கேட்டார், “நகரத்தை சுற்றி வாழ்வது கூட ஆபத்தானது” என்று கூறினார். அந்த நகரத்தைவிட்டு வெளியே செல்லும்படி உதவிசெய்ய அவருக்கு போதிய நண்பர்கள் இல்லாதிருந்தனர். இருப்பினும், அதுதான் அமெரிக்காவின் நன்றிக் கடன், அப்படித்தானே? அது உண்மை. அமெரிக்காவில், நீங்கள் அதிகமான காரியங்களைச் செய்தால், இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது உண்மை, உங்களிடம் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. 4 பாருங்கள், இந்தக் காலையில் சபையானது எவ்வளவு சுத்தமாகவும், அழகாகவும் காணப்படுகிறது என்பதற்காக என்னுடைய பாராட்டுகளை நான் தெரிவிக்க விரும்புகிறேன். சரியான காற்றுச் சுழற்சிக்காக அங்கே ஒரு கதவை அவர்கள் வைத்திருப்பதை, நான் மேலே வரும்போது கவனித்தேன். எனவே இங்கே இதை வைக்கத் தூண்டி உதவி செய்த, தர்மகர்த்தாக்கள் குழுவிலுள்ள யாராயிருந்தாலும் சரி, உண்மையாகவே அது அருமையாய் உள்ளது. அது நிச்சயமாகவே மிகவும் நன்றாக இருந்தது, மேலும் இது ஒரு அருமையான சுத்தமான வேலையாகும். சகோதரன் ஹால் அதைச் செய்தார் என்றும், நான் தவறாக கூறவில்லை என்றும் நான் நினைக்கிறேன். அது மிகவும் அருமையான ஒரு வேலையாகும். 5 இப்பொழுது, இது சற்று தாமதமாகிவிட்டது, ஆனாலும் பரிசுத்த கூட்ட மக்கள் எப்படியுள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாருங்கள், அதற்கு குறிப்பிட்ட நேரம் என்பது கிடையாது, சகோதரன் ஸ்லாட்டர், சகோதரன் டீட்ஸ்மேன் நமக்கும் அப்படித்தானே? [சகோதரர்களும் மற்றவர்களும் “இல்லை” எனறு கூறுகின்றனர்—ஆசி.] எல்லாக் காரியங்களும் நாம் எடுத்துக்கொள்ளும் விதத்தில்தான் உள்ளன. 6 தெற்கில் அற்புதமான கூட்டங்கள் நடைபெற்றிருந்தன! ஆனால் சில நாட்களுக்கு முன்னர் தான் என்னால் பேச முடிந்தது. நான் தொடர்ந்து, நான்கு மாதங்களாக பிரசங்கித்தேன், மேலும் குசுகுசுவென்று மெல்லப் பேசுவதற்குக் கூட போதிய அளவு குரல் எனக்கு இல்லாதிருந்தது. உங்களுக்குத் தெரியுமா, எனக்கு என்ன தேவையாயிருந்ததோ, அதை என்னுடைய மனைவியிடம் ஒருவிதமான சைகைகளின் மூலம் தெரிவிக்க வேண்டியதாயிற்று, அது ஒரு விதமான…ஆகவே அதன்பிறகு, இங்கே திரும்பி வந்தபோது, இங்கே நமக்கு ஒருவிதமான மாய்மாலமான சீதோஷ்ண நிலை உண்டாயிருந்து வருகிறபடியால், (ஏன், ஒரு நாள் குளுமையாக இருக்கின்றது, அடுத்த நாள் வெப்பமாக இருக்கிறது), ஆகவே பண்டைய கால ஒரு விஷக் காய்ச்சல் எனக்கு வந்துவிட்டது. இரண்டொரு நாட்களுக்கு முன்னர் நான் குணமாகி, மீண்டும் வேலைகளை செய்யத் துவங்கினேன். எனவே அவர் நம்மிடத்தில் வைத்துள்ள எல்லா நன்மைக்காகவும், கிருபைக்காகவும், மேலும்—மேலும் அவர் எவ்வளவு நல்லவராக இருந்து வருகிறார் என்பதற்காகவும், நாம் நல்ல கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அங்கே அற்புதமான கூட்டங்கள் நடைபெற்றன, கர்த்தர் நம்மை அதிகமாகவும், அபரிமிதமாகவும் ஆசீர்வதித்தார். 7 மேலும் கடந்த இரவு, ஏறக்குறைய நள்ளிரவில், சகோதரன் உட்ஸ் அவருடைய வீட்டிற்கு என்னை அழைத்தார், அங்கு சகோதரன் ஆர்கன்பிரைட் தொலைபேசியில், என்னை சுவிட்சர்லாந்திற்கு புறப்பட்டு வரும்படி விரும்பி அழைத்தார். ஆகவே, ஒரு வயோதிகனுக்கு நடைபெறுகின்ற இவ்வளவு காரியங்களும் மிகவும் சிரமமாக உள்ளன. 8 ஆகவே, இப்பொழுது, நம்முடைய அடுத்த கூட்டம் இன்டியானாபோலீஸிலுள்ள காடில் கூடாரத்தில் அடுத்த மாதம் பதினொன்றாம் தேதி துவங்குகிறது. இந்தியானாபோலீஸிலுள்ள காடில் கூடாரத்தில் பதினொன்றிலிருந்து பதினைந்து வரையாகும். மேலும் அதன்பிறகு, அங்கிருந்து, மின்னியாவிற்கு-…மின்னியாபோலீஸ்; இன்டியானாபோலிஸிலிருந்து மின்னியாபோலிஸிற்கு, கிறிஸ்தவ வர்த்தக புருஷர்கள் இருக்குமிடத்திற்கே. 9 இப்பொழுது சகோதரன் நெவில் என்னை தொலைபேசியில் அழைத்தார் என்று நான் நினைக்கிறேன், மேலும் நான் என்னுடைய…பாராட்டுதல்களை அவருக்கும் மற்றும் நேற்று முன்தினம் நான் நடத்தின அந்த அடக்க ஆராதனையில் எனக்காக பாடின நெவிலின் மூவர் பாடற் குழுவுக்கும் தெரிவிக்க விரும்பியிருந்தேன். திரு. லிட்டிக் மகிமைக்குச் சென்றுவிட்டபோது, லிட்டிக் குடும்பத்தில், பாடகர்களே இல்லை; எனவே நான் சகோதரன் நெவிலைக் கேட்டேன். நான் நிச்சயமாக…அவருடைய மகனை, நான் அவனை இங்கு காணவில்லை; மேலும் அவன் ஒரு வளர்ப்பு மகன் என்று நான் பிறகு கண்டுகொண்டேன். இரட்சிக்கப்படாத, தன்னுடைய தந்தை மரித்துக்கொண்டிருக்கிறார் என்று அறிந்து, என்னை கூப்பிடுவதற்காக என் வீட்டிற்கு ஓடி வந்தான், அவர் முன்னரே…அவனுடைய தந்தை மரிப்பதற்கு முன் இரட்சிக்கப்பட்டார். அந்தப் பையன் செய்த மிகப்பெரிய காரியம் என்னவென்றால், தன் தந்தை மரிப்பதற்கு முன்பாக அவருக்காக ஜெபிக்க யாரையாவது அழைக்க ஓடி வந்ததே ஆகும். நெவிலின் மூவர் பாடல்குழுவினர் அங்கு வந்து அவர்களுக்காக உண்மையாகவே மிகவும் அழகாகப் பாடினர். 10 மேலும், சகோதரன் நெவில் இன்று காலையிலும் இன்று மாலையிலும் கூட நான் பேச முடியுமா என்று என்னைக் கேட்டார். எனவே வேத வசனம், “நீங்கள் மிகுதியாய்…கேளுங்கள்” என்று கூறுகின்றதை, நீங்கள் கவனியுங்கள். ஆகவே சகோதரன் நெவில் அந்தக் காரியங்களின் பேரில் நிச்சயமாகவே, மிகவும் வேதபூர்வமாக இருக்கின்றாரே! ஆகவே நான் என்னால் இயன்ற வரை சிறந்த முறையில் செய்வேன். 11 இப்பொழுது, நான் இந்தக் காலை கூறினேன், இது அன்னையர் தினமாக இருப்பதால், நாங்கள் சிறு பிள்ளைகளிடம் பேச விரும்புகிறோம். இந்த காலை சிறு பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வேளையாக இருக்கும் என்று நான் எண்ணினேன். இப்பொழுது அன்னையர் தினம் என்று நான் நினைப்பதோ… 12 இப்பொழுது, நமக்குத் தெரிந்தவரை, பூமியில் ஒரு உண்மையான, அசலான தாயைவிட இனிமையானது வேறெதுவுமே இல்லை. தேவன் தாமே ஒரு உண்மையான, ஒரு உண்மையான தாயை, அவளுடைய தீரமான ஆத்துமாவை ஆசீர்வதிப்பாராக. ஆனால் நாம் “தாய்” என்று—என்று அழைக்கப்படுகின்ற மிக அதிகமான பதிலாள்களை இன்றைக்கு நாம் பெற்றுள்ளோம், அது ஒரு தாயல்ல; அவர்கள் பிள்ளைகளைப் பெற்றுள்ள ஸ்திரீகளாயிருக்கிறார்கள், ஆனால் தாயாக அல்ல. பண்டைய நாகரீகமுடைய தாயானவள் தன்னுடைய குடும்பத்தை பேணிக் காக்கின்ற ஒருவளாய் இருக்கிறாள், மேலும் அவள் இந்த ஓய்வறைகள், நடனங்கள், முழு இரவும் புகை பிடித்து, குடித்துவிட்டுக் கிடந்து, உள்ளே வர மாட்டாள். அவள் அன்னை என்ற புனிதமான பெயருக்கு தகுதியானவள் அல்ல. ஒரு பிள்ளையை வளர்க்கின்ற ஒரு ஸ்திரீயாக மாத்திரமே அவள் இருப்பாள். அவ்வளவுதான்; ஆனால் ஒரு தாய் அல்ல, ஏனெனில் தாய் என்பது அதற்கு ஒரு வித்தியாசமான அர்த்தத்தைக் கொண்டதாய் இருக்கின்றது. இப்பொழுது நான்—நான் நினைக்கிறேன் நீங்கள்… 13 இப்பொழுது, அன்னையர் தினத்தில், நானே நல்ல உண்மையானதை வெளிப்படுத்த விரும்புகிறேன். அங்கே உட்கார்ந்திருக்கிற வயதான தலை நரைத்த தாயார் எனக்கும் உண்டு. ஆகவே, ஒரு நாள் சரி; ஆனால் ஒவ்வொரு நாளும் அன்னையர் தினமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், வருடத்திற்கு ஒரு முறை அல்ல. இந்த அன்னையர் தின காரியங்கள் இப்பொழுது நடந்து கொண்டிருப்பதற்குக் காரணம்… 14 நாம் குறைந்த நபர்களாய் இருப்பதை நான் காண்கிறேன், நாம் யாவரும் ஒருவரையொருவர் அறிவோம். நாம் சொந்த சபையாயிருக்கிறோம், அதன் காரணத்தால்தான் நாம் இந்த விதமாகப் பேசப்போகின்றோம். 15 ஒரு தாயானவள், ஒரு உண்மையான தாய், ஒவ்வொரு நாளும் மதிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன், அது உண்மை. மேலும், ஆனால் இந்த நாளை அவர்கள் அன்னையருடைய தினம் என்று அழைக்கிறார்கள், இது உலகத்தில், பணத்திற்காக ஜனங்களை வடிகட்டும் அர்த்தமற்ற ஒரு பெரிய வியாபாரமேயல்லாமல் வேறொன்றும் இல்லை. மேலும் இது தாய்க்கு ஒரு அவமானமாக இருக்கிறது, வருடத்திற்கு ஒருமுறை ஒரு அன்னையின் தினம் அனுசரித்தல், “பாருங்கள், நாம் அவளைச் சென்று பார்க்கிறதில்லை, ஆனால் நாம் அவளுக்கு ஒரு சிறிய பூச்செண்டை அனுப்பிவிடுவோம், அதுவே அதற்கு தீர்வாகும்.” அது தாய்க்கு செய்யும் முறையல்லவே! என்னே, பரிதாபம்! ஒரு உண்மையான தாய் உன்னை…வளர்த்த ஒரு ஸ்தீரியாய் இருக்கிறாள், நீ அவளை நேசிக்கிறாய், நீ அவளைப் பார்த்து எல்லா நேரத்திலும் அவளுடன் பேசுகிறாய். நீ உன்னுடைய அன்பை எல்லா நேரத்திலும் அவளுக்கு வெளிப்படுத்துகின்றாய், வருடத்தில் ஒரு நாள் மாத்திரம் அல்ல. 16 ஆனால் என்னுடைய சிறு நாடகத்தை நான் துவக்குவதற்கு முன், நான் இதை வெளிப்படுத்திக் கூறவும், புதுப்பிக்கவும்…விரும்புகிறேன். உங்களில் சிலர், உங்களில் அநேகர் இறந்துவிட்டனர், இது கூறப்பட்டப் பிறகு அநேகர் மரித்துப்போய்விட்டனர். இது 1933-ல் கூறப்பட்டது. 17 சில இரவுகளுக்கு முன்பு அந்த ஸ்தீரி அந்த மனிதனை கொன்றதை செய்தித்தாளில் நீங்கள் படித்தீர்களா? அவனைப் பாதையில் கிடத்தி, அவன் அந்தப் பாதையில் கூழாகும் வரை தன்னுடைய காரை முன்னும் பின்னுமாக அவன் மீது ஓட்டினாள். அப்பொழுது அவர்கள் கூறினதோ, அந்த—அந்த வழக்கறிஞர்கள் மற்றும் பலர், “அது உன் மனசாட்சியைக் குற்றப்படுத்தவில்லையா?” என்று கேட்டனர். அதற்கு அவள், “ஸ்திரீகள் கையாளப்படுகின்ற விதத்தைப் பார்த்து தேவனும் நானும் சோர்ந்துபோகிறோம்” என்று கூறினாள். ஹூ! ஆம், அவளோ மற்றவர் பின்பற்றக் கூடியவளாயிருந்தாள். அது உண்மை. “சோர்ந்து போகிறோம்.” எவ்வளவு கீழ்த்தரமாக இந்த தேசமானது செல்லும்? தெய்வீக நியாயத்தீர்ப்பு இல்லாமல் எவ்வளவு தூரம் நம்மால் செல்ல முடியும் என்று, நான் ஆச்சரியப்படுகிறேன்? “தேவனும் நானுமா”? அவர் மேல் சுமத்தப்பட்ட எல்லா அர்த்தமற்றதிற்கும் தேவன் குற்றவாளியானால், அவர் தேவனாக இருக்க முடியாது, அவ்வளவுதான். “தேவனும் நானுமா”? என்னே! அதைப் போன்றதோடு தேவனுக்கு எந்தவித சம்பந்தமும் கிடையாது. அவள் அப்பால் நரகத்தில் இருப்பதை யூகித்தால், அப்பொழுது எப்படி அவளால் அதைக் குறித்து சிந்திக்க முடியும்? ஓ! 18 அமெரிக்கா! இப்பொழுது நீங்கள் நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் இதை எழுதிவைத்திருக்கவில்லையென்றால், இதை எழுதிக்கொள்ளுங்கள். இது என்னுடைய முன்னுரைத்தல். புரிகிறதா? 1933-ல், நாங்கள் இங்கே முன்பு ஆராதனைகளை நடத்திக்கொண்டிருந்தபோது, அந்த பழைய, இப்பொழுது அங்கே கிறிஸ்துவின் சபை என்பது உள்ளது என்று நான் நினைக்கிறேன், முன்பு அந்த பழைய…சகோதரன் நெவில், அது அங்கே, நேராக கீழே உள்ளது. சார்லி கார்ன் அங்கே வசித்து வந்தார். அது என்னவாயிருந்ததென்றால்…இங்கே மேய்க்ஸ் தெருவில் உள்ள ஒரு அனாதை விடுதி. 1933-ல், அப்பொழுதுதான் ஒரு ஃபோர்ட் காரை வாங்கினேன், அதை நான் அன்று காலை கர்த்தருக்கு அர்ப்பணித்தேன். அப்பொழுது, நான் வீட்டை விட்டு புறப்படும் முன் ஒரு தரிசனம் கண்டேன். நான் அதை ஒரு பழைய மஞ்சள் நிற காகிதத்தில் எழுதி வைத்தது, இன்னும் என் வேதாகமத்தில் உள்ளது. கடைசி மணி நேரம் வருவதை நான் கண்டேன். 19 மேலும், 1933-ம் வருட காரின் தோற்றம் எவ்விதம் இருந்தது என்பதை உங்களில் எத்தனைப் பேர் நினைவில் கொண்டுள்ளீர்கள்? ஓ, அது இந்த விதமாக வடிவமைக்கப்பட்டு, பின் பாகத்தில் உதிரி சக்கரம் மாட்டப்படத்தக்கதாக, சற்று சரிவாக இருக்கும். “கர்த்தருடைய வருகைக்கு முன்னர் கார்கள் முட்டை வடிவில் உருவமைக்கப்படும்” என்று நான் ஒரு தரிசனத்தில் கண்டேன். அந்த முன்னுரைத்தலை எத்தனைபேர் நினைவில் கொண்டுள்ளீர்கள்? இங்கு யாராவது இருக்கின்றீர்களா? சகோதரன் ஸ்டீவர்ட் மரித்துவிட்டார். நான் யூகிக்கிறேன்…அது நாங்கள் இங்கே 1933-ல் ஆராதனைகளை நடத்திக் கொண்டிருந்திருந்ததாயிருந்தது. அப்பொழுதிலிருந்து, இப்பொழுதுவரை ஏறக்குறைய எல்லாரும் மரித்துப்போய்விட்டனர் என்று நான் யூகிக்கிறேன். 20 மேலும், “ஸ்திரீகள்தான், அமெரிக்காவில் அவர்களுடைய முதல் தெய்வமாக இருப்பார்கள்” என்று நான் முன்னறிவித்தேன். அது அப்படித்தான் இருக்கின்றது. ஹாலிவுட்டை மாதிரியாகக் கொண்டே எல்லாக் காரியங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றது. அங்கே…உங்களிடம் கூறி அதிர்ச்சியடையச் செய்யும் எப்.பி.ஐ துப்பறியும் துறையினரின் கோப்பில் உள்ள பதிவுகள் என்னிடம் உள்ளன, இந்த திரைப்பட நட்சத்திரங்கள் பேரிலுள்ள அவதூறுகள், அவர்களில் ஒருவரும் மீந்திராமல், என்னே விபச்சாரிகளாயிருக்கிறார்கள். எப்.பி.ஐ துப்பறியும் துறை சமீபத்தில்தான் அதைக் கண்டுபிடித்து வெளிக்கொணர்ந்தது. அவர்களுடைய சொந்த ஆவணக் குறிப்புகளில் உள்ளவை என்னிடம் இருக்கின்றன. ஆகவே அந்த திரைப்பட நட்சத்திரங்களும், மற்ற எல்லாரும் ஒரு மனிதனுடன் இருபத்தைந்து, ஐம்பது டாலர்களுக்கு ஒரு இரவை கழிப்பார்கள், அங்கே ஒரு மனிதன் ஹாலிவுட்டிலும், மற்ற தனியார் வீடுகளிலும் எல்லாவிடங்களிலும் உள்ள இம்மக்களிடம் ஆட்களை அனுப்ப இருக்கின்றான் என்று அவர்கள் கண்டுபிடித்து நிரூபித்துள்ளனர். அதைத்தான் நாம் தொலைக்காட்சியில் காண்கிறோம், மற்றும்—மற்றும் அங்கே திரைகளிலும் மற்ற காரியங்களிலும் இவை வருகின்றன, நம்முடைய பிள்ளைகள் அதை வழிகாட்டி என்று அழைக்கட்டும். பிறகு அதை தாய் என அழைக்கலாமா? அது ஒரு தாய் என்பதிலிருந்து மிகவுமாக அகன்று காணப்படுகின்றது. அது அசுத்தமாயுள்ளது. அது முற்றிலும் உண்மை. மேலும் அதேசமயத்தில் அவர்கள் இந்த நாளின் ஒழுங்கு முறையாக அமைத்துள்ளனர். நாம் அவர்களை அனுமதிக்கிறோம்…அவர்கள் உடுத்துகின்ற பலவிதமான உடைகள், அமெரிக்க ஸ்திரீகள் அவர்களைப் போலவே உடை அணிகின்றனர், மற்றும் ஒவ்வொரு காரியமுமே. நிச்சயமாக. ஆகவே அமெரிக்காவின் தெய்வம் ஒரு ஸ்திரீயே ஆகும். யெகோவா அல்ல; அதிலிருந்து அவர்கள் புறம்பே சென்றுவிட்டனர். இப்பொழுது தாயைக் குறித்து அல்ல, இப்பொழுது அதைச் சற்று ஒதுக்கி வையுங்கள், ஏனென்றால் அந்த புனிதமான ஒரு காரியத்தைக் குறித்து நாம் பேசப் போகிறோம்; ஆனால் நான் ஒரு ஸ்திரீயை குறித்துதான் பேசுகிறேன். 21 மேலும், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், மாபெரும் முழு அழிவிற்கு முன்னர் நான் முன்னுரைக்கிறேன், இதை கர்த்தர் என்னிடம் கூறினதாக நான் கூறவில்லை, ஆனால் இப்பொழுதோ அல்லது ’77-ம் வருடத்திலோ அல்லது அதற்கிடையிலோ ஏதோ ஒன்று சம்பவிக்கும் என்று நான் நம்புகிறேன். அது சரியாக இந்த மணி வேளையிலே வரலாம். ஆனால் இப்பொழுதிலிருந்து ’77-ம் வருடத்திற்குள் இருக்கும், இப்பொழுதிலிருந்து ’77-ம் வருடத்துக்குள் இடையில், ஒரு பெரிய அழிவு அல்லது ஒரு முழு அழிவு இந்த பூமிக்கு ஏற்படலாம் என்று நான் முன்னறிவிக்கிறேன். 22 இதை நான் 1933-ல் முன்னறிவித்தேன், ஸ்திரீகளின் ஒழுக்க நெறி குறைந்துகொண்டே போகும் என்றும், தேசமும் விழுந்துகொண்டே இருக்கும் என்றும், ஸ்திரீ போற்றதலுக்குரிய நிலையை அடைவாள், அதுவரை தாயைப் போன்ற ஒன்றை, அல்லது தாயினிடம் அவர்கள் சார்ந்திருப்பர் என்றும் நான் முன்னுரைத்தேன். இன்னும் கொஞ்ச காலம் கழித்து, “அமெரிக்கா ஒரு ஸ்திரீயினால் ஆளப்படும்.” அதைக் குறித்துக் கொண்டு சரியாய் இருக்கின்றதா என்று பாருங்கள். ஒரு ஸ்தீரி ஜனாதிபதியின் ஸ்தானத்தையோ அல்லது ஒரு மகத்தான, உன்னத அதிகாரத்தையோ அமெரிக்காவில் பெறுவாள். 23 பெண்மணிகளே, நான் இதை மரியாதையுடன் கூறுகிறேன், ஒரு ஸ்திரீயானவள் சமையல் அறையை விட்டு வெளியேறுவாளானால், அவள் தன்னுடைய ஸ்தானத்திலிருந்து வெளியே சென்றுவிட்டாள். அது உண்மை. அவள் அந்த இடத்தைச் சார்ந்தவளாகத்தான் இருக்கின்றாள். அதற்கப்பால், அவளுக்கு வேறு இடம் கிடையாது. ஆகவே இப்பொழுது, நான் அவர்கள் பேரில் கண்டிப்பாகக் கூறவில்லை, ஆனால் வேதம் என்னவென்றும், சத்தியம் என்னவென்பதை மாத்திரமே நான் கூறுகிறேன்…முன்பெல்லாம் புருஷனானவன் வீட்டிற்கு தலைவனாய் இருந்து வந்தான், ஆனால் அது வேதாகம நாட்களில் அவ்வாறே இருந்து வந்தது. அவன் இப்பொழுது ஒன்றுமேயில்லை. அவன் பொம்மையாக, அல்லது அவன் ஒரு…அல்லது குழந்தையை பராமரிப்பவனாக அல்லது அதைப் போன்ற ஏதோ ஒன்றாக இருக்கிறான். ஆகவே இப்பொழுது, இல்லை, அவர்கள் ஒரு நாயை பராமரித்து வளர்க்க விரும்புகின்றனர், குடும்பக் கட்டுப்பாட்டைக் கைக்கொண்டு, ஒரு சிறிய வயதான நாயை தங்கள் கரங்களில் எப்போதும் ஏந்திக்கொண்டிருக்கின்றார்கள், ஏனென்றால் அப்பொழுது தான் அவர்களால் இரவு முழுவதும் சுற்றிக்கொண்டிருக்க முடியும். 24 நான்—நான் தாயைக் குறித்து பேசிக்கொண்டிருக்கவில்லை. தேவன் அவர்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது தேசத்தை ஒன்றாக, பாதிவழியில், பிணைத்துக் கொண்டிருப்பது அதுவேயாகும், ஒரு உண்மையான, நல்ல, புனிதமான, தேவனால்-இரட்சிக்கப்பட்ட தாயாகும். அது உண்மை. 25 ஆனால் நம்முடைய ஸ்திரீகள் எவ்வளவு கீழ்த்தரமாயுள்ளனர் என்பது வெட்கத்திற்குரியது! செய்தித்தாளிலிருந்து ஒரு துண்டை நான் வைத்துள்ளேன், கடந்த இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வந்த இதை நான் வெட்டி எடுத்தேன், அது “அமெரிக்க பெண்களின் நல்லொழுக்கம் எங்கே போயிற்று, அதாவது, ஆறு மாதங்கள் கடல் கடந்து இருந்தபோது, ஐந்தில் நான்கு இராணுவ வீரர்கள் தங்கள் மனைவிகளிடமிருந்து விவாகரத்து செய்யப்பட்டனர், ஆகவே அவர்கள் வேறு மனிதனை மணந்துகொண்டனர்” என்று கூறப்பட்டிருந்ததே? ஆகவே அவர்கள் அயல்நாடுகளிலிருந்து திரும்பி வரும் வரை இவர்களால் காத்திருக்க முடியவில்லை, அங்கே போர்க் களத்தில் இராணுவ வீரர்கள் மரித்துக்கொண்டிருந்தனர்! அப்படிப்பட்டவள் அந்த புனிதமான பெயராகிய தாய் என்று அழைக்கப்படுவதற்கு தகுதியற்றவள் ஆவாள். இல்லை, அது இல்லை. ஆதலால் “ஸ்திரீயை-வெறுப்பவன்” என்று என்னை எப்பொழுதும் அழைக்கப்பட்டேன், ஆனால் நான் அவ்வாறு இல்லை. ஒரு ஸ்திரீ என்பவள் விசேஷமாக, ஒரு அற்புதமானவள், மற்றும் ஒரு தாய் என்று நான் எண்ணுகின்றேன். ஆனால் அவர்கள் தங்கள் ஸ்தானங்களில் இருக்க வேண்டுமேயன்றி, ஒரு மனிதனின் ஸ்தானத்தையோ, தேவனின் ஸ்தானத்தையோ எடுத்துக்கொள்ளக் கூடாது. 26 இக்காலை ஒரு பரிசுத்த சபை ஸ்தாபனம், “ஒரு தாய் பரலோகத்தின் நட்சத்திரங்களை ஆளுகின்றாள்” என்றும், இன்னும் மற்றவைகளைக் கூறினதையும் நான் கேட்டேன். கத்தோலிக்கர்கள் கன்னி மரியாளின் மீது அவ்வாறு செய்வதை என்னால் யூகித்துப் பார்க்க முடிகிறது, அது, மரித்த ஸ்திரீகளை வணங்குதல், பரிசுத்த சிசிலியா, இன்னும் அதுபோன்ற மற்றவைகள், அது ஒரு மரித்த ஆவிகளோடு தொடர்புகொள்ளும் ஒரு உச்சக்கட்டமான நிலையாகும். அவ்வளவுதான். மரித்தவர்களோடு பரிந்து பேசும் எதுவும் ஒரு ஆவியுலக தொடர்பு கோட்பாடாகும். எனவே, தேவனுக்கும் மனிதனுக்கு ஒரே ஒரு மத்தியஸ்தர் தான் உண்டு, அது இயேசு கிறிஸ்துவாகும். அது உண்மை. தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே மத்தியஸ்தராயிருக்கிற ஒரே ஒருவரான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கு அப்பாற்பட்டு எந்த ஒரு பரிசுத்தவானோ, மற்ற காரியமோ கிடையாது. ஆனால் சபைகள் பிரசங்க பீடத்திற்கு பின்னால், கிறிஸ்துவிடமிருந்து எல்லா புனித தன்மைகளையும் எடுத்து ஒரு தாயின் மேல் வைப்பதை நான் காண்கையில், எல்லா புனிதத் தன்மையும் எடுக்கப்படுகின்றது, பிறகு—பிறகு அவர்கள் ஆரம்பிக்கின்றனர், அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. 27 ஆதலால், ஆனால் ஒரு உண்மையான தாய் இருக்கிறாள். தேவனுக்கு ஸ்தோத்திரம்! ஒரு மாய்மாலக்காரனை நீங்கள் காண்பதுபோல; அங்கே சரியான ஜீவியம் செய்கின்ற ஒரு உண்மையான கிறிஸ்தவனும் இருக்கின்றான். ஆதரவான காரியம் ஒன்று உங்களுக்கு இருக்குமானால் எதிரான காரியமும் உங்களுக்கு இருக்கும். அது முற்றிலும் உண்மை. இப்பொழுது, அதைப் போன்ற ஒரு தாய், அதைப் போன்ற ஒரு பிள்ளை, அதைக் குறித்து வேதத்தில் உள்ளதை நாம் இப்பொழுது பேசப் விரும்புகின்றோம். 28 இப்பொழுது எத்தனை சிறு பையன்கள் மற்றும் பெண்பிள்ளைகள் இக்காலை வேளையில் இங்கே நம்மிடையே உள்ளனர்? நேற்று சகோதரன் நெவிலுடைய ஒலிபரப்பை நீங்கள் கேட்டிருந்தால்…நான் உங்களுடன் பேசுகையில் எத்தனை சிறு பையன்கள் மற்றும் பெண்பிள்ளைகள் முன்னால் உள்ள ஆசனங்களில் வந்து உட்கார விரும்புகிறீர்கள்? நீங்கள் இங்கு வந்து உட்கார விரும்புகின்றீர்களா? இங்கே ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து இருக்கைகள் உள்ளன; இங்கே ஒன்று, ஆறு உள்ளது, இங்கே சிறு இருக்கைகள் உள்ளன. நீங்கள் முன்னால் வர விரும்புகிறீர்களா, உங்களுடைய தாய் இல்லாமல் போக முடிந்த குட்டி நபர்களாகிய சிலர், இங்கே வர விரும்புகிறீர்களா? நீங்கள் அதிகமாக வரவேற்கப்படுகிறீர்கள்! தாய்மார்கள் வருகிறார்கள்…[சகோதரன் நெவில், “இன்னும் இருக்கின்றனர்; அவர்களில் பெரும்பாலானோர் ஞாயிறு பள்ளி அறையில் இருக்கின்றனர்” என்று கூறுகிறார்.—ஆசி.] ஓ, அவர்கள் ஞாயிறு பள்ளி அறையில் இருக்கின்றனர். பாருங்கள், அது அருமையானது. நாம் சில நிமிடங்கள் காத்திருந்து, பேசிக்கொண்டிருப்போம், இன்னும் சில நிமிடங்களில் அவர்கள் வெளியே வந்துவிடுவார்கள். ஆகவே அந்த சிறிய கறுப்பு, நீலம் மற்றும் பழுப்பு நிறக் கண்களை, இங்கே ஒன்று கூட்டி அவர்கள் ஒவ்வொருவரிடமும் நாம் பேசுவோம். இப்பொழுது, எத்தனை பேர் கர்த்தரை நேசிக்கின்றீர்கள்? “ஆமென்” என்று கூறுங்கள். [சபையார், “ஆமென்!” என்கின்றனர்.] சரி. 29 இப்பொழுது நான் தாய்மார்களிடமும் பிள்ளைகளிடமும் பேச விரும்புகிறேன், இது அவர்களுக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது. 30 இன்றிரவு, கர்த்தருக்குச் சித்தமானால், நான் இயேசு செய்த முதல் அற்புதத்தைக் குறித்தும், எப்படி, எந்த வல்லமையினால் அது செய்யப்பட்டது, அவர் அதைச் செய்கையில் என்ன செய்தார்…என்பதைக் குறித்தும் நான் பேச விரும்புகிறேன். அவர் முதலாவதாக என்ன அற்புதத்தை செய்தார் என்பது எத்தனைப் பேருக்கு தெரியும்? நாம் எல்லோருமாக சேர்ந்து அதைச் சொல்வோம்: “தண்ணீரை திராட்சரசமாக மாற்றினார்.” அது உண்மை, அவர் செய்த முதல் அற்புதம். இப்பொழுது, கர்த்தருக்குச் சித்தமானால். இந்தக் காலை, நான் இதைப் படித்துக் கொண்டிருந்தபோது, என் சிந்தனைக்கு இது வந்தது. 31 இந்தக் காலையில், நாம் பெற்றுள்ள நம்முடைய நல்ல நண்பரான, திரு. மற்றும் திருமதி யெக்கர் அங்கே பின்னால் உள்ளதை நான் காண்கிறேன், அங்கு உள்ளார் என்று நான் நினைக்கிறேன். நான் இந்தப் பக்கமாக திரும்புகையில் அவர்களை கவனிக்க நேர்ந்தது. அன்றொரு நாள் நான் ஒரு பரிசோதனையை செய்துகொண்டேன்; அயல்நாட்டு பணியைக் குறித்த பரிசோதனைக்காக என்னை நான் தயாராக வைத்திருக்க வேண்டும். மேலும், நான் வெளியே வந்தபோது, அங்கே அலுவலகத்தில்—அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த திரு. மற்றும் திருமதி யெக்கரை நான் சந்தித்தேன். 32 லூயிவில்லில் உள்ள, மருத்துவர் ஷோன், மிக அருமையான ஒரு கிறிஸ்தவ சகோதரன். அங்கே உண்மையாகவே தேவனில் விசுவாசம் வைத்து தன் நம்பிக்கையை அங்கே வைத்த, ஒரு உண்மையான மனிதனை நான் சந்தித்தேன் என்று நான் உங்களுக்கு கூறுகிறேன். என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நான் உங்களுக்குச் சொல்லுவேன். பிரசங்கிகளைக் காட்டிலும் அதிகமான மருத்துவர்கள் தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் கொண்டுள்ளதை நான் கண்டறிகிறேன். அது உண்மை. நீங்கள் அவர்களிடம் பேசிப் பாருங்கள். நான் “நிச்சயமாகவே” என்று கூறினேன். மேலும் அவர்…நான் புறப்பட ஆயத்தமானபோது, அவர் என் கையைப் பிடித்துக்கொண்டு, அவர், “சகோதரன் பிரான்ஹாம், மனித வர்க்கத்திற்கு என்னால் செய்ய முடிந்ததைக் காட்டிலும் நீர்தான் அதிகமாகச் செய்கின்றீர்” என்றார். அவர் தொடர்ந்து, “அது உண்மை” என்றும் கூறினார். “என்னால் தொடக்கூட முடியாத ஜனங்களுக்கு உம்மால் உதவி செய்ய முடிகிறது” என்றார். அவர் தொடர்ந்து, “அது உண்மையே” என்றும் கூறினார். 33 நான், “பாருங்கள், நிச்சயமாகவே, நீர் அதற்கு தையல் போடலாம், அல்லது ஒரு எலும்பைப் பொருத்தலாம், அல்லது அதைப் போன்ற ஏதோ ஒன்றைச் செய்யலாம். ஆனால் தேவனே சுகமளித்தலைச் செய்கின்றார்” என்றேன். 34 அவர், “அது சரியே” என்றார். ஆமென். ஓ, பரந்த மனப்பான்மையுடைய, விவேகமான சிந்தனையுள்ள ஜனங்களையே நான் காண விரும்புகிறேன். நான் அறுவை சிகிச்சையைக் குறித்தும், மற்றும் மருத்துவ ரீதியான மருத்துவரைக் குறித்தும், மற்றும் உடலியக்கவியல் மருத்துவரைக் குறித்தும், தசைபிடி நீக்கும் மருத்துவரைப் குறித்தும், தெய்வீக சுகமளித்தலைக் குறித்தும், எல்லாவற்றையும் கூட்டி நினைத்துப் பார்த்தால், அதில் ஏதாவது ஒன்று எவருக்காவது உதவி செய்ய முடிந்தால், நான் அதன் சார்பில் இருக்கிறேன். மேலும் ஒரு மருத்துவர் ஒரு பிரசங்கிக்கு கண்டனம் தெரிவிப்பாரானால்; அந்த பிரசங்கியும் ஒரு மருத்துவரைக் கடிந்துகொள்வாரானால்; ஒரு தசைபிடியை நீக்கும் மருத்துவர் ஒரு அறுவை சிகிச்சை செய்பவரை கடிந்து—கடிந்துகொள்வாரானால்; அந்த அறுவைச் சிகிச்சை செய்பவர் ஒரு மருத்துவ ரீதியான மருத்துவரைக் கடிந்துகொள்வாரானால், அங்கே ஏதோ ஒரு சுயநலம் கொண்ட உள்நோக்கம் எங்கேயாகிலும் இருக்கும், நீங்கள் இதைக் கற்பனை செய்துப் பார்க்கலாம். அது உண்மை, ஏனெனில் அவர்களில் ஒவ்வொருவரும் யாரோ ஒருவருக்கு உதவியாக இருக்கின்றனர் என்று நிரூபித்துள்ளனர். அது முற்றிலும் சரி. 35 இப்பொழுது அதைக் குறித்த காரியம் என்னவெனில், நம்முடைய நோக்கங்கள் சரியாக இருந்து, நம்முடைய இருதயங்கள் ஜனங்களுக்காக சரியாக இருக்கும் பட்சத்தில், நாமெல்லாரும் ஒன்று சேர்ந்து நம்முடைய சக மனிதனுக்கு, வாழ்க்கையை இலகுவாக்கிக்கொள்ள உதவ வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். மேலும் அப்பொழுது உங்கள் நோக்கங்கள் சுயநலம் கொண்டதாக இல்லாமல், இவையெல்லாவற்றையும் இலவசமாக அளிக்கின்ற தேவனுக்கு துதியை செலுத்துகிறீர்கள். ஆமென். ஆம், ஐயா. ஓ, நாம் எந்த சுயநலத்தையும் எங்கேயும் கொண்டிருக்கக் கூடாது; அது பரிபூரணமாக இருக்க வேண்டும். 36 உடலியக்க மருத்துவர் இதற்கு உதவி செய்ய முடிந்தால், தசைப்பிடிப்பை நீக்கும் மருத்துவர் இதற்கு உதவி செய்தால், அறுவை சிகிச்சை இந்த ஒன்றுக்கு உதவி செய்தால், ஏதோ ஒன்று அதற்கு உதவிசெய்யுமானால், அதைக் குறித்த எல்லாவற்றிற்காகவும் நாம் ஜெபிப்போமாக. ஆமென், தேவன் தம்முடைய அருமையான ஜனங்களை சுகமாயும், சந்தோஷமாகவும் இருக்க உதவி செய்வார். ஏனெனில், நாம் நீண்ட காலம் இங்கே இருக்கமாட்டோம், சில நாட்கள் மாத்திரமே, எங்கேயோ செல்லும் பதையில், நாம் சென்று கொண்டிருக்கின்றோம். நாம் இங்கே இருக்கின்ற காலத்தில் ஒரு நல்ல நேரத்தைக் கொண்டிருப்பதற்காக, நம் வாழ்க்கையை சிறிது இலகுவாக்கிக்கொள்ள நாம் முயற்சித்துக்கொண்டிருக்கிறோம். ஆமென். 37 இப்பொழுது இந்த சிந்தனையின் பேரில், நாம் வேதாகமத்தை திறப்பதற்கு முன்பு, நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்தி, நம்முடைய அன்பான இரட்சகரிடத்தில் பேசுவோமாக. 38 எங்களுடைய அன்பான பரலோகப் பிதாவே, இந்த காலை வேளையில் உமது பிரசன்னத்தில் மிகுந்த தாழ்மையோடு நாங்கள் வந்து, இந்த பூமியின் மேல் இருந்த அல்லது எப்போதும் இருக்கப்போவதற்கான ஒவ்வொரு காரியத்திற்கும் மேலாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஏனென்றால், அவர் ஒருவர்தான் மனிதனையும், தேவனையும் ஒன்றாக இணைத்து தகுதியில்லாத ஏழைகளாகிய, தேவனற்ற அன்னியர்களாகிய, எங்களுடைய, தெரிந்துகொள்ளுதலின் மூலம்—மூலம், நாங்கள் எங்கள் சொந்த தெரிந்துகொள்ளுதலின்படி தேவனிடத்திலிருந்து, அவரிடத்திலிருந்து தூரமாக நடந்து சென்றுவிட்ட எங்களை ஒப்புரவாக்கினார். நாங்கள் தேவனுக்குப் பிரியமில்லாதவர்களாயும், பாவிகளாகவும், தேவனை விட்டு அகன்று, பாவிகளாயிருந்தபோது, அவர் மிகவும் நல்லவராக கீழே இறங்கி வந்து, அவர் தம்முடைய சொந்த இரத்தத்தைச் சிந்தினதின் மூலம், எங்களை பிதாவினிடத்தில் திரும்ப ஒப்புரவாக்கினார். 39 அவருக்காக நாங்கள் உமக்கு எவ்வளவாக நன்றி செலுத்துகிறோம்! ஆகவே இன்றைக்கு ஒரு மத்தியஸ்தராக, தேவனுக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள ஒரே மத்தியஸ்தராக, பூமியிலிருந்து மகிமைக்குச் சிந்தின தம்முடைய சொந்த இரத்தமாகிய மேடையின் மூலம் ஜெபத்தை தேவனுடைய சமுகத்தில் கொண்டு வரும் ஒருவராக அவர் நிற்கிறார். ஒரு தொழுவத்தில் பிறந்து, ஒரு களஞ்சியத்தின் வழியாக இந்த பூமிக்கு வந்தார். மரண தண்டனையின் மூலமாக இந்த பூமியை விட்டுச் சென்றார். இந்தப் பூமி அவரை விரும்பவில்லை. அவர் எங்களுடைய பாவங்களை அவர் தம்மேலே வைத்திருந்து, அவர் ஒரு பாவியாயிருந்தபடியால், பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பூமியும் அவரை விரும்பவில்லை. “இப்படிப்பட்ட ஒரு நபரிடமிருந்து தூர இருங்கள்!” என்று அவரை அவர்கள் புறக்கணித்தனர். அவருக்கு…பிறப்பதற்கும் ஒரு இடமும், அல்லது இறப்பதற்கு ஒரு இடமும் கூட இல்லாதிருந்தது. அவர் வானங்களுக்கும் பூமிக்கும் நடுவே தொங்கினார்; பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, பூமியும் அவரை ஏற்க முடியாதிருந்தது. மேலும், எப்படியாயினும், எங்களுடைய பாவத்திலிருந்து எங்களை இரட்சிக்க, எங்களுடைய வியாதியிலிருந்து எங்களைச் சுகமாக்க, நாங்கள் பூமியிலே தங்கியிருக்கையில் எங்களுக்கு சந்தோஷத்தையும், எங்களுக்கு ஒரு அழகான தங்குமிடத்தையும் கொடுக்க, அவர் மரித்தார். என்னே ஒரு இரட்சகர்! ஓ, அவருக்காக உமக்கு நாங்கள் எவ்வளவாக நன்றி கூறுகிறோம்! 40 ஓ தேவனே, எங்கள் இருதயத்தின் ஒவ்வொரு வந்தனமும் அவருக்கு, அவருக்கு மாத்திரமே ஊற்றப்படட்டும். எங்கள் உதடுகளிலிருந்து அல்லது இருதயத்திலிருந்து வருகின்ற ஒவ்வொரு மரியாதையும், ஒவ்வொரு ஆராதனையும், ஒவ்வொரு காரியமும், எல்லாவற்றிற்கும் தகுதியான, ஒரு நாள் சிங்காசனத்தில், தம்முடைய கையில் புத்தகத்தோடு அமர்ந்த, அவர் மேலே வைக்கப்படட்டுவதாக. முத்திரிக்கப்பட்டிருந்த அந்தப் புஸ்தகத்தைப் பார்க்கவும் அதை திறக்கவும் பரலோகத்திலும் அல்லது பூமியிலுள்ள எந்த மனிதனும் பாத்திரவானாக இல்லை. ஆகவே உலகத்தோற்றத்திற்கு முன்பாக அடிக்கப்பட்ட இந்த ஆட்டுக்குட்டியானவர் தாமே அதை அவர் கையிலிருந்து வாங்கி, முத்திரைகளைத் திறந்து அந்த—அந்த வார்த்தைகளை, ஜனங்களுக்கென திறந்தார். 41 ஆகவே, பிதாவே, அவருடைய பரிசுத்த ஆவியானவர் தாமே எங்களுடைய இருதயங்களை எல்லா இருளிலிருந்தும், எங்கள் நாவை எல்லா இழிவான, வெட்கக்கேடான காரியங்களிலிருந்தும் அவிழ்த்துவிட வேண்டும் என்றும், எங்கள் எல்லா பாவங்களையும் மன்னித்து, எல்லா இருளையும் எடுத்துப்போட்டு, இக்காலையிலே இன்றைக்கு எங்கள் இருதயங்களுக்குள்ளே அசைவாட வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கின்றோம். 42 மேலும் குறிப்பாக இந்த சிறு பிள்ளைகளை, தேவனே, தங்கள் அருமையான தாய்மார்களோடு அவர்கள் இங்கே உட்கார்ந்திருக்கையில் அவர்களை ஆசீர்வதியும். தேவனே, தாய்மைக்காக, உண்மையான ஸ்திரீகளுக்காக நாங்கள் உமக்கு எவ்வளவாக நாங்கள் நன்றி செலுத்துகிறோம்! இந்த எல்லா இருளான, விக்கிரகாராதனை, அசுத்தம் மற்றும் உலகத்தின் எல்லா சீர்கேடுகளின் மத்தியிலும் உண்மையான, அசலான தாய்மார்களை நாங்கள் பெற்றுள்ளோம். நாங்கள் அவர்களுக்காக உமக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம்! வாலிப மற்றும் வயதான, இருவரும் ஒரே மாதிரியான, உண்மையான தாய்மைக்காக, பிதாவே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். மேலும் தேவனே, நீர் ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கின்றோம். 43 இங்கே இந்தக் காலை வேளையில், எங்கள் சகோதர சகோதரிகள் அநேகர், தங்கள் அருமையான, பரிசுத்தமாக்கப்பட்ட தாய் திரைக்கு அப்பால் கடந்து சென்று, மரித்த நிலையில் இல்லாமல், என்றென்றைக்குமாக உயிரோடிருக்கின்றனர் என்பதன் அடையாளமாக வெள்ளை ரோஜாக்களை இல்லை வெள்ளை இளஞ்சிவப்பு நிற மலர்களை அணிந்து அமர்ந்துக் கொண்டிருப்பதை காண்கிறீர். என்றாவது ஒரு நாளிலே இவர்களும், கூட, நதியண்டை வந்து, மறுகரையில் அவளை மறுபடியும் காண வருவர். அநேகர் சிகப்பு ரோஜாக்களை அணிந்துள்ளனர், தாயார் இன்னும் இங்கே இருக்கிறார். அதற்காக உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். 44 நாங்கள் உம்முடைய வார்த்தையை ஆய்ந்து படிக்கையில் நீர் எங்களை ஒன்றுசேர்த்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று ஜெபிக்கிறோம், நாங்கள் கிறிஸ்துவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். 45 இப்பொழுது, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. மேலும் இந்தக் காலையில் சரியாக வார்த்தையின் பேரில் நாம் துவங்குகிறோம். இப்பொழுது, முதலாவதாக, இந்தச் சிறிய நாடகத்திற்கு முன்னர், தாய்களுக்கும் இந்தச் சிறிய குழந்தைகளுக்கும்…என்று நான் நினைத்தேன். இது நல்ல ஒரு சத்தத்தையுடையதாக இருப்பதால், அவர்களும் எனக்கு செவி கொடுப்பார்கள். மேலும் ஒரு சிறிய நாடகத்தை உங்களுக்கு நான் அளிக்கப் போகின்றேன், ஏனென்றால் இப்பொழுது என்னுடைய ஆராதனைகளில், சில சமயங்களில் நாடகங்கள் மிகவும் பயனுள்ளவைகளாக அமைந்துள்ளன என்பதை நான் கவனித்து வந்துள்ளேன். நீங்கள் அவ்வண்ணமாய் நினைக்கவில்லையா? குட்டி நபர்கள் அதை நன்றாக புரிந்துகொள்கின்றனர். நான் இரண்டு சிறிய, பிரகாசமான கண்களைக் கொண்ட பையன்கள் உட்கார்ந்துகொண்டு, இப்பொழுது என்னை நோக்கிப் பார்ப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறேன், நாளை என்று ஒன்று இருக்குமானால், அவர்கள் நாளைய மனிதர்களாயிருப்பார்கள். 46 இப்பொழுது நாம் எந்த நாடகத்தையோ அல்லது சபையில் நடக்கும் வேறு எதையாவது நடத்துவதற்கு முன்பு, அது வேதாகம பின்னணியைக் கொண்டிருக்கவேண்டும். ஆமென். அது வேதாகமப் பின்னணியாகவே இருக்கவேண்டும். முதலாவதாக, நாமெல்லாரும் மத்தேயு 16-வது அதிகாரம் 25-ம் வசனத்திற்கு திருப்பி, இந்த வசனங்களை நாம் படிப்போம். முதலாவதாக, நாம் படிக்கையில், அதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கும்போது, சிறிய பிள்ளைகள் அந்த நேரத்தில் வெளியே வந்துவிடுவார்கள். இப்பொழுது மத்தேயு 16:25, நாம் இதைப் படிப்போம். தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான். 47 இப்பொழுது, இது ஒரு மிக முக்கியமான வேத வசனம் ஆகும். நாமெல்லாருமாக இதைச் சேர்ந்து வாசிப்போமாக. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இப்பொழுது எல்லாரும், சிறிய பிள்ளைகள் மற்றும் எல்லாருமாக. [சகோதரன் பிரான்ஹாம் மற்றும் சபையாரும் இந்த வேத வசனத்தைச் சேர்ந்து வாசிக்கின்றனர்—ஆசி.] தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான். 48 சிறுவர்களே சிறுமிகளே, உங்களுக்குத் தெரியுமா, சிறு பிள்ளைகள் இதில் களிகூறுவது போலவே பெரியவர்களும் அவ்வாறே கேட்டு மகிழ்வார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அந்த வேதவாக்கியம் மிகவும் முக்கியமானதாகும்! சில வேத வசனங்கள் மிகவும் முக்கியம் வாய்ந்ததாய் இருந்ததினாலே தேவன் அதை நான்கு சுவிசேஷகங்களிலும் வைத்திருக்கிறார்: மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான். ஆனால் இது மிகவும் முக்கியமானதாய் இருந்ததால், அவர் இதை சுவிசேஷத்தில் ஆறு முறை வைத்திருக்கிறார்! ஆறு முறை இது இயேசுவாகிய, அவருடைய சொந்த உதடுகளிலிருந்து புறப்பட்டு வந்தது . 49 இப்பொழுது நாம் மாற்கு புத்தகத்தில், நாம் அங்கே, மாற்கு 8-வது அதிகாரத்திற்குத் திருப்பி, 34-ம் வசனத்துடன் துவங்குவோம், மற்றும் அங்கே சிலவற்றை நான் வாசிப்பேன். இயேசு இதைப் பேசினதின் ஒரு சிறிய தொடர்ச்சி என்பதை, நீங்கள் மீண்டும் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகின்றேன். மேலும் நினைவிருக்கட்டும், அவர் சுவிசேஷத்தில் இதை ஆறுமுறை வைத்திருக்கிறார், ஆகவே அது நிச்சயமானதாக இருக்கும்! இரண்டு என்பது சாட்சியாக இருக்கிறது, பாருங்கள், நீங்கள் நிச்சயமாகவே இதை உங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டுமென்று, அவர் இதை மூன்று இரண்டு முறைகளாக வைத்துள்ளார். பின்பு அவர்—அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வரவிரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து,…தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். 50 இப்பொழுது, மொழிப்பெயர்ப்பாளர்களில் ஒருவர், “தன் சிலுவையை எடுத்துக்கொண்டு அனுதினமும் என்னைப் பின்பற்றக்கடவன்” என்று கூறியிருந்தார். இப்பொழுது, இப்பொழுது, 35-வது வசனம். கவனியுங்கள்: தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான்; என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தின் நிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான். மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? 51 இப்பொழுது, நாம் 35-வது வசனத்தை எடுத்து, நாம் இதை ஒன்று சேர்த்துக் கூறுவோமாக. அது சரி. இப்பொழுது இதை ஒன்று சேர்த்துக் கூறுவோமாக. மாற்கு 8:16-ஐ நாம் எடுக்கப் போகின்றோம், இப்பொழுது நாம் இதை ஒன்றாகக் கூறுவோம்; மாற்கு 8:16, என்னை மன்னியுங்கள், மாற்கு 8:16, 35. இல்லை, நான் அதைத் தவறாக எடுத்துவிட்டேன். மாற்கு 8, என்னை மன்னிக்கவும். மாற்கு, பரிசுத்த மாற்கு, 8-வது அதிகாரம், 35-வது வசனம். இப்பொழுது இதை நாம் முயற்சிப்போமாக. பரிசுத்த மாற்கு, 8-வது அதிகாரம், 35 வது வசனம். இப்பொழுது நாம் அதை எடுத்துள்ளோம். நாம் அதை வாசிப்போமாக. [சகோதரன் பிரான்ஹாமும் சபையாரும் இந்த வேத வசனத்தை சேர்ந்து படிக்கின்றனர்—ஆசி.] தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான்; என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தின் நிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான். 52 அது அற்புதமானதல்லவா? இப்பொழுது, சிறு பிள்ளைகள் வந்து தங்கள் இடங்களில் உட்காருகையில், நாம் நமது சிறு கதையை ஆரம்பிப்போம். நாம் நமது கதையை துவக்கி ஆரம்பிக்கையில், வாயிற்காப்பாளர்கள் அவர்களை இங்கே கொண்டு வந்து, நீங்கள் பாருங்கள்…அவர்களை அமைதிப்படுத்துவீர்களாக. நாம் இந்தக் காலை, ஒரு நாடகத்தின் பேரில், நாம் இதை அஸ்திபாரப்படுத்தப்போகிறோம். மேலும் நான், அநேக முறை, இங்கே சில நாட்களுக்கு முன்னர் நான்… 53 கடந்த கூட்டத்தில் அங்கே, சகோதரன் மற்றும் சகோதரி வுட் என்னுடன் இருந்தனர் என்று, நான் நம்புகிறேன், கிறிஸ்தவ வர்த்தக புருஷர்களின் காலை உணவு வேளையில் நான் பேசிக்கொண்டிருந்தேன். மேலும் நான் அங்கே காட்டத்தி மரத்தின் மேலே இருந்த…சகேயுவைக் குறித்த ஒரு சிறு நாடகத்தை நான் அளித்தேன், இயேசு அந்த பக்கமாக வந்தபோது, எப்படி அவன் குப்பையை கொட்டும் தொட்டியைக்கொண்டு, உங்களுக்குத் தெரியுமா (அதை நாடக வடிவில் அமைத்தோம்), இயேசுவைக் காணத்தக்கதாக, ஒரு மரத்தின்மீது ஏறினான்; அந்த வர்த்தக புருஷன் மரத்தின்மீது அமர்ந்துகொண்டிருந்தான், உங்களுக்குத் தெரியுமா, இயேசுவிடமிருந்து மறைந்து கொண்டிருந்தான். உங்களுக்கு தெரியுமா, அவன் எங்கிருந்தான் என்று இயேசு அறியாதிருந்தார், என்பதைப் போன்றே. ஆகவே அப்பொழுது அவன், “ஓ, அந்த மனிதனுக்கு காரியங்கள் தெரியும் என்றும், காரியங்களை முன்னுரைக்கிறவர் என்றும், எந்த மீனிடத்தில் ஒரு நாணயம் இருந்ததென்றும் அறிந்திருந்தார். நான் அதை நம்புகிறதில்லை” என்று கூறினான். அப்பொழுது இயேசு அந்த மரத்தின் கீழே நடந்து சென்றார். மேலும் அவனோ, “ஓ, அவர் என்னைக் காண முடியாது, நான் மரத்தின் மீது உட்கார்ந்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறிக்கொண்டான். 54 இயேசு நின்று மேலே நோக்கிப் பார்த்து, “சகேயுவே, கீழே இறங்கி வா” என்றார். அவன் அங்கேயிருக்கின்றான் என்பதை மாத்திரம் அவர் அறிந்திருந்தவராயிருக்கவில்லை, அவன் யாராயிருந்தான் என்பதையும் அவர் அறிந்திருந்தார். 55 ஆகவே ஒரு சிறிய நாடகம் சில சமயங்களில் வயதான ஜனங்களுக்கும், வயது சென்ற சிறுவர்களுக்கும் சிறுமியருக்கும், இளம் வயதினருக்கு உதவுவதைப்போலவே உதவும் என்று நான் எண்ணுகிறேன். 56 ஆகவே இப்பொழுது இது முடிவுற்ற பிறகு, நீங்கள் என்னை, “சகோதரன் பிரான்ஹாம், இந்த கதாபாத்திரங்களைப் பற்றியும், பெயர்களைப் பற்றியுமான தகவல்களை எங்கிருந்து பெறுகின்றீர்?” என்று கேட்கலாம். அவைகளில் சில, என்னுடைய அருமை நண்பரான சகோதரன் பூத்-கிளிப்பார்னால் எனக்கு உதவி கிடைத்துள்ளது. மற்றொருவர், மகத்தான வரலாற்று ஆசிரியரான, ஜோசபஸ். பிறகு இச்சம்பவங்களைக் குறித்து நான் படித்துள்ள வரலாற்றுப் புத்தகங்கள், போன்றவைகளாகும். நாங்கள் இக்காலையில் அளிக்கப்போகின்ற நாகடத்தைக் குறித்த, இதற்கான தகவலை இவ்வாறு தான் நான் பெற்றுக்கொள்கிறேன். 57 நாம் இக்காலை வேளையில் அளிக்கப்போகின்ற இந்த கதைக்காக நம்முடைய சிறிய பிள்ளைகள் வெளியே வருவதை நான் காண்கிறேன். இப்பொழுது சிறிய பையன்கள் மற்றும் சிறுமிகளாகிய நீங்கள், உங்களால் முடிந்தால், எத்தனை பேர் வேண்டுமானாலும், இங்கே முன்பாக வரலாம். ஐந்து அல்லது ஆறு காலி இருக்கைகள் நமக்கு உண்டு. நீங்கள் இங்கே வர விரும்புவீர்களானால், நீங்கள் வருவதைக் குறித்து நாங்கள் மகிழ்ச்சி கொள்வோம். இங்கே இந்த சிறிய நாடகத்திற்காக, சரியான நேரத்தில் அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். 58 இப்பொழுது நான் இவ்விதமாகவே இந்த தகவலைப் பெற்று வருகிறேன், நான் அதை எப்படி கண்டறிகிறேன். யாராவது சிலர் இதைக் கவனித்து “நல்லது, அதைப் போன்ற பாகத்தை நான் வேதத்தில் படித்ததே இல்லை” என்று கூறலாம். ஆனால், நீங்கள் அதைக் படிக்கவில்லையென்றாலும், சரித்திரம் அதை பதிவு செய்தது, உங்களுக்குப் புரிகிறதா. ஆகவே இது அதே கதைதான், இது ஒரு—ஒரு—ஒரு சிறிய நாடக வடிவின் மூலமே அளிக்கப்படுகின்றது. 59 ஆகவே, ஆதலால், அதுவே தான்! அதுதான்! அது உன்னுடைய சிறிய சகோதரனா? ஓ, ஓ நிச்சயமாக அவன் உன்னைப் போலவே இருக்கின்றான்! அவன் ஒரு அருமையான பையன். அவ்வாறுதான் என்று நீ கூறலாம். அது சரி. 60 இப்பொழுது நீங்கள் இங்கே வந்து உட்கார விரும்புகிறீர்களா? அங்கே இரண்டு சிறுமிகள் இல்லை மூன்று சிறுமிகள் உள்ளனர். என்னே, அது அருமையாயும், அழகாகயும் உள்ளதே! இப்பொழுது நான்…இக்காலையில் கொடுக்கப்படபோகின்ற இந்த சிறிய கதை சிறிய பையன்களுக்கும் சிறுமிகளுக்குமே. திருமதி காலின்ஸ், நீங்கள் அங்கேயிருக்கின்றீர்கள் என்று நான் நம்புகிறேன், மற்றொரு சகோதரியும் இருக்கிறாள்; தேனே, நீ அங்கு சென்று உட்கார விரும்புகிறாய். ஆம், அந்த பெண்மணி தன்னுடைய சட்டைப் பை புஸ்தகத்தை அங்கே சிறிது நகர்த்துவார்களானால், அங்கே ஒரு இடம் இருக்கும் என்று நான் நம்புகிறேன். மேலும்—மேலும் இங்கே இரண்டு இடங்கள் உள்ளன. 61 இந்த எல்லா சிறுவர்களும் சிறுமியர்களும் இங்கே முன்னே வர நான் விரும்புகிறேன், அதனால் இவர்களிடம் என்னால் பேச முடியும். இங்கே, இங்கே சில நாற்காலிகள் நமக்கு உண்டு. உங்களுக்கு சில இருக்கைகள் கிடைப்பதை நாங்கள் காண்கிறோம். ஆம், ஐயா. அவர்களில் சிலர் இங்கே நமக்கு உதவி செய்வர். எனவே இது இந்த சிறு பையன்களுக்கும் பெண்களுக்கும் மட்டுமே இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஓ, என்னே! அது அருமையானதல்லவா? இப்பொழுது அது…இன்னும் உங்களுக்கு தேவை யாயிருக்கிறதென்று நான் நம்புகிறேன், சகோதரன் நெவில், இன்னும் சிலர் வருவதை நான் காண்கிறேன். இப்பொழுது அது அருமையானது! 62 எத்தனை தாய்மார்கள் இங்கே இருக்கின்றனர்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். ஒ, அது அற்புதமானது! இப்பொழுது, அது மிகவும் அருமையானதாயும், சிறந்ததாயுமுள்ளது. 63 இப்பொழுது இங்கே பின்புறம் இருக்கும் சிறுமிகளே நீங்கள் இங்கே வர விரும்பினால், உங்கள் தாயாரிடமிருந்து சற்று அப்பால் வரத்தக்கதான பக்குவம் உங்களுக்கு இருக்குமானால், முன்னே வாருங்கள். உங்கள் தாயார் உங்களை முன்னே கொண்டு வர விரும்பினால், நல்லது, அவர்களையும் முன்னே வரச் சொல்லுங்கள். இது தாயாருக்கும் கூட. அது சரி, இப்பொழுது. 64 பிள்ளைகளே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நாம் ஒரு வசனத்தை படித்தோம். நீங்கள் எல்லாரும் என்னுடன் சேர்ந்து இதை படிப்பீர்களா? நீங்கள் எல்லோரும் இந்த வசனத்தை என்னுடன் சேர்ந்து படிப்பீர்களா? இப்பொழுது, நாம் எதைக் குறித்துப் பேசப்போகின்றோமோ, அது பரிசுத்த மத்தேயு 16-ம் அதிகாரம் 25-வது வசனத்தில் காணப்படுகின்றது. இப்பொழுது இந்த சிறிய…ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும், இந்தக் காலையில், என்னுடன் சேர்ந்து இப்பொழுது இதைப் படியுங்கள்: [சிறுவரும், சிறுமியரும் சகோதரன் பிரான்ஹாம் கூறுவதை திருப்பிக் கூறுகின்றனர்—ஆசி.] “பரிசுத்த மத்தேயு, 16-ஆம் அதிகாரம், 25-வது வசனம்” இப்பொழுது என்னுடன் சேர்ந்து படியுங்கள்: “தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான்; என்னிமித்தமாக தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.” அதைக் கண்டடைவான். நாம் அதை மறுபடியும் கூறுவோமாக: “என்னிமித்தமாக தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.” அற்புதமானது! 65 இப்பொழுது, சிறுவர் சிறுமியரே, உங்களுக்கு தெரிந்திருப்பது என்ன? உண்மையாகவே மதிப்புமிக்க காரியங்கள் உலகத்தில் அதிகம் உண்டு. அவைகளில் ஒரு காரியம், இன்றைக்கு உங்களுடன் அதை வைத்துள்ளீர்கள், அது சரீரத்தின் உட்புறத்தில் இருக்கின்ற ஆத்துமாவாகும். உலகத்தில், உங்களுக்கு இருக்கின்ற மிகவும் விலையேறப்பெற்ற காரியம் அதுவேயாகும். தாயே, அது சரிதானே? “ஆமென்” என்று கூறுங்கள். [தாய்மார்கள் “ஆமென்” என்று கூறுகின்றனர்—ஆசி.] நீங்கள் பெற்றுள்ள மிக விலையேறப்பெற்ற காரியம் என்னவென்றால் உங்களுடைய ஆத்துமாவாகும். இப்பொழுது நீங்கள் உங்களுடைய ஆத்துமாவை காத்துக்கொள்ள விரும்புவீர்களானால், அப்பொழுது அதை நீங்கள் இழக்கப்போகின்றீர்கள். நீங்கள் உங்களுடைய ஆத்துமாவை இழக்க விரும்புவீர்களானால், அப்பொழுது அதை நீங்கள் இரட்சித்துக்கொள்ளப் போகிறீர்கள்; உங்கள் ஆத்துமாவை இயேசுவிடம் இழந்து போவீர்களானால், பாருங்கள். வேறு வார்த்தைகளில் கூறினால், நீங்கள் இயேசுவை விசுவாசித்தால், நீங்கள் அவருடைய சீஷர்களாவீர்கள். ஆகவே நீங்கள் இந்த விதமாக இளம் வயதினராக இருக்கும்போது உங்களுடைய வாழ்க்கையை இயேசுவிற்கு அளித்தீர்களானால், அதன்பிறகு நீங்கள்…அவர் நித்திய ஜீவனுக்கென்று அதை இரட்சிக்கப் போகின்றார். ஆனால் நீங்கள்—நீங்கள் அதை காத்துக்கொள்ள விரும்புவீர்களானால், நீங்கள் அதை இழக்கப்போகின்றீர்கள்; ஆம், நீங்கள் அதை இழந்துவிடுவீர்கள். இங்கே சுற்றிலும் இருக்கும் சிறுவர் சிறுமியரைப் போன்று நீங்கள் விரும்பி, பிறகு வெளியே சென்று அவர்கள் செய்வதைப் போன்று நீங்கள் செய்ய விரும்புவீர்களானால், அப்படியானால் நீங்கள்—நீங்கள்—நீங்கள் அதை இழக்கப்போகின்றீர்கள். ஆனால் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை இயேசுவிற்கு அளிக்க விரும்புவீர்களானால், அப்பொழுது அதை நீங்கள் நித்தியத்திற்கென்று என்றென்றுமாக காத்துக்கொள்வீர்கள். 66 இப்பொழுது, நீங்கள் அதை நினைவில் கொள்ளுங்கள், உங்களுடைய சிறிய ஆத்துமாதான், உலகத்திலேயே மிகவும் விலையேறப்பெற்ற ஒன்றாகும். ஆகவே நீங்கள் அதை காத்துக் கொள்வீர்களானால், அதை இழந்து போவீர்கள்; அதை இயேசுவிற்களித்தீர்களானால், நீங்கள் அதை இரட்சித்துக்கொள்வீர்கள். என்னுடன் சேர்ந்து உங்களால் அதைக் கூற முடியுமா? அப்படியானால்…[சிறுவரும் சிறுமியும் சகோதரன் பிரான்ஹாம் கூறினதை திருப்பிக் கூறுகின்றனர்—ஆசி.] “நான் அதைக் காத்துக்கொண்டால், அதை நான் இழந்துபோவேன்; அதை நான் இயேசுவிற்கு கொடுத்தால் அதை நான் இரட்சித்துக்கொள்வேன்.” அது தான்! இப்பொழுது நீங்கள் அதை கிரகித்துக்கொண்டீர்கள். அது அல்லவா… 67 எல்லா தாய்மார்களும் அது அருமையானது என்று நினைக்கிறார்கள், “ஆமென்!” என்று கூறுங்கள். [தாய்மார்கள் “ஆமென்!” என்கின்றனர்—ஆசி.] ஓ, அது அருமையானது! அது நல்லது. 68 இப்பொழுது, நீங்கள் பாருங்கள், நீங்கள் செய்ய முடிந்த ஒரு காரியம் உண்டு. இப்பொழுது, நீங்கள் முன்னோக்கிச் செல்லுங்கள். அவர்கள் அதைப்போன்று நடந்துகொள்ள விரும்பினால், தங்களுடைய உலகின் தேவைகளை பெற்றுக்கொண்டால்…சிறுவரும், சிறுமியரும் அங்கே வெளியே சென்று காரியங்களைச் செய்து, கதைகளைக் கூறி, தவறான காரியங்களைப் பேசி, மேலும்—மேலும் ஏமாற்றி, திருடி, மற்றும்—மற்றும் கெட்ட காரியங்களைச் செய்து, பள்ளிக்கூடங்களில் மற்றவரைப் பார்த்து தேர்வெழுதி, மற்ற காரியங்களைச் செய்து, முன்னேறினால்; அவர்கள் இழந்துவிடுவார்கள். அதை அவர்கள் இழந்துவிடுவார்கள். ஆனால் நீங்கள் அதை இயேசுவுக்கு அளித்து, அவர்கள் அதைச் செய்யாதிருந்தால், அப்பொழுது அதை அவர்கள் இரட்சித்துக்கொள்வார்கள். அதைத்தான் நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள். அப்படித்தானே? 69 இப்பொழுது நாம் நம்முடைய சிறிய கதையை நாம் ஆரம்பிக்கப் போகின்றோம். இப்பொழுது, அதுதான் நம்முடைய பின்னணி, இப்பொழுது அதை நினைவில்கொண்டிருக்க வேண்டும். இப்பொழுது நாம் நம்முடைய சிறிய கதையை ஆரம்பிப்போமாக. இப்பொழுது, வயது சென்ற மக்களுக்கு, தகப்பன்மார்கள் மற்றும் தாய்மார்கள், நீங்களும் கூட, இப்பொழுது, கவனியுங்கள்; இப்பொழுது விசேஷமாக தாய்மார்களும், தந்தைமார்களுமாகிய நீங்களும் கூட. இப்பொழுது சற்று…நாம் ஆரம்பிப்போம். சிறிய கதைகளை நீங்கள் விரும்புகிறீர்களா? நீங்கள் விரும்புகிறீர்களா? ஓ, அவைகளை நான் மிகவுமாக விரும்புகிறேன். முக்கியமாக இப்பொழுது…உண்மையில்லாத அநேகக் கதைகளை நீங்கள் படிக்கின்றீர்கள். ஆனால் இந்த கதையோ உண்மையானதாகும், அதின் ஒவ்வொரு வார்த்தையும், முற்றிலும் சத்தியம் ஆகும், அது தேவனுடைய வேதாகமத்தில் உள்ளது, ஆதலால் அது சத்தியமாகத்தான் இருக்க வேண்டும், பாருங்கள், ஏனெனில் அது தேவனுடைய வார்த்தையாகும். தேவனுடைய வார்த்தைதான் சத்தியமாயிருக்கிறது. 70 “இப்பொழுது, உங்களுக்குத் தெரியுமா,” “நான் மிகவுமாக களைத்துப் போயிருக்கின்றேன். நான்—நான்—நான் மரித்துப்போகும் அளவிற்கு களைத்துப்போய் சோர்வாயிருக்கின்றேன்” என்றான். 71 “பாருங்கள்,” “ஏன் நீங்கள் மேலே சென்று படுக்கைக்கு செல்லக் கூடாது? அங்கே கட்டிலின் மேலே, மெத்தை கட்டிலில் மேலே சென்று படுத்துக்கொள்ளுங்கள்” என்றாள். 72 அதற்கு அவன், “ஆனால், ஓ, நான் மிகவுமாக சோர்ந்து போயிருக்கிறேன், ஓ, தேனே, நான் இன்றைக்கு பார்த்ததை நீ பார்த்திருந்தாயானால் நலமாயிருக்குமே! ஓ, நான்…நான், என்ன…எனக்கு இரவு ஆகாரம் கூட தேவையில்லையே! ஓ, நான் இன்று கண்ட அந்த காட்சி, அது பயங்கரமானதாய் இருந்ததே!” அவள், “சரி, நீர் பார்த்தது என்ன?” என்று கேட்டாள். 73 அதற்கு அவன், “பார், குழந்தைகளுக்கு முன்பாக அதை நான் உனக்கு சொல்ல முடியாது, ஓ, அது மிகவும் பயங்கரமானது! என்னே, அது மோசமானது” என்றான். “சரி, நீர் கண்டது என்னவாயிருந்தது?” என்று கேட்டாள். 74 “பார், நான் மேலே சென்று சிறிது நேரம் படுத்துக்கொள்கிறேன், இரவு ஆகாரத்திற்குப் பிறகு—பிறகு நாம் குழந்தைகளை படுக்கையில் உறங்க வைத்த பிறகு இன்று நடந்ததை நான் உனக்கு கூறுகிறேன்” என்றான். அதற்கு அவள், “சரி” என்றாள். 75 மேலும் அவன் மேலறைக்குச் சென்றான். அவன் படுத்துக்கொண்டான். “ஓ, மிகவும் களைப்புள்ளதே! ஓ, என்னே!” உங்களுடைய தந்தை மிக மிக களைத்துப்போயிருக்கும்போது, உண்மையாகவே களைப்புற்றிருக்கும்போது, அவர் எப்படி இருப்பார் என்பதை நீங்கள் அறிவீர்கள். 76 ஆகவே சிறிது நேரம் கழித்து, அந்தச் சிறிய பிரகாசமான கண்களை உடைய அந்தச் சிறிய சிறுமி, அவள் தரையில் சத்தமிட்டு, சுற்றிலும் ஓடத் துவங்கினாள். “உஷ்-உஷ்-உஷ், உஷ்-உஷ்-உஷ், அதைச் செய்யாதே. நீ அப்பாவை எழுப்பிவிடுவாய். மேலும், ஓ, அவர்—அவர் மரித்துப் போனால் நலமாயிருக்கும் என்கிற அளவிற்கு அவர் களைத்துப் போயிருக்கிறார். அவர் இனி உயிர்வாழ விரும்பவில்லை. ஆகவே அப்பா களைத்துபோனால், பாருங்கள், நாம் சிறிது நேரம் அவரை தூங்க விடவேண்டும். அவரை எழுப்பிவிடாதே” என்றாள். மேலும் சிறிய மிரியாம், அவள் அங்கே சென்று மிகவும் அமைதியாயிருக்கத்தக்கதாக, அமர்ந்துகொள்கிறாள். 77 சிறிது நேரம் கழித்து அவள் இரவு ஆகாரத்தை தயார் செய்த பிறகு, அவள் மெதுவாக படிகளின் மேலே சென்று, அவள்—அவள் அவனை “அம்ராமே?” என்று அழைக்கிறாள். 78 அதற்கு அவன், “ஆம், யோகெபேத், இதோ உள்ளேன். நான் கீழே வருகிறேன்” என்றான். ஆகவே அவர்கள் படிகளின் வழியாக கீழே வந்து, ஒரு அருமையான இரவு ஆகாரத்தை உண்கின்றனர். 79 எனவே இரவு ஆகாரத்தை அவர்கள் உண்ட பிறகு, அந்த சிறிய—சிறிய பையனும் சிறுமியும் தங்களுடைய இரவு ஆகாரத்தை உண்ட பிறகு, ஏன், அவர்கள்…அந்தத் தாய் எல்லாவற்றையும் சரி செய்து அவர்களை படுக்கையில் படுக்க வைத்தாள். 80 அதன் பிறகு அவளும் அவளுடைய புருஷனும், அறைக்குச் சென்று, அமர்கின்றனர். “சரி, இப்பொழுது, அம்ராம், நீர் இனியும் வாழக் கூட விரும்பாத அளவிற்குச் செய்த, உம்மை மிக—மிக இன்றிரவு நிலைகுலையச் செய்த, எப்படிப்பட்டதான ஒரு காரியத்தை இன்று நீர் கண்டீர்?” என்று கேட்டாள். 81 “ஓ,” அவன், “அன்பே, அதை என்னால்—என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்றான். அவன், “நான் கண்டேன்…பாருங்கள், நாங்கள் அதை ஒவ்வொரு நாளும் காண்கிறோம், ஆனால் இன்றைக்கோ குறிப்பிடத்தக்கதாக இருந்தது” என்றான். “ஓ, நான் என்றுமே கண்டிராத ஒரு பயங்கரமான காட்சியை நான்—நான் கண்டேன்” என்றான். “நம்முடைய ஏழை பையன்கள், அவர்களில் சிலருக்கு பன்னிரண்டு வயதிற்கு மேல் இருக்காது, அந்த பழைய பெரிய வண்டியை இழுக்க, அதைப் போன்று கயிறுகள் அவர்களுடைய கழுத்துகளைச் சுற்றி சுற்றப்பட்டிருந்தது. அந்த பரிதாபமான சிறுவர்கள், அந்த பெரிய ஏற்றத்தின் மேல் இழுக்கவே முடியாத அளவிற்கு இழுத்தனர், அந்த பெரிய கற்களை வைத்துக்கொண்டு, அவர்களால் அதிக தூரம் செல்ல முடியவில்லை. சிறிது நேரம் கழித்து அந்த வண்டி சத்தம் போட ஆரம்பித்து மிகவும் மெதுவாக சென்று, கொஞ்சம் கழித்து அது நின்றேபோய்விட்டது. அப்பொழுது அந்தச் சாலையின் வழியாக ஒரு மனிதன் வந்தான், ஓ, அவன் பைத்தியம் பிடித்திருந்த ஒரு மனிதனாயிருந்தான்! அவன், ‘ஏன் வண்டியை நிறுத்துகிறீர்கள்?’ என்று கர்ஜித்தான். ‘வாம்!’ என்று மிகப் பெரிய பாம்பு சாட்டைகளுடன், அதை முதுகில் அடிக்க, அவர்களுடைய முதுகிலிருந்து இரத்தம் வழிந்தோடியது, அந்த விதமாக வழிந்தோடியது. அந்த பரிதாபமான பிள்ளைகள் கயிற்றில் தொங்கி அழுதனர்” என்றான். “ஒ, யோகெபேத்! தாயே, நாம் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டான். “நாம் தேவனுடைய ஜனங்கள். தேவன் நம்மை ஆசீர்வதித்தார். நாம் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் பிள்ளைகள். நாம் ஏன் இக்காரியங்களுக்கு இங்கு அடிமைகளாய் இருக்கவேண்டும்? ஓ, அந்த பரிதாபமான பையன்கள் எப்படி அழுதார்கள் என்பது பயங்கரமானதாயிருந்தது. ஓ, நான் ஜெபிக்கிறேன், நான் ஜெபிக்கிறேன், நான் ஜெபிக்கிறேன், யோகெபேத், தேவன் எனக்குச் செவி கொடுத்துக் கேட்பதேயில்லை என்பது போல இருக்கின்றதே. நான் ஜெபிக்கிறேன், ஜெபிக்கிறேன், அவர் எனக்குச் செவி கொடுக்க மறுப்பது போன்று தென்படுகின்றதே, அவர் செவி கொடுத்துக் கேட்பதேயில்லை. எதற்குமே கவலை கொள்ளாதவர் போல அவர் காணப்படுகின்றாரே” என்றான். 82 “இப்பொழுது,” அதற்கு அவள், “அம்ராம், பாருங்கள், நீர் அவ்வாறு பேசும் நபர் கிடையாதே. நீர் ஒரு உண்மையான தகப்பனாயிற்றே, மேலும் நீர்…நீர் பேசுவது போன்று அது இல்லையே, ஏனென்றால் நீர் தேவனிடம் விசுவாசம் வையுங்கள் என்று சொல்லி, எங்களை எப்பொழுதுமே ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தீர் அல்லவா” என்றாள். 83 “ஓ, ஆனால், அன்பே, நான் அதிகமாக ஜெபிக்கையில், இன்னுமாக தேவன் எனக்கு செவி கொடுக்காமல் இருக்கின்றார், காரியங்கள் இன்னுமாய் மோசமாக ஆகின்றது போல் தோன்றுகிறது. எவ்வளவு அதிகமாக நான் ஜெபிக்கிறேனோ, இன்னும் மோசமாக அது ஆகின்றது.” 84 ஆனால், சிறு பையன்களே, சிறுமியரே, தேவன் ஜெபத்தைக் கேட்கின்றாரா? [சிறுவரும் சிறுமியரும் “ஆம்” என்கின்றனர்—ஆசி.] அவர் ஜெபத்தைக் கேட்கின்றார். தேவன் ஜெபத்திற்கு பதிலளிக்கின்றாரா? [“ஆம்.”] ஆம். அவர் உண்மையாகவே உடனடியாக பதிலளிக்கிறாரா? எல்லா நேரத்திலும் அல்ல. அப்படி செய்கிறாரா? இல்லை. சில சமயங்களில் அவர் நம்மை காத்திருக்கச் செய்கின்றார். அது சரிதானே? [“ஆம்.”] ஆனால், தேவன் ஜெபத்திற்கு பதிலளிக்கின்றார். அவர் அப்படி செய்கிறதில்லையா? ஆகவே எல்லாக் காரியங்களும் தவறாகப்போகின்றதென்றால், நாம் ஜெபம் செய்வதை நிறுத்த வேண்டும் என்பதற்கு அது அடையாளம் அல்ல. எப்படியாயினும், நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும், நாம் அப்படி செய்ய வேண்டுமல்லவா? அது உண்மை. இப்பொழுது, நீங்கள் சரியாக பதிலளித்தீர்கள். தேவன் ஜெபத்திற்கு பதிலளிக்கின்றார். நாமெல்லாரும் சேர்ந்து இதைக் கூறுவோமாக. “தேவன் ஜெபத்திற்கு பதிலளிக்கின்றார்.” ஆம். சூழ்நிலைகள் எவ்வாறு இருப்பினும் அதைக் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை, எப்படியாயினும், அவர் பதிலளிக்கின்றார். சரி. “சரி, நீர் மறுபடியுமாக ஜெபிக்க மேலே செல்லப் போகின்றீரா?” என்றாள். 85 “ஆம்.” அவன் ஜெபிக்கச் சென்ற மேல் மாடியில் ஒரு ரகசிய அறை தந்தைக்கு இருந்தது. அதனால் அவர் அன்று இரவு அங்கே எழுந்து, அவர் பக்கத்தில் முழங்காற்படியிட்டு, அவர் கூறினார்…இப்பொழுது அவன், “யோகெபேத், இப்பொழுது நீயும் குழந்தைகளும் போய் படுத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், என்னை தொந்தரவு செய்யாதே, ஏனென்றால் நான் இன்றைக்கு முழு இரவும் ஜெபம் செய்யப்போகிறேன்” என்றான். 86 ஆகவே அவன் தன்னுடைய முழங்காலில் நின்று ஜெபிக்கின்றான், அவன் ஜெபிக்கிறான், அவன் ஜெபித்துக்கொண்டேயிருக்கிறான். அவன் தன்னுடைய கரங்களை உயர்த்தி, “ஓ ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவனே, உம்முடைய ஜனங்களுக்குரிய உம்முடைய வாக்குத்தத்தத்தை நினைவுகூறும்! இதோ நாங்கள் இங்கே எகிப்தில் அடிமைகளாக இருக்கின்றோம், நாங்கள் அடிமைத்தனத்தின் கீழ் இருக்கிறோம். மேலும், ஓ, எங்களுடைய கொடூரமான ஆளோட்டிகள் எங்களை விரட்டி, காரியங்களை செய்யும்படி அடிக்கின்றனர், மற்றும் எங்களுடைய ஏழை ஜனங்கள் நிர்வாணமாக்கப்பட்டு, அவர்கள் சாட்டைகளினால் எங்களை அடிக்கின்றனர். நாங்கள் உம்முடைய ஜனங்கள். ஓ, தேவனே, நிச்சயமாக நீர் ஜெபத்திற்கு செவிகொடுப்பீர்! நிச்சயமாக நீர் ஜெபத்திற்கு பதிலளிப்பீர்! நான் ஜெபிக்கிறேன், நான் ஜெபிக்கிறேன், நான் ஜெபிக்கிறேன், நீரோ எனக்கு பதிலளிக்காதவர் போன்று காணப்படுகின்றதே. ஆனால், தேவனே, நீர் தேவன் என்றும், நீர் முடிவிலே ஜெபத்திற்கு பதிலளிப்பீர் என்றும் நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறுவதை நான் காண்கிறேன். ஏறக்குறைய இரவு முழுவதும் இவ்வாறு ஜெபித்தான். 87 அடுத்த நாள் காலை, மூன்று அல்லது நான்கு மணியளவில், அந்தச் சிறிய படிகளின் வழியாக கீழே வருகின்றான். அவன் அங்கே நோக்கிப் பார்க்கின்றான், அங்கே அவனுடைய அருமையான மனைவி யோகெபேத் இருந்தாள். அவள் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாள். சிறிய ஆரோனும், சிறிய மிரியாமும் ஏற்கனவே படுக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்தனர், ஆகவே, அந்த பிள்ளைகளும் ஆழ்ந்த நித்திரையில், உறங்கிக்கொண்டிருந்தனர். சரி. அவன் அவளிடம்…அவள், “மிகவும் நேரமாகிவிட்டதே, நீர் இப்பொழுது தானா உள்ளே வருகின்றீர்…” என்றாள். 88 “ஆம், இரவு முழுவதும் நான் ஜெபித்துள்ளேன்.” அவனுடைய கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தது, ஏனெனில் அவன் ஜனங்களுக்காக அழுதிருந்தான். 89 ஆகவே அவள், “பார், அம்ராம், நீங்கள் இவ்வளவு கஷ்டப்படக்கூடாது” என்றாள். 90 “இப்பொழுதும்,” அவன், “அன்பே, கவனி. அது நல்லது. ஆனால் இப்பொழுது கவனி, நீர் வளர்க்கத்தக்கதாக இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். மேலும் இந்த பாரம் என்னுடையது. நம்முடைய ஏழை ஜனங்களுக்காக யாராவது ஜெபிக்காவிட்டால், அவர்கள் என்ன செய்வார்கள்? அந்த ஜனங்களை யாராவது இருதயத்தில் வைத்திராவிட்டால் என்ன சம்பவிக்கப்போகிறது? யாராவது ஒருவர் ஜெபித்துதான் ஆக வேண்டும். “சரி.” அவள், “அம்ராம், அந்த பாரம் அனைத்தும் உம்முடையதல்ல” என்று கூறுகிறாள். 91 “சரி, அப்படித்தான் காணப்படுகின்றது. எப்படியாயினும், எல்லா நேரத்திலும், எப்படியாயினும், நான் ஜெபிப்பேன்!” 92 அந்த நாளிலே அவன் வேலைக்குச் செல்கின்றான். ஆகவே அவன் ஒவ்வொரு நாளும் அவன் வந்து, அதே கடின உழைப்பை உழைத்துவிட்டுச் செல்கின்றான். அவனுக்கு மிகக் கடினமான வேலை இருந்தது. அவன் அந்த…அவர்கள் பெரிய பீப்பாய்களில் சுண்ணாம்புக் கலவையை கொட்டுவார்கள், அவன் அந்த பெரிய அக்கினிச் சூளைக்கு அருகில் நிற்க வேண்டும். அவர்கள் அதைத் திறக்குபோது, ஓ, என்னே, அது ஏறக்குறைய அவனுடைய தோலை வெடிப்புறச் செய்யும், அவ்வளவு பயங்கரமான வெப்பம்! அவன் அந்த செங்கல்களை அதற்குள் தள்ளி, அவைகளைப் பெரிய மகத்தான சாலைகளை, மகத்தான பெரிய கோபுரங்களை கட்டவும், விக்கிரக தேவர்களுக்காகவும் மற்ற காரியங்களுக்காக உபயோகப்படுத்தத்தக்கதாக அவன் சுட்டு வெளியே எடுப்பான். எதிரிக்காக இந்த உண்மையான கிறிஸ்தவன் அவ்வாறு வேலை செய்துகொண்டிருக்கின்றான். ஆனால் அவன் ஒரு அடிமையாக இருந்தான், அவன் அடிமைத்தனத்தில் இருந்தான். அவன் அதைச் செய்ய வேண்டியதாயிருந்தது. 93 ஒவ்வொரு இரவும் அவன் வீட்டிற்கு வந்த பிறகு, அவன் ஜெபிப்பான். மறுபடியுமாக அவன் படிகளின் மேலே சென்று ஜெபிப்பான், ஜெபிப்பான், ஜெபித்துக் கொண்டேயிருப்பான், பிறகு கீழே வருவான். நிலைமை சீரடையவில்லை; இன்னும் மோசமாகிக்கொண்டே இருந்தது. 94 ஒரு நாள் அவன் வேலையில் இருந்தபோது ஒரு வதந்தியை அவன் கேள்விப்பட்டான். “என்ன அது? அது என்ன? என்னிடம் சொல்லுங்கள்!” என்றான். யாரோ ஒருவரோடொருவர் முணுமுணுத்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து, என்ன நடக்கப்போகின்தென்ற, அந்தச் செய்தி முழு தேசத்திற்கும் பரவியிருந்தது. 95 அது என்னவாயிருந்து? அந்த இரவு சங்கம் ஒன்று கூடப் போவதாயிருந்தது. வயோதிக பார்வோன் ராஜா, அந்த வயதான பொல்லாத பார்வோன் ராஜா ஒரு பெரிய ஆலோசனை சங்கத்தை கூட்டுவதற்காக, தன்னுடைய எல்லா ஜனங்களையும் கூட்டி அழைக்கப்போவதாயிருந்தான். எனவே அங்கே ஒரு பெரிய ஆலோசனை சங்கக் கூட்டத்தை அவர்கள் நடத்தினர். 96 ஆதலால் அந்த இரவு அவன் உள்ளே சென்றான், ஓ, அவன் மிகவுமாக சோர்ந்துபோயிருந்தான். அவன் உள்ளே செல்கிறான், அவனுடைய மனைவி, “அன்பே அம்ராம்” என்றழைக்கின்றாள், அவள் அவனை கதவினருகே சந்தித்து அவனுக்கு முத்தமிட்டு, “உங்களுடைய இரவு ஆகாரத்தை உண்மையாகவே நன்கு சூடாக வைத்திருக்கின்றேன். ஆனால்,” என்று கூறி, “அன்பே, நீர் மிகவும் வெளிர்த்துப்போய் சோர்வாகக் காணப்படுகிறீரே. காரியம் என்ன?” என்றாள். 97 “ஓ, யோகெபேத், என்ன நடந்து கொண்டிருக்கிறதென்று நீ மாத்திரம் அறிந்திருப்பாயானால்! ஓ, முன்பு எப்பொழுதும் இருந்திராத வகையில் மிகவும் மோசமாக இருக்கிறதே!” என்றான். “என்ன?” 98 “ஷூ-ஷூ, அதைச் சொல்ல முடியாது, பிள்ளைகள் சுற்றி இருக்கிறார்கள். இரவு உணவுக்கும் பிறகு காத்திரு, பிறகு அதைக் குறித்து நான் உனக்குச் சொல்வேன்.” “சரி.” 99 ஆகவே, இப்பொழுது அவள் இரவு ஆகாரத்தை ஆயத்தம் செய்திருந்தாள். இரவு ஆகாரத்தை முடித்து, பிறகு குழந்தைகளை கொண்டு சென்று படுக்கையில் தூங்க வைத்தாள். 100 ஆகையால், அவர்கள் உள்ளே சென்றனர். அவன், “யோகெபேத், உன்னிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன்” என்றும், “மிகவும் கொடியதான காரியங்களில் ஒன்று சம்பவித்துக் கொண்டிருக்கின்றது” என்றும் கூறினான். “என்ன?” 101 “இன்றிரவு வேறொரு ஆலோசனை சங்கத்தை அவர்கள் கூட்டப் போகின்றார்கள். அவர்கள் அதை நடத்தும்போது, நம்முடைய ஜனங்களின் மேல் அவர்கள் வேறொரு சுமையை அவர்கள் சுமத்தப்போகின்றனர்” என்றான். 102 ஆகவே, நாம் ராஜாவின் அரண்மனைக்கு இப்பொழுது செல்லுவோம். பார்வோன் ராஜா அவர்களெல்லாரையும் வெளியே அழைத்து வந்து, “சரி, தளபதிகளே! இங்கே உங்களுக்கு என்ன பிரச்சினை? என்னுடைய உத்தரவுகளை நான் இங்கே பிறப்பிக்கிறேன்! இந்த ஜனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனரே! காரியம் என்ன? நாம் இதை தடுக்க முடியாதா?” என்று கேட்டான். மேலும், “என்றாவது ஒரு நாளிலே வேறொரு சேனை இங்கே வரும். இங்கே கோசேனிலுள்ள நம்முடைய இந்த எதிரிகள், இந்த இஸ்ரவேலர், அந்த சேனையுடன் இணைந்துகொள்வார்கள், அப்பொழுது அவர்கள் நம்மை மேற்கொள்வார்கள். நம்முடைய மகத்தான பொருளாதார நிலை சீரழிக்கப்படும், நம்முடைய மகத்தான சாம்ராஜ்ஜியம் அழிக்கப்படும். அவர்கள் நம்மை கைப்பற்றிவிடுவார்கள். உங்களுக்கு என்னவாயிற்று? யாராவது, பேசுங்கள். ஏதாவது பேசக் கூட உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டான். ஓ, அவன் மிகவும் கீழ்த்தரமுள்ளவனாகவும் மோசமானவனாகவும் இருந்தான். எல்லா தளபதிகளும் நடுங்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் எழுந்து, “பார்வோன் ராஜா நீடூழி வாழ்க” என்றான். “சரி, நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்று சொல்லுங்கள்!” 103 “ராஜா நீடூழி வாழ்க. உங்களுடைய மேன்மை, ஐயா,” என்றான், அவன், “அந்த ஜனத்தின் மேல் இன்னும் அதிகமான பாரங்களை சுமத்த வேண்டுமென்று நான் விரும்புகிறேன்” என்றான். 104 “நீர் புத்தியற்றவராயிருக்கிறீரே! நீங்கள் ஏற்கனவே அதிகமாக பாரங்களை அவர்கள் மீது சுமத்தியிருக்கின்றீர்கள், ஆனால் இன்னுமாக அவர்கள் பெருகிக் கொண்டேயிருக்கின்றனர். ஏன், நீ, இதைப் போன்ற கருத்துக்களை நீ கொண்டிருந்தாயானால், அதை உன்னோடே வைத்துக் கொள்!” ஓ, அவன் மிகவும் கடினமானவனாக இருந்தான். 105 சிறிது நேரம் கழித்து, தன்னுடைய முகத்தில் மிகப் பெரிய புன்னகையோடு, பிசாசைப் போன்ற ஒருவன் எழுந்து நின்றான். அவன், “பார்வோன் ராஜா நீடூழி வாழ்க” என்றான். மேலும், “எனக்கு ஒரு யோசனை வந்துள்ளது” என்றான். “சரி, பேசு! அந்த விதமாக அங்கே நிற்காதே” என்றான். 106 அதற்கு அவன், “நாங்கள் என்ன செய்ய முடியும் என்று நான் உங்களுக்குச் சொல்லுவேன்” என்றான். “இந்த ஜனங்கள் மிகவும் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றனர் என்பது, உமக்குத் தெரியுமே” என்றான். 107 “ஆம்! அது சரியே!” மேலும், “அவர்களில் சிலர், அந்த ஜனங்களில் சிலர் பதினான்கு பிள்ளைகளை உடையவர்களாயிருந்தனர், வேறு சிலருக்கு இருபது பிள்ளைகள்கூட இருக்கின்றனர். ஆனால் நம் ஜனத்திற்கோ ஒன்றுகூட இல்லாமல் இருக்கலாம். அவர்கள் மிகவும் வேகமாக பெருகிக்கொண்டிருக்கின்றனர், அவர்கள் தேசம் முழுவதிலும் பரவி நிரம்பியிருக்கின்றனர்” என்றான். 108 பாருங்கள், தேவன் ஏதோ ஒன்றைச் செய்துகொண்டிருக்கின்றார். பாருங்கள், தேவன் எப்பொழுதுமே பிசாசின் கண்களை மறைத்துவிடுகின்றார், நீங்கள் பாருங்கள். புரிகிறதா? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது அவருக்கு தெரியும். புரிகிறதா? ஆகவே இந்த எல்லா ஸ்திரீகளும் நிறைய பிள்ளைகளைப் பெற்றிருந்தனர். 109 “ஏன்” அவன், “ராஜா நீடூழி வாழ்க. சரி, என்னவென்று நான் உங்களுக்கு சொல்லுவேன். ஒரு ஸ்திரீ ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கும் ஒவ்வொரு முறையும்…இங்கே தேசத்திற்குள்ளாகச் சென்று தேசத்திலே தாய்மார்களாய் அல்லாத…சில பெண்களைக் கொண்டு வாருங்கள். நீங்கள் பாருங்கள், ஒருபோதும் பிள்ளைகள் இல்லாத பெண்கள், குழந்தைகளே தேவையில்லாத பெண்கள், பிள்ளைகளையே நேசிக்காத, நீண்ட மூக்கை உடைய சூன்யக்கார கிழவிகள். பாருங்கள், எவ்வளவு நீளமாக மூக்கு இருக்கின்றதோ, அவ்வளவு நல்லது! நீளமான விரல்கள், வர்ணம் தீட்டப்பட்ட முகங்களை உடைய, அவர்களைக் கொண்டு வாருங்கள். ஒரு தாயினுடைய அன்பு என்ன என்பது அவர்களுக்குத் தெரியாது. எனவே ஒரு சிறிய ஆண் குழந்தை பிறக்கும்போது, ஏன், அவர்கள் சென்று அந்த சிறிய ஆண் குழந்தையை எடுத்து வரட்டும், அவனை வெளியேக்கொண்டு வந்து, அக்குழந்தையினுடைய தலையை சுவற்றிலே மோதிவிட்டு, பிறகு பெற்ற தாயினிடத்தில் வீட்டுக்குள்ளே எறிந்து விட்டு வரட்டும். ஒரு பெரிய கிணற்றினுள் அவனைப் போட்டுவிடுவார்கள். ஓ, அதை விடச் சிறந்த ஒன்று என்னவென்றால், அந்த ஆண்குழந்தையை வெளியே எடுத்து, கையையும் காலையும் கட்டி, அவனை முதலைகளுக்குப் போட்டு அவைகளைக் கொழுக்கச் செய்யலாம். அதை ஒழிக்க அதுதான் சிறந்த வழியாகும். பிறகு அவர்கள் மிக அதிகமாக பெருகமாட்டார்கள், ஏனெனில் ஒரு மனிதனும் மீதமாகவிடப்பட்டிருக்க மாட்டான்; எல்லா ஆண் குழந்தைகளும் கொல்லப்படும்” என்றான். 110 “ஓ,” அதற்கு பார்வோன், “அது நல்லதே! அது ஒரு நல்ல யோசனை!” என்று கூறுகிறார். பிசாசு என்னவாயிருக்கிறான் என்று பார்த்தீர்களா? அவன் பொல்லாதவனாயிருக்கிறான், அவன் அப்படிப்பட்டவனல்லவா? “ஆகவே செய்ய வேண்டிய காரியம் அதுதான்! சென்று அதை…நீ…இப்பொழுது, அவ்விதமான யோசனையை நீ கொண்டிருந்தபடியால், நான் உன்னையே அதற்கான மேற்பார்வையாளனாக வைக்கிறேன். நீ சென்று உனக்குக் தெரிந்த எல்லா வயோதிக பெண்களையும் அழைத்து வா, அது—அது ஒருபோதும் தாய்மார்களாய் இருந்திருக்கக் கூடாது, அவர்கள் பிள்ளைகளை நேசிக்க விரும்பக்கூடாது. மேலும் அவர்கள்…” என்றான். அவர்கள்… 111 நீங்கள் பாருங்கள், ஒரு குழந்தையை நேசிக்க ஒரு தாய் தேவைப்படுகிறது. தாய் உங்களை எப்படி நேசித்தாள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? பாருங்கள், இப்பொழுது பாருங்கள், தாயானவள் சிறிய குழந்தைகளை நேசிக்கின்றாள். 112 ஆனால் அவர்கள் இல்லாத…அதாவது—அதாவது அவர்கள் பிள்ளைகள் இல்லாத யாரையாவது, பிள்ளைகள் வேண்டாம் என்று சொல்லுகிற, வெறும்—வெறும்—வெறும் கீழ்த்தரமான வயது சென்ற கிழவிகளை அவர்கள் கொண்டு வரவேண்டியதாய் இருந்தது. மேலும் அவன், “அவர்களை காவல்காரிகளாக்குங்கள். நீங்கள் அவர்களை காவல்காரிகளாக்கி, அவர்கள் விரும்பும் எந்த வீட்டிற்குள்ளும் நுழைந்து, ஒவ்வொரு சிறிய குழந்தையையும் வெளியே எடுத்து அதன் தலையை சுவற்றில் மோதி, அதை முதலைகளுக்கு உணவாக கொடுக்கும்படி அவர்களுக்கு கட்டளையிடுங்கள்! ஒவ்வொரு சிறிய குழந்தையையும்!” என்றான். ஓ, எவ்வளவு கொடூரமானது! பிறகு அவர்கள் என்ன செய்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? “சரியே, அது நல்லதுதான்!” 113 பிறகு அடுத்த நாள் அம்ராம் அங்கே வேலை செய்துகொண்டிருந்தபோது, இக்காரியம் தீர்மானிக்கப்பட்டதை அவன் கேள்விப்படுகின்றான். 114 ஓ, அவன் வீட்டிற்கு செல்கிறான். அவன், “ஓ, யோகெபேத்! ஓ, அருமையானவளே, உனக்கு ஒன்றை நான் கூறட்டும். பிரகடனப்படுத்தப்பட்ட, அந்த உத்தரவு என்னவென்று உனக்குத் தெரியுமா? சிறிய குழந்தைகள் எல்லாம் கொல்லப்பட வேண்டும் என்பதே.” அப்பொழுது அவன் அவளிடத்தில் கூறினான். “ஓ, என்னால் அதை தாங்க முடியவில்லையே” என்று கூறினான். மறுபடியும் அவன் ஜெபிக்கும்படியாக, மேலே சென்றான். முன்பு எப்போதுமே ஜெபிக்காத வகையில் அந்த இரவு அவன் ஜெபம் செய்தான். 115 நாம் ஜெபம் செய்துகொண்டே இருக்கத்தான் வேண்டுமா? ஓ, ஜெபம் செய்துகொண்டே இரு! அது சரிதானே? ஜெபம் செய்துகொண்டே இரு, என்ன சம்பவித்தாலும் கவலைப்படாதே. தொடர்ந்து ஜெபித்துக் கொண்டேயிரு! 116 இப்பொழுது, முதலாவது காரியம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா, அவன் முழு இரவும் ஜெபித்தான், “ஓ தேவனே, இரக்கமாயிரும்! தேவனே, உதவி செய்யும்! நீர் எவ்விதத்திலாவது எங்களுக்கு உதவி செய்யுமாறு நாங்கள் ஜெபிக்கிறோம்.” பகல் வெளிச்சம் வந்தவுடன் அவன் கீழே இறங்கி வந்தான். 117 நாளுக்கு நாள், ஓ, தேசம் முழுவதும் எப்படிப்பட்ட ஒரு அலறல்! ஒவ்வொரு நாளும் தாய்மார்கள் தெருக்களில் மேலும் கீழுமாக கதறி கூக்குரலிட்டதை அவர்கள் கேட்டனர். அவர்கள் அந்த தாய்களின் கரங்களிலிருந்த சிறிய குழந்தைகளை அல்லது சிறிய சின்னஞ்சிறிய ஆண் குழந்தைகளை தந்திரமாக எடுத்தனர். அந்த வயதான சூனியக்காரிகள் அங்கே சென்று, அவைகளுடைய சிறிய கால்களை பிடித்துத் தூக்கி சுவற்றில் மோதி, அவைகளைக் கொன்று, அவைகளை முதலைகளுக்கு வீசிவிடுவர். அந்த ஏழைத் தாய் தன்னுடைய முழங்காலில் நின்று, “ஓ, என் குழந்தையை எடுத்துக்கொள்ளாதே! என் குழந்தையை எடுத்துக்கொள்ளாதே!” என்று கதறி அழுவாள். மேலும், ஓ, என்னே ஒரு நேரத்தை அவர்கள் பெற்றிருந்தனர்! 118 தாய் எப்படி சிறு குழந்தையை நேசிப்பாள் என்றும், எப்படி அவனை தாடையில் அணைப்பாள் என்றும் உங்களுக்கு தெரியும். எப்படி தாய் உன்னை எடுத்து மேலும்—மேலும் உன்னைக் கழுவி, உன்னை முத்தமிட்டு, மேலும்—மேலும்—மேலும் நீ எவ்வளவு அழகாய் இருக்கிறாய் என்று கூறினது நினைவிருக்கும். எப்படி அவள் இரவில் உன்னை படுக்கையில் தூங்க வைப்பாள். மேலும், ஓ, ஆகவே நீ மாத்திரம்…ஒரு சிறிய கதவு சிறிது திறந்து, குளிர்ந்த காற்று சற்று உள்ளே வந்தால், ஓ, என்னே, அவள் வேகமாக ஓடி கதவை மூடி, சிறிய குழந்தையை மூடி, எப்படி அவள் அதைக் குறித்து அக்கறை எடுத்தாள் என்பது, உங்களுக்குத் தெரியுமா. அவள் உங்களை நேசித்தாள். புரிகிறதா? அவள் உங்களை நேசித்தாள். ஓ, தேவன் அவளுக்களித்த அந்தச் சிறிய, ஒன்றுமே செய்ய முடியாத, தனக்குத் தானே உதவி செய்து கொள்ள முடியாத அந்தக் குழந்தையை எவ்வளவாக அவள் நேசித்தாள். அவள் தன் சிறிய குழந்தைகளை முத்தமிட்டு அதனுடன் விளையாடினாள், ஏனெனில் அவள் ஒரு உண்மையான தாயாயிருந்தாள். புரிகிறதா? 119 ஆனால் தாயன்பு என்பதே தெரியாமல், குழந்தைகளைக் கொல்லுகின்ற இந்தக் கிழவிகள். அவர்கள் தாய்களே அல்ல. அவர்கள் நினைத்ததெல்லாம் உலகத்தின் காரியங்களைப் பற்றியும் தங்களுக்கு இருக்கும் பெரிய நேரத்தையும் தான், ஆகவே அவர்கள் சென்று, அந்தச் சிறிய குழந்தைகளைக் கொலை செய்வார்கள். நீங்கள் தெரிந்து கொள்ள மிகவும் சிறியவர்களாய் இருக்கிறீர்கள், ஆனால் அது இன்னுமாக நடந்துகொண்டிருக்கிறது. அது சரி. இப்பொழுது நான் எதைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதைப் பெரியவர்களாகிய நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அது சரி, அது அதிகமாக இருக்கிறது! “ஓ,” நீங்கள், “நான் எடுக்கமாட்டேன்…” கூறலாம். ஆனால் குழந்தைக் கருவைக் கலைத்தல் காரியமும் அதேப்போன்று தான். சரி, ஆனால் தாய் அன்பு என்பது என்னவென்று அவர்களுக்கு தெரியாதிருந்தது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுகிறீர்கள். இப்பொழுது “உண்மையான தாய்மார்கள்” என்று நான் கூறும்போது என்ன பொருட்படுத்தி கூறுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்! அது உண்மை. எந்த விதமான மாற்றமும் இல்லை; அதே பிசாசுதான்! ஆகவே அங்கே, அதன்பின்னர் அவர்கள்…ஒவ்வொரு வருடமும், ஆயிரம் மடங்கு, ஆயிரம், ஆயிரம் மடங்கு இருப்பதை நினைக்கும்போது, எகிப்தில் இருந்ததைப்போல மோசமானது, இன்னும் மோசமாக இருக்கிறது. 120 மேலும் அங்கே, அப்பொழுது, அவர்கள் உள்ளே வந்தனர், ஒரு தாய் அன்பு அவர்களிடத்தில் இல்லவே இல்லை, எனவே அவர்கள் அந்தச் சிறிய குழந்தைகளை எடுத்து அவைகளைக் கொலை செய்தனர். ஓ, அது மோசமாகி மற்றும் மோசமாகிக்கொண்டே போனது. பிறகு ஒருநாள் அவர்கள் மற்றக் கூட்டத்தை கூட்டப்போவதாக, வேறொரு வதந்தி வந்தது. 121 பார்வோன் தன்னுடைய ஆலோசனை சங்கத்தைச் சேர்ந்த எல்லோரையும் ஒன்று கூட்டினான், அவர்கள், அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, அவர்கள் அங்கே உள்ளே நுழைந்தனர்: அவன் அங்கே வந்து, “சரி, அவர்கள் இன்னுமாக அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றனரே! அதைக் குறித்து நாம் இப்பொழுது என்ன செய்வது?” என்று கேட்டான். 122 இந்த பழைய தந்திரமான, மென்மையான பிசாசின் முகத்தை உடைய இந்த நபர் எழுந்து, “பார்வோன் ராஜா நீடூழி வாழ்க. எனக்கு ஒரு திட்டம் உள்ளது. பாருங்கள், நீங்கள் ஆண்களைத்தான் வேலை செய்ய வைத்துள்ளீர். நீங்கள் அவர்களுக்கு செங்கல் சூளையை உருவாக்குகிறீர், ஒரு நாளுக்கு இவ்வளவு என்று அறுக்க வைக்கிறீர், அவர்கள் வைக்கோலை உபயோகித்து செங்கல் தயாரிக்கச் செய்கின்றீர். சிறிய குழந்தைகளைக் கொன்று போட்டீர், மற்றவைகளைச் செய்தீர், ஆனால் இன்னுமாக அவர்கள் தொகை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. ஆகவே நீர் செய்ய வேண்டிய காரியம் என்னவெனில், ஸ்திரீகளையும் கூட வேலை செய்ய வைப்பதே ஆகும். நீர் ஸ்திரீகளை வேலை செய்ய வைத்தால், அப்பொழுது அவர்களால்…” என்றான். இப்பொழுது, அது ஒரு ஸ்திரீயின் ஸ்தானம் அல்ல. இல்லை. ஆகையால் அவர்கள், “ஆனால் நீர் ஸ்திரீகளை வேலை செய்யும்படி, அங்கே வைத்து, அவர்களையும் கூட செங்கல் அறுக்க அங்கே நீர் வைத்தீரானால். அப்பொழுது அவர்கள் வீட்டிற்குள் வரும்போது, மிகவுமாக சோர்ந்து போய்விடுவார்கள், அவர்களால்—அவர்களால் தங்களுடைய புருஷர்மார்களுக்கு தேவையான இரவு உணவு ஆகாரத்தை சமைக்க முடியாது, அவர்களால் ஒரு நல்ல தாயாக இருக்க முடியாது, பாருங்கள். ஆகவே அவர்கள் வேலைக்குச் சென்று அவ்வாறே செய்வார்களாயின், அவர்களால்—அவர்களாலே அதைச் செய்ய முடியாது. ஆதலால், அவர்களையும் கூட வேலையில் அமர்த்தச் செய்யும்” என்று கூறினான். 123 “அது நல்லதுதான்! என்னே, நீ ஒரு ஞானமுள்ள மனிதன்.” ஆகவே அவன் எல்லா ஸ்திரீகளும் வேலை செய்ய வைக்கின்றான். 124 இதோ பரிதாபமான அம்ராம் அந்த இரவு உள்ளே வருகிறான், “ஓ, யோகெபேத், நாம் என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லையே. இப்பொழுது அவர்கள் எல்லா ஸ்திரீகளும் வேலைக்கு அமர்த்திக் கொண்டிருக்கிறார்கள். நான்—நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஓ, என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லையே! நாம்—நாம்—நாம் வெறுமனே…நாம் அடிமைகளாய் இருக்கிறோம், மேலும் நாம் மோசமாகிக்கொண்டே, மோசமாகிக்கொண்டே போகிறோம். நான்—நான் இதை முன்னுரைக்கிறேன்; தேவன் நமக்கு ஏதாவது எப்போதாவது செய்வாரென்றால், அது நாமெல்லாரும் மரித்த பிறகே இருக்கும்” என்று கூறினான். 125 இப்பொழுது, தேவன் அந்த விதமாக காத்துக்கொண்டிருப்பதில்லை, அவர் காத்திருக்கிறாரா? இல்லை. தேவன் நம்மைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றார். அவர் கவனிக்கவில்லையா? சரி. 126 ஆகவே அதன்பின்னர் அந்த இரவு, அவன், “நான் மேலே போய், முன்பு எப்பொழுதுமே ஜெபித்திராத வகையில் நான் ஜெபிக்கப்போகிறேன்” என்றான். 127 இப்பொழுது, அதுவே ஜெபிப்பதற்கான வழி, அப்படித்தானே? நீங்கள் முன்பு எப்பொழுதுமே ஜெபித்திராத வகையில் நீங்கள் ஜெபம் செய்யுங்கள், உண்மையாகவே துரிதமாக ஈடுபடுங்கள்! பாருங்கள், நீங்கள் சென்று, “கர்த்தாவே, இன்னார்-இன்னாரை-மற்றும்-இன்னாரை ஆசீர்வதியும்” என்று கூறுவீர்களானால், அதைக் குறித்து தேவன் அவ்வளவாக அக்கறைக் கொள்வதில்லை. ஆனால் நீங்கள் அதில் துரிதமாக ஈடுபடும்போதே! சிறு பையன்கள், சிறுமிகளாகிய நீங்கள் ஜெபிக்க, துரிதமாக ஈடுபடும்போதே! அதை நீங்கள் பள்ளிக்கூடங்களில் செய்கிறீர்களா? நீங்கள்—நீங்கள் பள்ளிக்கூடத்தில் உங்களுக்கு உதவி செய்ய தேவனிடத்தில் கேட்கிறீர்களா? நீங்கள் பள்ளிக்கூடத்திற்கு செல்லும்போது, அங்கே நீங்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறாவிடில், நீங்கள் சென்று, “தேவனே, எனக்கு—எனக்கு நீர் உதவி செய்ய வேண்டுகிறேன்” என்று கூறுங்கள். 128 நீங்கள் ஜெபம் செய்கிறீர்களா? எத்தனை சிறு பையன்கள், சிறுமிகள் ஜெபிக்கின்றீர்கள்? உங்கள் கரங்களை நாங்கள் காணட்டும். ஓ, அது அருமையானது. இப்பொழுது, அது நல்லதுதான். உங்களுடைய அம்மாவும் அப்பாவும் உங்களைக் காணக்கூடாதவாறு, நீங்கள் ஜெபிக்கத்தக்கதாக உங்களுக்கு ஒரு ரகசிய அறை இருக்கின்றதா? நீங்கள் அந்தவிதமாக ஜெபிக்கிறீர்களா? நீங்கள்—நீங்கள் அந்தவிதமாக ஜெபிக்கிறீர்களா? ஒரு சிறிய இடத்தில், நழுவிச் சென்று, உங்களுடைய சிறிய ஜெபத்தை செய்யுங்கள். ஒவ்வொரு இரவும் நீங்கள் உறங்கச் செல்லும் முன்பு நீங்கள் அதைச் செய்கிறீர்களா? காலையில் எழுந்திருக்கும்போதும், அந்த காரியத்தை செய்கிறீர்களா? ஓ, அது நல்லது. ஜெபிக்கின்ற சிறுவர் சிறுமியர் எத்தனை பேர் உள்ளனர்? (உங்களுடைய கைகளை உயர்த்துங்கள்) ஓ, கட்டிடம் முழுவதும். ஓ, அது மிக அருமையானதல்லவா? நல்லது, இப்பொழுது, அது நல்லது. இந்த காரியங்களை செய்ய உனக்கு கற்றுக்கொடுக்கிற உண்மையான தாயும் தந்தையையும் நீ பெற்றிருக்கின்றாய் என்பதையே அது காண்பிக்கிறது. இப்பொழுது, உண்மையாகவே இப்பொழுது உங்களுக்கு தேவையிருக்கும் பட்சத்தில், நீங்கள் உத்தமமாக ஜெபிப்பது நல்லது. நீங்கள் அப்படி செய்கிறீர்களா? 129 எனவே, எளிய அம்ராம், மேலே செல்கிறான். ஓ, என்னே! அவனுக்கு இரவு ஆகாரம் தேவையாயிருக்கவில்லை. அவன், “இது மிகவும் மோசம், என்னே!” என்றான். “ஓ,” அவள், “அப்பா, நீர் இரவு ஆகாரம் உண்ண வேண்டும்” என்றாள். “யோகெபேத், அதை செய்ய முடியவில்லை. என்னால் அதைச் முடியவில்லை. நான்—நான்…” 130 “ஓ,” “ஆனால் நீங்கள் இளைத்துக்கொண்டே வருகிறீர்கள், உங்களுக்கு நரம்பு தளர்ச்சி உண்டாகிறது, நீங்கள் உங்களுடைய முகத்தில் இரத்தமே இல்லாமல் வெளுப்பாய் இருக்கிறீர்கள். உங்கள் உணவையும், மற்றவற்றையும் வாந்தி எடுத்துவிடுகிறீர்களே.” 131 “ஓ, என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லையே! ஆனால்,” அவன், “அன்பே, யாராவது இந்த ஜனத்தின் பாரத்தை இருதயத்தில் கொள்ளவில்லையானால், யாராவது இந்த ஜனத்திற்காக ஜெபம் செய்யவில்லையெனில், நாம் என்ன செய்வோம்? நம் நிலைமை இன்னும் மோசமாகிக் கொண்டே செல்கின்றது. நிச்சயமாக, ஒரு நாளிலே, தேவன் செவிகொடுப்பார்!” 132 ஆம், அது சரி. அது சரி. தேவன் கேட்பார். நீ உன் அலுவலைச் செய்யத் துவங்கி அதிலே நிலைத்து நில். 133 ஓ, இந்த முறை அவன் வித்தியாசமானவனாக மேலறைக்குச் செல்கிறான். இப்பொழுது இந்த முறை அவன் மேலே சென்று, அவன் முழங்காற்படியிட்டு, அவன் தன்னுடைய கைகளை மேலே உயர்த்தி, “தேவனே, நான் இப்பொழுது உம்முடன் பேசிக்கொண்டிருக்கிறேன்!” ஆமென். அதுதான் அலுவலில் ஈடுபட ஆரம்பித்தல்! “தேவனே, உமக்கு காதுகள் உள்ளன. ஆதலால் உம்மால் கேட்க முடியும். உமக்கு கண்கள் உள்ளன. ஆதலால் உம்மால் காணமுடியும். உமக்கு ஞாபக சக்தி உள்ளது; உம்முடைய வார்த்தையை நீர் அறிந்திருக்கிறீர். உம்முடைய வாக்குத்தத்தத்தையும் நீர் அறிந்திருக்கிறீர். நான் உம்மிடம் மன்றாடுகிறேன், தேவனே, இங்கே நோக்கிப் பாரும். நீர் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவனாயிருக்கிறீர், உம்முடைய ஜனங்கள் துன்பத்தில், துயரத்தில் இருக்கிறார்கள், அவர்கள் மரித்துக் கொண்டிருக்கிறார்களே. எங்களுக்காக ஏதாவதொன்றை உடனே செய்தருளும், தேவனே! உம் ஒருவரைத்தான் நாங்கள் நம்பியிருக்க முடியும்! நாங்கள் உம்மைத்தான் நம்பியிருக்க முடியும், அல்லது நாங்கள் மரித்துப் போவோம். உம்மைத்தான் நாங்கள் நம்பியிருக்க வேண்டும். நாங்கள் உயிர் வாழ்வோமானால், நாங்கள் பெற்றுக்கொள்ள முடியும்” என்று கதறினான். அந்தவிதமான நேரத்தில் தான் நீ உண்மையாகவே ஜெபம் செய்வாய். ஓ, அவன் ஜெபித்துக்கொண்டிருந்தானே! 134 உங்களுக்கு தெரியுமா, சில சமயங்களில் மக்கள் ஜெபம் செய்யும்போது, அவர்கள் களைத்துப் போய்விடுகிறார்கள். தாய் தந்தையரே, அப்படித்தானே? ஓ, மிகவுமாக களைத்துப் போய்விடுகின்றனர்! சகோதரன் பிரான்ஹாம் சில சமயங்களில் மிகவுமாக சோர்ந்து போய்விடுகின்றார், நான் நீண்ட நேரம் ஜெபம் செய்யும்போது ஏறக்குறைய மயங்கி விழுந்துவிடுவேன்; அப்படியே மயங்கி விழுந்து, நாட்கணக்காக உணவும் மற்ற காரியங்களையும், உட்கொள்ளாமல், ஜெபித்து, ஜெபித்து, ஜெபித்து, பிரசங்கித்துக் கொண்டிருத்தல். நான் மயங்கி விழுகின்ற ஒரு நிலைக்கு, நான் வந்துவிடுவேன். சில சமயங்களில் ஜனங்கள் அவ்விதமாக ஆகிவிடுவர். அப்படியென்றால் அதை விட்டுவிட வேண்டும் என்பதல்ல. தொடர்ந்து ஜெபித்துக்கொண்டே இரு! தேவன் பதிலளிப்பார்! [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தின் மேல் மூன்று முறை தட்டுகிறார்—ஆசி.] ஆம், ஐயா. அப்படியே பிடித்துக் கொண்டிருங்கள்! ஆம், ஐயா. 135 ஆதலால் அந்த பழைய சிறிய, படிகளின் மேல் அவன் செல்கிறான். அங்கே யோகெபேத் வந்து, “ஓ, அம்ராம், வேண்டாம், தேனே, நான்—நான் விசுவாசிக்கிறேன் …” என்று கூறுவது என்னால் காண முடிகிறது. 136 “இப்பொழுது, யோகெபேத், பாரும், நீ ஒரு அருமையான, அழகான…” அவள் அழகான, அழகான சிறிய தாய். மேலும் அவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டான், உங்களுக்குத் தெரியுமா, அவளை அந்த விதமாக தட்டிக் கொடுத்தான். “இப்பொழுது, அம்மா, நீ திரும்பிச் சென்று ஆரோனையும் சிறிய மிரியாமையும் தூங்க வை. நான் ஜெபிக்க மேலே செல்கிறேன். இப்பொழுது, நான் அழுது கொண்டிருக்கும் சத்தத்தை நீ கேட்பாயானால், நீ மேலே வராதே” என்று கூறினான். 137 “சரி, ஆனால் அம்ராம், தேனே, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்? ஏறக்குறைய மரித்தாற்போல் இருக்கிறீர்களே.” 138 “ஆம், ஆனால், அந்த ஜனங்களுக்கான பாரத்தை என் இருதயத்தில் கொண்டவனாய் நான்—நான் இருக்கிறேன். அதைக் குறித்து ஏதாவதொன்றை நான் செய்தாக வேண்டும். என் முழங்காலில் நான் நின்றாக வேண்டும். ஆகவே எல்லா ஜனங்களும்…” என்றான். மேலும் அவன், “இன்று, இன்றைக்கே, நான் அங்கே செங்கற் சூளையின் கீழே, நான் அங்கே கீழே இருந்தேன், அருகில் நின்று, ‘சரி, நிச்சயமாக, தேவன் செவி கொடுப்பார்!’ என்றான். அப்பொழுது ஒரு பெரிய வயதான மனிதன் அங்கு வந்து, தன் கைகளை அவனுடைய இடுப்பின் மேல் வைத்துக் கொண்டு, ‘எப்பொழுது அவர் கேட்பார்? எப்பொழுது அவர் கேட்பார்?’ என்றான். பார் ஜனங்கள் எப்படி மிகவும் வெறுப்படைந்திருக்கின்றனர் என்பதைப் பார்தீர்களா? அவர்களும் தேவனுக்கெதிராகிக் கொண்டிருக்கின்றனர், ஏனென்றால் அவர்கள் ஜெபிக்கின்றனர், அவர்கள் ஜெபிக்கின்றனர், ஜெபிக்கின்றனர் ஜெபிக்கின்றனர, ஆனால் ஒன்றுமே நடைபெறவில்லை. இந்த ஒருவரும் ஜெபிக்கின்றனர், ஜெபிக்கின்றனர், ஜெபிக்கின்றனர், ஒன்றுமே நடக்கவில்லை. ஆகவே எல்லா ஆசாரியர்களும், ‘அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன, நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் என்னவெனில் இந்த அஞ்ஞானிகளை அல்லது அஞ்ஞான கடவுள்களை வணங்குகின்ற இந்த வேலை வாங்கும் அதிகாரிகளுக்கு கீழ்ப்படிந்து கிடப்பதேயாகும். நம்மால் என்ன செய்ய முடியும்?’” என்கின்றனர். ஆனால் அவன், “ஆனால் நான் யேகோவாவில் விசுவாசம் வைத்திருக்கிறேன்! ஆமென்! அவர் இன்னுமாக ஜெபத்திற்கு பதிலளிப்பவரென்று நான் விசுவாசிக்கிறேன்!” என்று கூறினான். 139 நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்!—ஆசி.] அதை விசுவாசிக்கிறீர்களா? ஆமென்! விசுவாசிக்கிற நீங்கள் எல்லோரும், “ஆமென்” என்று கூறுங்கள். [“ஆமென்.”] இன்னுமாக ஜெபத்திற்கு பதிலளிக்கிறார்! சரி. 140 சிறிய மெலிந்த உடம்பு மிகவும் எடை குறைந்துபோயிருந்தது. அந்தப் படிகளில் கீச்சொலி சத்தத்துடன் அவன் மேலே ஏறிச் செல்கிறான், அங்கே சென்று முழங்காற்படியிடுகிறான். அவன், “ஓ, யேகோவா!” என்றான். ஓ, முன்பு எப்போதுமே இருந்திராத வகையில் அவன் ஜெபித்தான்! அவன், “யெகோவாவே, இங்கே பாரும்! நீர் ஒரு உண்மையான தேவன். உமக்கு காதுகள் இருக்கிறதென்று நாங்கள் விசுவாசிக்கிறோம். உமக்கு கண்கள் உள்ளதென்று நாங்கள் விசுவாசிக்கிறோம். எல்லாக் காரியங்களையும் நீர் அறிந்திருக்கிறீர். நீர் எபிரெயர்களின் தேவனென்றும், நாங்கள் வாக்குத்தத்தத்தின் ஜனங்கள் என்றும் நாங்கள் விசுவாசிக்கிறோம். நீர் உம்முடைய வார்த்தையைக் காத்துக்கொள்கிறீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம்.” “எங்கள் மலிவான உழைப்பைக் கொண்டு மகத்தான பெரிய சாலைகளையும் விக்கிரகங்களையும் மற்ற காரியங்களையும் செய்துகொண்டிருக்கும் இந்த அஞ்ஞானிகளை இங்கே பாரும். யேகோவாகிய, நீர், பரலோகத்தில் உட்கார்ந்துகொண்டு அஞ்ஞானிகள் உம்மை ஆளவிடுவீரா? அதை நீர் செய்வீர் என்று நான் விசுவாசிப்பதில்லை.” ஆமென்! 141 அவர் அதைச் செய்வார் என்று இன்னுமாக நான் விசுவாசிப்பதில்லை! ஆமென்! பிசாசு வரும்போது, தேவன் இன்னும் தேவனாக இருக்கிறார்! அது சரி! பிசாசு அதைச் செய்ய அவர் அனுமதிக்கமாட்டார். எல்லா நாகரீகமும் முட்டாள்தனமும், மற்றும் இந்த எல்லா போலி பெருமைகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற, இந்த நாளிலேயே; இன்னுமாக தேவன் அரசாளுகிறார், அவர் இன்னும் தேவனாகவே இருக்கின்றார்! சரி! அம்ராமைப் போன்று, தங்களுடைய இருதயத்திலே பாரங்கொண்டு, பரலோகத்தைத் திறந்து, தேவன் இறங்கி வந்து ஜெபத்திற்கு பதிலளிக்கும் வரை, அதிலே உறுதியாக நிலைத்திருந்து ஜெபித்துக்கொண்டிருக்கும் யாரோ ஒரு நபர் நமக்கு தேவையாயிருக்கிறது. ஆமென். 142 “இப்பொழுது, இங்கே நோக்கிப் பாரும்,” அவன், “தேவனே, அஞ்ஞானிகள் உம்முடைய ஜனங்களை இவ்வாறு பரியாசம் செய்யவிடுவீரா? வாரங்கள், மாதங்கள், வருடங்கள் கடந்து சென்றுவிட்டன. நாங்கள் இன்னுமாக தொடர்ந்து ஜெபித்துக் கொண்டு வருகிறோம், கண்ணீரால் நனை…ஆனால் [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] ஓ, தேவனே இப்படிப்பட்ட ஒரு காரியத்தை அனுமதிப்பீரா?” என்றான். 143 நூற்றுக்கணக்கான சிறிய குழந்தைகள் ஆறுகளிலும், சாக்கடை நீர் தேங்கி கிடக்கும் பள்ளங்களிலும் தூக்கியெறிப்பட்டு, கருச்சிதைவுகள் மற்ற எல்லா காரியங்களும் செய்யப்பட்டு வாழவிடாத காரியங்கள் நடைபெறுவதைக் குறித்து, நான் இன்றைக்கு யோசிக்கிறேன்; ஓ யேகோவா, இப்படிப்பட்ட காரியங்கள் தொடர்ந்து நடைபெற நீர் அனுமதிப்பீரோ? [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தின் மேல் ஆறு முறை தட்டினார்—ஆசி.] இன்றைக்கு விஸ்கி, பீர், மற்றும் இரவு வாழ்க்கை, மற்ற ஒவ்வொரு காரியமும், நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவர்கள் அதைக் குறித்து எதையுமே பேச பயப்படும் நிலைக்கு பிரசங்க பீடங்கள் மிகவும் பலவீனம் அடைந்திருக்கின்றன. யேகோவா, இதைப் போன்ற அர்த்தமற்றவை தொடர நீர் அனுமதிப்பீரா? ஒரு நாளிலே அவர் பதிலளிப்பார். ஓ, அவருடைய கோபம் வரும்போது மிகவும் பயங்கரமாக இருக்கும். ஆம், ஐயா. ஸ்தீரிகள் வெளியே போய் ஒரு சிகெரட்டை புகைத்து அதனுடைய சாம்பல் தங்களுடைய குழந்தையினுடைய கண்ணில் படியச் செய்கிறதான அப்படிப்பட்ட காரியத்தைச் செய்கின்றனர். ஜனங்கள் தங்கள் சிறிய குழந்தைகளை பீர் கடைகளுக்கு கொண்டு செல்கின்றனர், ஆறு அல்லது எட்டு வயதுள்ள சிறு பையன்கள் சிறுமியர் அங்கே உட்கார்ந்து, குடித்துக்கொண்டும் மற்றக் காரியங்களை செய்துகொண்டும் இருக்கின்றனர். தேசமும் அதை சட்டபூர்வமாக்கி, “அது சரியானது” என அழைக்கின்றது. ஓ, என்னே! யெகோவா அதை பார்க்கவில்லை என நினைக்கிறீர்களா? தேவனோடு சரியாக இருக்கும் ஜனங்களைப் பார்த்து அவர்கள் பரியாசம் செய்கையில். இந்த மற்ற எல்லா காரியங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அப்படியே நிலைத்திரு, பிடித்துக் கொண்டிரு! யேகோவா பதிலளிப்பார். கவலை கொள்ளாதே. அது சரி. 144 நாம் இன்னும் சற்று மேற்கொண்டு பார்ப்போம். அவன் அங்கே ஜெபித்துக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். அவன் மிகவும் சோர்ந்துபோய் படுத்துக்கொள்கிறான். அவன் தரையில் விழும் வரை ஜெபம் செய்து கொண்டிருக்கிறான். அவனால் இன்னுமாக தொடர்ந்து ஜெபிக்க முடியவில்லை, ஆகவே அவன் சிறிது நேரம் தூங்கினான். அவன் விழித்துக்கொண்டான். “காரியம் என்ன? இங்கே சுற்றும் முற்றும் பாருங்கள்! அந்த ஒளி எங்கிருந்து வருகின்றது? ஓ, பார், அந்த மூலையில் நின்றுகொண்டிருக்கிறது.” அங்கே ஒரு தூதன் நின்று கொண்டிருந்தான், அவனுடைய பட்டயம் அவனுடைய பக்கவாட்டில் தொங்கிக்கொண்டிருக்கிறது. ஓ, அவன் மறுபடியுமாக நோக்கிப் பார்த்தான், அவன் தன்னுடைய கண்களை பிசைந்துகொண்டான். அவன் முழங்காலிலிருந்து எழுந்து, அவன், “கர்த்தாவே, ஓ, ஓ, நான் என்ன—என்ன செய்ய வேண்டும் என்று நீர் விரும்புகிறீர்?” என்று கேட்டான். 145 அவன், “அம்ராமே, நான் தேவ தூதன். தேவன் உன் ஜெபங்களைக் கேட்டார் என்று உன்னிடம் கூறத்தக்கதாக நான் பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளேன். அவர் ஒரு விடுவிப்பவனை அனுப்பப்போகின்றார் என்று உன்னிடம் கூறும்படி நான் வந்துள்ளேன். அவர் தம்முடைய எல்லா வாக்குத்தத்தங்களையும் நினைவுகூருகிறார்” என்றான். அந்த தூதனை இப்பொழுது நான் காண்கிறேன்; அவரைப் பாருங்கள், அவர் தன்னுடைய பட்டயத்தை வெளியே எடுக்கிறார். அவர் அதை வடதிசையை நோக்கிச் சுட்டிக் காண்பிக்கிறார். அம்ராம் பார்த்தான். அவன், “இந்தப் பட்டயத்தின் முனை இருக்கிற திசைதான் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசமாய் இருக்கின்றது. ஜனங்களே நீங்கள் அந்த தேசத்தை சுதந்தரித்துக்கொள்வீர்கள் என்று உங்கள் பிதாக்களான, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு நான் வாக்குத்தத்தம் செய்திருக்கிறேன். ஆகவே நான் ஜனங்களின் கூக்குரலை கேட்டுள்ளேன், பிள்ளைகளின் கதறலை நான் கேட்டுள்ளேன், நான் இறங்கி வந்திருக்கிறேன். அம்ராமே, நீ ஜெபத்தில் உண்மையாயிருந்தபடியால், இந்த காரியத்தில் நீ ஒரு பெரும் பங்கை வகிக்கப்போகின்றாய் என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நீ உன் வீட்டில் உண்மையுள்ளவனாய் இருந்தாய். அடுத்த வருடம் கிட்டத்தட்ட இதே சமயத்தில், உன்னுடைய அருமையான மனைவியாகிய, யோகெபேத், ஒரு சிறு ஆண் குழந்தையை அணைத்துக் கொண்டிருக்கப்போகிறாள். அந்த சிறிய ஆண் குழந்தை ஒரு விடுவிப்பவனாய் இருக்கப்போகிறான்” என்றான். மகிமை! 146 அவன், “ஓ, ஆம். ஆம். ஓ, ஆம். ஆம், ஓ, அவன் மிகவும் அழகாயிருக்கின்றான்” என்றான். அவன் நோக்கிப் பார்த்தான், அந்த தூதன் உயர செல்ல ஆரம்பித்தான். முழு வானங்களும் திறந்தது போல் இருந்தது, அவன் அறையை விட்டு சென்றான். அம்ராம் சிறிது நேரம் காத்திருந்திருந்தான். அவன், “ஓ, நான் புத்தயீனனாயிருக்கவில்லை” என்றான். 147 அவன் படிகட்டுகளிலிருந்து, உண்மையாகவே துரிதமாக கீழே சென்று, “யோகெபேத்! யோகெபேத், சீக்கிரம்!” என்றான். அவள், “ஆம், அன்பே, என்ன விஷயம்?” என்று கேட்டாள். 148 அவன், “உட்காரு!” என்றான். ஜன்னலில் நிலவு வெளிச்சம் பிரகாசித்துக்கொண்டிருந்தது,…அவள் அழகாக காணப்பட்டாள். அப்பொழுது அவன், “நான் தேவனுடைய தூதனைக் கண்டேன், அவன் இந்த எல்லாக் காரியங்களையும் என்னிடம் கூறினான்” என்றான். “ஓ, அவன் எப்படி இருந்தான்?” என்று அந்த தாய் கேட்டாள். “எப்படி அவன் காணப்பட்டான்?” 149 “ஓ, அவன் அழகாயிருந்தான். ஒரு பளபளக்கும் அங்கியை அணிந்திருந்தான். அவனுடைய கண்கள் பிரகாசித்தன. அவன் தன்னுடைய கையில் ஒரு பட்டயத்தை வைத்திருந்தான், அதை அவன் வட திசையை நோக்கி காட்டினான்” என்றான். உங்களுக்குத் தெரியுமா, எகிப்திலிருந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம் அந்த திசையில்தான் இருந்தது; அந்த திசையில்தான், பாலஸ்தீனா. அவன், “வட திசையை நோக்கியே அவன் காண்பித்தான். அடுத்த வருடம் கிட்டத்தட்ட இதே சமயத்தில் ஒரு குழந்தையை நாம் பெற்றுக்கொள்ளப்போகிறோம், ஆகவே வரப்போகின்ற இந்த சிறிய குழந்தை ஜெயவீரனாக இருப்பான், அவருடைய ஜனங்களை வெளியே கொண்டு வருவான். ஓ, அல்லேலூயா, யோகெபேத்!” என்று கூறினான். 150 அவள் வெண்மையாயிருந்ததை அவன் கவனித்தான். அவளுடைய முகத்தில், அவளுடைய கண்கள் பெரிதாக உற்று நோக்கிக்கொண்டிருந்தன, அவளுடைய பெரிதான கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன. “யோகெபெத், என்ன ஆயிற்று?” “ஓ, அம்ராம்! இல்லை, இல்லை, இல்லை! நமக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கப்போகிறதா?” “ஆம்.” 151 “ஓ, நீங்கள்…அது அவ்வாறு இருக்க முடியாது. என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? ஓ, நீங்கள் இந்த தரிசனத்தைக் காணாதிருந்திருந்தால் நலமாயிருந்திருக்கும். உங்களுக்கு என்னவென்று தெரியுமா, பார்வோன், அவன் எல்லா சிறு குழந்தைகளையும் கொலைசெய்து கொண்டிருக்கிறானே.” 152 “ஆம். ஆனால், உனக்குத் தெரியுமா, இந்த குழந்தையை தேவன் நமக்குக் கொடுக்கிறாரென்றால், அந்த குழந்தையை தேவன் பார்த்துக்கொள்வார். ஆமென்! தேவன் வாக்குரைத்திருக்கிறார். தேவன் அக்குழந்தையை கவனித்துக்கொள்வார்.” 153 பாருங்கள், அடுத்த நாள் அவன் வேலைக்கு செல்கின்றான். அங்கே இருந்த எல்லா நபர்களும், அவர்கள் அம்ராமை கவனிக்கிறார்கள். உங்களுக்குத் தெரியுமா, அவன் சோர்ந்து போய், குனிந்து நடந்து வராமல், அவன் நிமிர்ந்த தோள்களுடையவனாய் வந்து, “இன்னும் சில செங்கல்களை கொடுங்கள், வாருங்கள், நாம் போவோம்!” என்றான். “காரியம் என்ன?” “தேவனுக்கு மகிமை! தேவன் ஜெபத்திற்கு பதிலளிக்கப் போகிறார்.” ஓ, இல்லை… 154 ஒரு பதிலை நீங்கள் பெறும்போது அது உங்களுக்கு நல்லுணர்வை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். தாயே, தந்தையே, தேவன் பதிலை அளிக்கும்போது, அது அப்படித்தான் என்பதை நாம் அறிவோமல்லவா? நீ ஒரு தரிசனத்தை காணத் தேவையில்லை. அந்த பதில் அங்கேயே தான் இருக்கின்றது என்பதை அறிந்துகொள்ளுங்கள், அவ்வளவுதான். அவ்வளவேதான், அதற்கான பதில் அங்கேயே தான் இருக்கின்றது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். 155 இப்பொழுது, இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், என்ன நடந்ததென்று, நீங்கள் கவனித்து கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்பொழுது உங்களுக்கு தெரியுமா, சிறிது நேரம் கழித்து, “சரி, அம்ராம், உனக்கு என்ன ஆயிற்று?” 156 “தேவன் ஜெபத்திற்கு பதிலளிக்கப் போகின்றார்! தேவன் ஜெபத்திற்கு பதிலளிக்கப் போகின்றார்!” “சரி, எப்படி அவர் ஜெபத்திற்கு பதிலளிக்கப்போகிறார்?” “அதனால் ஒரு வித்தியாசத்தையும் உண்டாகாது.” 157 ஒரு வயயோதிக நபர் நடந்து வந்து, “இப்பொழுது ஜெபத்திற்கு எப்பொழுதாவது அவர் பதிலளிப்பார் என்று நீ நினைக்கிறாயா?” என்றார். 158 “சரி, நான் உனக்கு அதைக் கூறப் போவதில்லை, ஏனெனில் நீ ஒரு எப்படியோ அவிசுவாசி. இன்னும் சில செங்கல்களை என்னிடம் கொடுங்கள்.” அவர்கள் அப்படியே அங்கே அந்த விதமாக தூக்கியெறிந்தனர்…?…கவலைப்படாதே; நீ அவிசுவாசிகளுக்கு எல்லா காரியங்களை கூறத் தேவையே இல்லை. நீ கூறுவாயா? அது ஒரு வித்தியாசத்தையும் உண்டுபண்ணாது. இல்லை, ஐயா. நிச்சயமாக இல்லை. “இன்னும் கூடுதலான செங்கல்களை என்னிடம் கொடுங்கள். அல்லேலூயா! ஜெபத்திற்கு பதிலளிக்கப் போகின்றார்!” அது நடக்கப் போகின்றது என்பதை நீங்கள் அறியும்போது அந்தவிதமாவே உணர்வீர்கள். இல்லையா? ஆம், ஐயா. “சரி, அதை அவர் எப்படி செய்யப் போகின்றார்?” 159 “உனக்குத் தெரியாது, எப்படியோ, ஆதலால் செங்கல்களை கொடுத்து கொண்டேயிரு.” எல்லாவற்றையும் இங்கே அடுக்கி வை, பழைய செங்கல்களை அங்கே அடுக்கி வை. 160 அந்த இரவு அவன் வீட்டிற்குச் சென்றான், “ஓ, யோகெபேத், அதைக் குறித்து சற்று சிந்தித்துப் பார், நாம் ஒரு குழந்தையை பெறப் போகிறோம்! ஓ, அவன் ஒரு விடுவிப்பவனாக இருக்கப்போகிறான்! தேவன் அவனை அனுப்பப்போகிறார். ஓ, அது அற்புதமானதாய் இருக்கப்போகின்றது.” “ஓ, ஆனால் நான் மிகவும்…” 161 “ஓ, கவலைப்படுவதை நிறுத்து! கவலைப்படுவதை நிறுத்து! என்னே! தேவன் இதில் இருக்கிறார்—தேவன் இப்பொழுது கேட்டுக்கொண்டிருக்கிறார். தேவனுக்கு காதுகள் உண்டு; தேவனால் கேட்க முடியும். தேவனுக்கு கைகளுண்டு; அவரால் விடுவிக்க முடியும்.” என்றான். ஆதலால், ஓ, அவனுக்கு அதிகமான விசுவாசம் இருந்தது. 162 உங்களுக்கு தெரியுமா, நீங்கள் ஜெபம் செய்துகொண்டே இருக்கையில், நீங்கள் பதிலைப் பெறுகிறீர்கள், அப்பொழுது நீங்கள் உண்மையாகவே அதிகமாக விசுவாசத்தைப் பெறுவீர்கள். ஓ! தேவன் அதை உங்களுக்காக செய்யப்போகிறார் என்று நீங்கள் அறிந்திருக்கின்ற, ஏதோ ஒரு காரியத்திற்காக நீங்கள் எப்போதாவது ஜெபம் செய்திருக்கிறீர்களா? சிறிய பெண் பிள்ளைகள், சிறுவர்களாகிய நீங்கள் அதைச் செய்கிறீர்களா? ஆம். நிச்சயமாக. அப்பொழுது அவர்…அது நடக்கப்போகிறது என்று அப்பொழுது நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். சரி. 163 முழு வருடம் கடந்து செல்கின்றது. முதலாவது காரியம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா, ஒரு நாள் அம்ராம் வேலையிலிருந்து வருகிறான். என்ன நடந்தது? சிறிய அழகு வாய்ந்த குழந்தை, ஓ, கிட்டத்தட்ட இந்த அளவு நீளமானதாய், அந்த சிறிய அருமையான குழந்தை இருந்தது. ஆகவே அவள் அதை எடுத்து, அதை அம்ராமிடம் கரங்களில் அளிக்கிறாள். உங்களுக்கு தெரியுமா, அவன் அதை முத்தமிடுகிறான். அவன் அதை நேசிக்கிறான், பாருங்கள். தாய் அக்குழந்தையை பிடித்துக் கொண்டிருந்தாள். ஓ, என்னே ஒரு பொக்கிஷம்! அவள், “ஓ, எனக்கு பயமாக இருக்கிறது, உமக்கு தெரியுமா. இந்தச் சிறிய குழந்தை, அவன் அப்படிப்பட்ட இனிய குழந்தையாக இருக்கின்றான்” என்றாள். 164 அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா? பிறந்த குழந்தைகளிலே அக்குழந்தைதான் மிகவும் அழகான குழந்தையாயிருந்தது என்று வேதாகமம் கூறியுள்ளது. இப்பொழுது அதன் பேரில் தாய்மார்கள் என்னிடம் கருத்து வேறுபாடு கொள்வார்கள் என்று எனக்குத் தெரியும். ஹு-ஹூ. அவர்கள் நினைத்தனர்…நீங்கள்தான் மிக அழகுள்ள குழந்தை என்று உங்கள் தாய்மார்கள் நினைத்துக்கொள்வார்கள். உங்களை அவ்வாறு நினைக்கவில்லையா? ஆம். அவ்வாறு நினைக்க அவர்களுக்கு ஒரு உரிமை உண்டு. ஆனால் வேதாகமம் இது ஒரு சிறிய அழகுள்ள குழந்தையாயிருந்தது என்று கூறியுள்ளது. ஓ, அது ஒரு ஆபரணமாய் இருந்தது. உங்களுக்குத் தெரியுமா, தேவன் தன் கரங்களை அவன் மீது வைத்திருந்தார். எனவே, ஓ, அது ஒரு மிக அருமையான சிறிய குழந்தையாயிருந்தது! அது அங்கே படுத்துக்கொண்டிருந்து அது—அது பல் இல்லாத, ஒரு சிறிய சிரிப்பை சிரித்தது. 165 உங்களுக்கு ஒரு சிறிய சகோதரனும் மற்றவர்களும் இல்லாமல், அதாவது பல்லே இல்லாமல்—இல்லாமல் அதைப் போன்ற புன்னகை செய்கிற ஒரு சிறிய சகோதரன் உங்களுக்கு உண்டா? முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, “வாவ்!” “ஓ, ஐயோ! வீயு! எனக்குத் தெரியும், நாம் இவனை மறைத்து வைப்போமாக.” “என்ன ஆயிற்று? நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” 166 “அதை கீழே கொண்டு போ. கட்டளை என்ன என்பது உனக்கு தெரியும். பார், நீளமான மூக்கைக் கொண்ட அந்த சூனியக்கார கிழவிகள் இங்கே வந்தார்களானால், நம்முடைய குழந்தையை எடுத்துக் கொன்றுபோடுவார்கள். அது உண்மை. ஆகவே நாம் அதை அழவிடக்கூடாது.” ஆதலால், ஒ, அதற்கு கொஞ்சம் காலை அல்லது இரவு ஆகாரம் தேவையாயிருந்தது—தேவையாயிருந்தது. ஆகவே அந்த தாய் அந்த மூலைக்கு கொண்டு சென்று அதற்கு பாலூட்டுகிறாள், உங்களுக்குத் தெரியுமா. எனவே பிறகுதான் அவன் அமைதியாயிருந்தான். 167 ஆகவே அதற்கு பிறகு சில இரவுகள், அவர்கள் அதனுடன் விளையாடிக்கொண்டிருந்தனர், உங்களுக்குத் தெரியுமா, அப்பொழுது மறுபடியுமாக “வாவ்!” என்று அழத் துவங்கியது. அப்பொழுது அவள் மிக துரிதமாக ஓடி, அந்த விதமாக அதை மிக விரைவாக மறைத்து—மறைத்து வைத்தாள். கீழே, கீழே பின்னால், ஒரு சுவற்றில் அந்த குழந்தையை மறைத்து வைக்கத்தக்கதாக அம்ராம் ஒரு சிறு இடத்தை அமைத்திருந்தான். 168 ஆகவே முதல் காரியம் என்ன தெரியுமா, ஏதோ ஒன்று மேலே படிகளின் வழியாக சென்று கொண்டிருந்தது…[சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை தட்டுகிறார்—ஆசி.] வ்யூ! போய்விட்டதே! எல்லோரும் ஓரிடமாக சிதறி ஒடினர், “அதோ அவர்கள்தான். அந்த சூனியக்கார கிழவிகள், வயோதிக நீண்ட விரல்கள், வர்ணம் தீட்டப்பட்ட விரல்கள்!” என்றனர். அந்த வயோதிக சூனியக்கார கிழவிகள்…அங்கே கீழே பார்த்தனர், ஜன்னலில் வெளியே எட்டிப் பார்த்தனர், “ஆம், அவர்கள்தான். அங்கே அவர்கள் நின்றுகொண்டிருக்கின்றனர்.” [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை தட்டுகிறார்—ஆசி.] “கதவைத் திறவுங்கள்!” 169 வயோதிக அம்ராம் நடந்து சென்று, கதவைத் திறந்து, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான். 170 “நீ இங்கே ஒரு குழந்தையை வைத்திருக்கிறாய், அது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அதை எடுத்துக்கொள்ளப் போகிறோம்” என்றனர். “உங்களிடம் கொடுக்கத்தக்கதாக எங்களிடம் குழந்தை இல்லையே” என்றான். அவர்கள் கொடுக்கவில்லை. 171 “எப்படியாயினும், நாங்கள் உள்ளே வந்து பார்க்கப்போகிறோம். நாங்கள் பெண் காவலர்கள். எங்களுடைய அடையாள சின்னங்களைப் பார்த்தீர்களா?” மேலும் அது ஒரு…அது ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய கொளரவமல்லவா? ஆனால், “நாங்கள் பெண் காவலர்கள். நாங்கள் ஆணையுரிமையிலிருந்து எங்களுடைய அதிகார உரிமைகளைப் பெற்றுள்ளோமே!” உங்களுக்குத் தெரியுமா, நாங்கள் இப்பொழுது இங்கே அவைகளை வைத்துள்ளோம். ஆகவே—ஆகவே அவர்கள் உள்ளே செல்கின்றனர். அவர்கள் உள்ளே சென்று நீள் சாய்விருக்கையை தலை கீழாக புரட்டி, எல்லா அலமாரி பெட்டிகளையும் வெளியே இழுத்துப் பார்த்து, ஒவ்வொன்றையும் தரையிலே எறிந்துவிட்டு, படுக்கை விரிப்புத் துணிகள் மற்ற எல்லாவற்றையும் எடுத்து உதறிப் பார்த்தனர். மேலும் மாடியில் அங்கே அப்பா வைத்திருந்த ரகசிய அறையைப் பார்க்க மேலே சென்றனர். எல்லா இடங்களையும் ஆராய்ந்தனர், ஆனால் குழந்தையை அவர்களாலே கண்டு பிடிக்க முடியவில்லை. 172 அந்த குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை, ஆகவே அந்த ஸ்திரீயிடம் அவர்கள் அங்கே நடந்து சென்றனர், யோகெபேத் பரிதாபமாக—பரிதாபமாக அங்கே நின்றுகொண்டிருந்தாள், அவளுடைய முகம் வெளுத்துப் போயிருந்தது. அவர்கள் அவளிடம் நடந்து சென்று, “இங்கே பார்! நீ ஒரு—ஒரு தாயாகி இருக்கின்றாய் என்பதை நாங்கள் அறிவோம். உன்னுடைய தோற்றத்தை வைத்தே நாங்கள் சொல்ல முடியும். நீ பாலூட்டுகின்ற தாய் என்பது எங்களுக்கு தெரியும், அந்தக் குழந்தை இங்கிருக்கின்றது என்பதும் எங்களுக்குத் தெரியும். நாங்கள் மறுபடியுமாக வருவோம். நாங்கள் அதை எடுத்துச் செல்வோம்!” என்று கூறினர். அவர்கள் கதவைத் தாண்டிச் சென்றனர். அவர்கள் கதவை படார் என்று அடித்து, வெளியே சென்றனர். அவள், “ஓ, ஓ, நாம் என்ன செய்ய முடியும்? நாம் என்ன செய்ய முடியும்?” என்றாள். 173 எனவே அம்ராம், “ஜெபம் செய்” என்றான். செய்ய வேண்டியது அது தானே? [சிறுவர் சிறுமியர் “ஆம்” என்கின்றனர்—ஆசி.] அது தானே? “ஜெபியுங்கள்! நாம் ஜெபம் செய்வோம்.” “ஓ, ஓ, ஓ! என்ன—என்ன செய்வது என்று தெரியவில்லையே. ஓ!” 174 ஆகவே அவன், “இப்பொழுது, பார், நீ அமைதியாயிரு, நீ போய் மீண்டும் குழந்தைக்குப் பால் கொடு. நான் மேலே சென்று ஜெபிக்கப்போகின்றேன்” என்று கூறினான். 175 ஆகவே அவன் மேலே சென்று ஜெபிக்கின்றான். அவன், “யேகோவா, உமக்கு காதுகள் இருக்கின்றன. யேகோவா, உமக்கு கண்கள் இருக்கின்றன. யெகோவா, உம்மால் கேட்க முடியும். உம்மால் ஜெபத்திற்கு பதில் அளிக்க முடியும். நீர் இக்குழந்தையை எங்களுக்கு அளித்தீர். நீர் உம்முடைய வாக்குத்தத்தத்தை எங்களுக்கு அளித்தீர். ஆகவே நீர் உம்முடைய வாக்குத்தத்தத்தை காத்துக்கொள்வீர், இந்த குழந்தையையும் நீர் காத்துக்கொள்வீர். நான் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன்!” என்றான். 176 ஜெபித்து முடித்த பின்னர், மிகவுமாக களைத்துப் போய், அவன்—அவன் இந்த விதமாக படுத்து தூங்கிவிட்டான். [சகோதரன் பிரான்ஹாம் குறட்டை விடுவதுபோல செய்து காண்பிக்கிறார்—ஆசி.] அவன் மிகவும் களைத்துப் போய்விட்டான்! நாள் முழுவதும் வேலை செய்தான், இரவு முழுவதும் ஜெபித்துக்கொண்டிருந்தான். அவன் களைத்துப்போய்விட்டான். அதன்பின்னர் என்ன நடந்ததென்று உங்களுக்கு தெரியுமா? அவன் உறங்கிவிட்டான், அப்பொழுது அவன் ஒரு சொப்பனம் கண்டான். 177 உங்களுக்கு தெரியுமா, தேவன் சொப்பனங்களில், கூட பேசுகிறார், அவர் பேசுகிறதில்லையா? நிச்சயமாக, அவர் பேசுகிறார். ஆம், அவர் பேசுகிறார். அவரால் பேச முடியும். புரிகிறதா? அவர் சொப்பனங்களில் பேசுகிறார். 178 ஓ, அவன் விழித்துக்கொண்டான், அவன்,[சகோதரன் பிரான்ஹாம் தன் விரலை ஒருமுறை சொடுக்குகிறார்—ஆசி.] “அதுதான் இது! அதைக் குறித்து நான் சிந்தித்திருக்க வேண்டும். அதைத்தான் நான் செய்ய வேண்டியவனாய் இருக்கிறேன்” என்றான். [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தின் மேல் ஐந்து முறை தட்டுகிறார்.] “அதைக் குறித்து நான் எதுவுமே பேசமாட்டேன்” என்றான். அவன் கீழே செல்கிறான். அவன், “யோகெபேத்!” என்றான். “என்ன, அன்பே? ஓ, நான் மிகவும் சோர்ந்துபோயிருக்கிறேன். என்னால் தூங்க முடியவில்லை.” “ஒ, தூங்கப் போ, தூங்கச் செல். எல்லாம் முடிந்துவிட்டது.” “எப்படி உங்களுக்குத் தெரியும்?” “ஓ, எனக்குத் தெரியும். எனக்கு நம்பிக்கை இருக்கின்றது!” 179 அந்த இரவு, அப்பா அங்கே மேலே ஜெபிக்கச் செல்வதற்கு பதிலாக, அவர் கீழே அடிதளத்திற்கு வந்தார். அவர் அங்கே மிகவும் அலுவலாய் இருந்தார். அவர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்று நான் வியப்புற்றேன். நாம் கீழே நழுவிச் சென்று அவரைப் பார்ப்போம். நான் அவரை அங்கே காண்கிறேன், போய்…[சகோதரன் பிரான்ஹாம் முனுமுனுக்கத் தொடங்குகிறார், மற்றும் எதையாவது ஒன்றை கட்டும்போது உண்டாகும் சத்தத்தை செய்து காட்டுகிறார்—ஆசி.] “ஸ்லாம், ஸ்லாம், ஸ்லாம்.” [சகோதரன் பிரான்ஹாம் வாய்த் திறவாமல் பாடுகிறார்.] இந்த நாணலை எடுத்து, அதனுடன் இணைத்து, சரியாக இருக்கிறதா என்று பார்க்கிறார். [சகோதரன் பிரான்ஹாம் வாய்த் திறவாமல் பாடுகிறார்.] அந்தச் சிறிய ஆரோன் அன்றைய தினம் வெளியே சென்று, ஒரு முழு கையளவு-சுமையை சேகரித்து, அங்கே அடித்தளத்தில் கொண்டு வந்து வைத்திருந்தான், உங்களுக்குத் தெரியுமா. [சகோதரன் பிரான்ஹாம் முனுமுனுக்கிறார்.] “தேவன் உன்னை பார்த்துக்கொள்வார்.” [சகோதரன் பிரான்ஹாம் வாய்த் திறவாமல் பாடுகிறார்.] “பண்டைய காலத்து மார்க்கம், அது உண்மையானதாக இருக்கத்தான் வேண்டும்!” [சகோதரன் பிரான்ஹாம் ஏதோ ஒன்றை அடிக்கின்றார்.] அவைகளை சுற்றி கட்டுகிறார். அவள், “அம்ராமே, உமக்கு என்ன ஆயிற்று?” என்றாள். “அல்லேலூயா! அன்பே, ஒன்றுமில்லை. உன் வேலையைக் கவனி” என்றார். 180 [சகோதரன் பிரான்ஹாம் வாய்த் திறவாமல் பாடுகிறார்—ஆசி.] “அது பண்டைய கால மார்க்கம்.” [சகோதரன் பிரான்ஹாம் மறுபடியுமாக அடிக்கின்றார்.] “அது பண்டைய கால மார்க்கம்.” அதை இங்கே கொண்டு வா, உங்களுக்குத் தெரியுமா, “அது பண்டைய கால மார்க்கம்.” “ஹூஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்,” அதை முழுவதுமாக திறவாதபடி மூடிப் போடு. “இது எனக்கு போதுமானது! எனக்கு இந்த பண்டைய…கொடு…” அவன் ஏதோ ஒன்றைச் செய்துக்கொண்டிருந்தான். 181 உங்களுக்கு தெரியுமா, ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் கழித்து, முதலாவது காரியம் என்னவென்று தெரியுமா, அவன் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்று அவர்கள் வியந்தனர். 182 எனவே ஒரு நாள் இரவு அவர்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கையில், அவன் மெதுவாக மேலே சென்று இந்தச் சிறிய காரியத்தை கொண்டு வருகிறான், உங்களுக்குத் தெரியுமா. அவன் அதை இந்த விதமாக தூக்குகிறான். அவன் அதை கொண்டு வருகிறான். அவன் தன்னுடைய மனைவி யோகெபேத் உறங்கிக் கொண்டிருக்கிற அந்த படுக்கை விரிப்பை உயர்த்தி, அதை அந்த படுக்கை விரிப்பின் கீழ் வைக்கிறான். சிறிய ஆரோனும் மிரியாமும் உறங்கிக்கொண்டிருந்தனர் என்பது, உங்களுக்குத் தெரியும்; ஓ, அவள், அந்த சிறுமி, ஒரு இனிமையான சிறுமியாயிருந்தாள், அப்படியேதான் ஆரோனும் இருந்தான். ஆகவே, அவன் அதை அங்கே கீழே வைத்தான். அவன், “அன்பே, யோகெபேத்” என்றான். 183 அவள், “அம்ராமே, இந்த இரவு நேரத்தில் நீங்கள் அடித்தளத்தில் ஜெபித்துக்கொண்டிருந்தீர்களா?” என்று கேட்டாள். “இல்லை. நான் அடித்தளத்தில் தேவனை துதித்துக்கொண்டிருந்தேன்” என்றான். “நீர் என்ன செய்துகொண்டிருந்தீர்?” என்றாள். 184 “நான் உனக்கு சொல்ல விரும்புகிறேன். இப்பொழுது, அந்த வயோதிக சூனியக்காரிகள் வந்து கொண்டிருக்கின்றனர் என்று உனக்குத் தெரியுமா” என்றான். “ஆமாம்.” 185 “ஆகவே, நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை நான் உனக்கு சொல்லப்போகிறேன். இப்பொழுது நாம் குழந்தையை மூன்று மாதத்திற்கு நம்மிடம் வைத்திருந்தோம், நாம் அதை இங்கிருந்து வெளியே கொண்டு செல்ல வேண்டும்.” “ஓ, அம்ராம்! நீர் என்ன செய்ய வேண்டும்?” “நாம் குழந்தையை இங்கிருந்து கொண்டு செல்ல வேண்டும்.” “குழந்தையை கொண்டு செல்வதா?” “ஆமாம்.” “ஓ, நீர் கொடூரமானவர்!” “இல்லை, நான் கொடூரமானவன் அல்ல. இல்லை, இல்லை, இல்லை. நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும்” என்றான். 186 “நீர் என்ன பொருட்படுத்துகிறீர்? ஏன், நீர் பார்வோனைவிட மோசமானவராக இருக்கிறீர். நம்முடைய குழந்தையை ஒழித்துவிடப் போகிறீரா?” “ஆம், குழந்தையை கொண்டு செல்லப்போகிறேன்.” “ஓ, நம்மால் முடியாதே!” 187 “இப்பொழுது கவனி. நாம் இதை வைத்திருப்போமானால், நாம் இதை இழக்கப்போகிறோம். ஆகவே இதை நமக்கு கொடுத்த அவரிடமே நாம் இதை கொடுப்போமானால், அவர் அதை கண்டெடுத்துக்கொள்வார்.” அது சரியா? “இப்பொழுது, இதை நாமே வைத்துக்கொள்வோமானால், நாம் இதை இழக்கப்போகிறோம்.” “எப்படி நீர் இதை இழக்கப்போகிறீர்?” “ஏன், அந்த வயோதிக சூனியக்காரிகள் வந்து இதை எடுத்துக்கொள்ளப்போகிறார்கள்.” 188 மேலும் கவனியுங்கள், அந்த ஆத்துமாவை நீங்களே வைத்துக்கொண்டு, தொடர்ந்து சென்று உலகத்தாரைப் போல ஜீவிப்பீர்களானால், அதை நீங்கள் இழக்கப்போகிறீர்கள். பாதாளத்தின் சூனியக்காரிகள் உன் பின்னே வந்து கொண்டிருக்கிறார்கள். அது உண்மை. இந்த உலகத்தின் அறிவீனமான செயல்கள், இன்னும் அங்கே வெளியே இருக்கின்ற காரியங்கள், உன்னைப் பின் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆகவே நீங்கள் அதை வைத்துக் கொள்வீர்களானால், அதை நீங்கள் இழந்துவிடுவீர்கள்; ஆனால் அதை உங்களுக்கு அளித்த ஒருவரிடமே நீங்கள் திருப்பி அளிப்பீர்களானால், நீங்கள் அதைக் கண்டறிந்து பாதுகாத்துக்கொள்வீர்கள். இப்பொழுது அது என்ன? நாம் அதை வைத்துக்கொள்வோமானால், நாம் என்ன செய்வது? [பிள்ளைகள், “அதை இழந்துவிடுவோம்” என்கின்றனர்—ஆசி.] அதை இழந்துவிடுவோம். அதை நாம் கிறிஸ்துவிடம் கொடுத்து விடுவோமானால் நமக்கு என்ன ஆகும்? அதை காத்துக்கொள்வோம். [“அதை காத்துக்கொள்வோம்.”] ஆமென்! அது நல்லது. இப்பொழுது நீங்கள் சரியாக பதிலளிக்கிறீர்கள். 189 இப்பொழுது அவன், “யோகெபேத், இதை நாம் வைத்திருப்போமானால் நாம் இழக்கப்போகிறோம். ஆகவே நாம் இதை நமக்கு அளித்த அவரிடமே இதை நாம் திருப்பி—திருப்பி அளிப்போமானால், அப்பொழுது நாம் இதைக் காத்துக்கொள்வோம்” என்றான். 190 இப்பொழுது, உனக்கு ஒரு ஆத்துமா இருக்கின்றது. மேலும், அப்பா, அம்மா, உங்களுக்கும் அதேதான். ஆனால் நீங்கள் அதை வைத்திருப்பீர்களானால், அதை நீங்கள் இழக்கப்போகிறீர்கள். அது உண்மை. நரகத்தின் சூனியக்காரிகள் அதை எடுத்துக்கொள்ளுவார்கள். அவர்கள் எல்லோரும் அதைப் பின்தொடர்கிறார்கள்! ஆனால் உங்களுக்கு அதை அளித்த அவரிடம் நீங்கள் திருப்பி அளிப்பீர்களானால், அதை நித்திய ஜீவனுக்கென்று நீங்கள் காத்துக்கொள்வீர்கள். அல்லேலூயா! ஆமென்! பிள்ளைகளே, என்னை மன்னியுங்கள், நான்—நான் பண்டைய-நாகரீக பாணியில் போதிய சத்தமிடுகிறவன். நீங்கள் அதை வைத்துக்கொண்டால்…நாம் எல்லாருமாக சேர்ந்து, அதை கூறுவோமாக: [சபையோர் சகோதரன் பிரான்ஹாமுடன் சேர்ந்து கூறுகின்றனர்—ஆசி.] “நீ அதை வைத்துக்கொள்வாயானால், அதை இழந்துபோவாய்; நீ அதை அளித்த அவரிடம் அதை அளிப்பாயானால், நீ அதை காத்துக்கொள்வாய்.” ஆமென். அதை அவரிடம் அளிக்கவேண்டும் என்பதை இப்பொழுது நினைவில்கொள்ளுங்கள். 191 இப்பொழுது நாம் பார்ப்போமாக. ஓ, அவள் அழத் துவங்கினாள். “ஓ, நீங்கள் அந்தக் குழந்தைக்கு என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று அவள் கேட்டாள். “இதோ பார், நான் உனக்கு ஒன்றை காண்பிக்க விரும்புகிறேன்.” “அங்கே என்னுடைய கட்டிலின் கீழே நீர் என்ன வைத்திருக்கிறீர்?” “நான் உனக்கு காண்பிக்கட்டும்” என்றான். ஆகவே அவன் அதை வெளியே இழுத்தான். “ஓ, இது ஒரு சிறிய நாணற்பெட்டி ஆயிற்றே!” 192 அது என்ன, ஒரு சிறிய கப்பல். அதற்கு சுக்கான் கிடையாது, அதற்கு பாய்மரம் கிடையாது, அதன் மேல் பீரங்கிகள் கிடையாது, அதேசமயத்தில் இன்னுமாக அந்த காலத்திலே, ஒரு கப்பலில் என்றுமே வைக்கப்படாதிருந்த மிகவும் விலை மதிப்பு வாய்ந்த ஒரு சரக்கு ஏற்றப்படப்போகிறது. இதைக் கேள்! அந்த கப்பலிற்கு மாலுமியோ அல்லது எந்த மாலுமிகளின் கூட்டமோ கிடையாது. சகோதரனே, எனக்கு தெரிந்த, அதைப்போன்று, பெரியவர்களுக்கான கப்பலும் கூட, ஒன்று இருக்கின்றதே! 193 “ஓ,” அவள், “அம்-…அதை நான் பார்க்கட்டும், அம்ராம், அதை நான் பார்க்கட்டும்” என்றாள். அவள் இங்கே செல்கின்றாள். 194 அவன், “இங்கே பார், அதற்கு ஒரு மூடியை அமைத்துள்ளேன். பார்த்தாயா?” என்று கேட்டான். அவன் சிறிய மூடியை எடுக்கிறான். அவள், “வ்யூ! நாற்றமெடுக்கின்றதே! உஹ்! வ்யூ! என்னே!” என்றாள். “ஆம், அது நாற்றமெடுக்கிறது” என்றான். “ஏன்?” 195 “அதை சுற்றிலும் முழுவதும் கீல் ஊற்றியுள்ளேன். அது முழுவதுமாக, கீல் பூசப்பட்டுள்ளது” என்றான். கீல் என்பது தார் என்று உங்களுக்குத் தெரியுமா, எனவே அவர்கள் அதன் மீது கீல் பூசினர். அதைத்தான் அவன் அங்கே கொதிக்க வைத்து, இந்த நாணற்புற்களின் மேலே ஊற்றினான். அவன் அதை கீலினால் பூசியிருந்தான். “பார், இதனால் தண்ணீர் உள்ளே வர முடியாது. பார், இது முழுவதுமாக பூசி முத்திரிக்கப்பட்டுள்ளது.” “தண்ணீர் அதற்குள் செல்ல முடியாது, அதற்குள் வர முடியாது. நான் அதை முழுவதுமாக பூசி விட்டேன்.” “வ்யூ! மிகவுமாக நாற்றமடிக்கிறதே!” என்றாள். 196 பிள்ளைகளாகிய உங்களுக்கு தார் என்றால் என்னவென்று தெரியும், அவர்கள் சாலைகள் போடும்போது, “ஓ, அது மிகவும் நாற்றமெடுக்கும்!” ஆனால் அது—அது—அது பாதுகாக்க…அது—அது வீதியில் உள்ள எல்லா வெடிப்புகளையும் அடைத்துவிடுகிறது. அதே போன்றுதான் இதுவும் செய்கிறது, அது தண்ணீர் வராமல் தடுக்கின்றது. 197 அதைத்தான் ஒரு விசுவாசிக்கு ஜெபமும் செய்கின்றது. நீ உன்னுடைய முழங்காலில் நின்றுகொண்டு, “கர்த்தராகிய இயேசுவே!” என்று கூறும்போது, அனுதினமும் உலகம் உனக்குள்ளே வராதவாறு தடுத்து நிறுத்துகிறது. ஆகவே பிசாசானவன் உன்னை பிடித்துக்கொள்ளாதபடிக்கு அந்த இரத்தம் வந்து, உன்னை முத்திரை போடுகிறது. பார்த்தீர்களா? அது உண்மை. புரிகிறதா? ஆகவே பிறகு, ஓ, அநேகமுறை மக்கள் சுற்றிச் சென்று அது மோசமாயிருக்கிறது என்று கூறுகிறார்கள், ஆனால், அது ஒரு வித்தியாசத்தையுமே உண்டாக்குகிறதில்லை, அது உன்னை பத்திரமாக பாதுகாக்கிறது. அதுவே முக்கியமான காரியமாகும், தொடர்ந்து பாதுகாப்பாயிருங்கள். “நீ பண்டைய-நாகரீகமானவன்” என்று சொல்கிறாய், ஆனால், அதனால் ஒன்றுமில்லை, அது உன்னை பாதுகாக்கிறது. “சரி,” “நாம் என்ன செய்யப் போகிறோம்?” என்றாள். 198 “சரி,” “நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை நான் உனக்குச் சொல்வேன். நாம் குழந்தையை எடுத்து, ஒரு சிறிய பிரிவு உபசார காரியத்தை நடத்துவோம். பிறகு குழந்தையை எடுத்து இங்கே இதனுள் வைத்து நைல் நதியில் விட்டுவிடுவோம்” என்றான். 199 “ஓ! வேண்டாம்! வேண்டாம்! வேண்டாம்! அம்ராமே, நீங்கள் குழந்தையை நதியிலே கொண்டு போய் போட முடியாது.” 200 “ஆம்! ஆம்! நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை நானறிவேன்” என்றான். பார், அவன் ஒரு சொப்பனத்தைக் கண்டிருந்தான், அவன் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருந்தான். பாருங்கள், தேவன் அவனுக்கு கட்டளையிட்டிருந்தார். என்ன செய்ய வேண்டுமென்பதை அவன் அறிந்திருந்தான். அவன் இதை உண்டுபண்ணி, அங்கே நோவா தன் காலத்தில் காப்பாற்றின அதே பேழையின் மாதிரியைப் போன்றே இது இருப்பதை அவன் கண்டான். 201 ஆகவே அவன், “இங்கே பார், அவன் மூச்சு விடும்படியாக, இதன் மேலே ஒரு சிறிய துவாரத்தை அமைத்திருக்கிறேன். பார், அவன் அங்கே சூரிய வெளிச்சத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்” என்றான். 202 பண்டைய வேதாகமத்தில் காணப்படுகிற உடன்படிக்கை பெட்டியிலும், அங்கே இதேவிதமாகத்தான், அது அமைக்கப்பட்டிருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா. அதன் மேல் ஒரு துவாரம் இருந்தது, அதனால் நீ உள்ளே பார்க்க முடியும், நீ பார், மற்றும் அங்கிருந்து அவனும் மேலே பார்க்கலாம். 203 ஆகவே, பிறகு இந்த பெயரில்லாத, பரிதாபத்துக்குரிய சிறு குழந்தை, அதற்கு எந்தப் பெயரும் இடப்படவில்லை; சிறு, பெயரற்ற குழந்தை, அதேசமயத்தில் இன்னுமாய் உலகத்திலேயே மிகவும் அழகான சிறிய குழந்தையாக இது இருந்தது. 204 அடுத்த நாள் இரவு, அவர்கள் உள்ளே வந்து, அவர்கள் அதிகாலை சுமார் மூன்று மணி வரையிலும் காத்திருந்தனர், பிறகு அவர்கள்…அவன் நடந்து செல்கிறான். மேலும் அவன் ஜெபம் செய்தான். அவன் அருகில் சென்று, அவன், “இப்பொழுது வா, யோகெபேத், எழுந்திரு!” என்றான். 205 ஆகவே அவர்கள் குட்டி ஆரோனையும், குட்டி மிரியாமையும் எழுப்பினார்கள். ஓ, அந்த சிறிய மிரியாம் வந்து, தன் கரங்களை அவர் மீது போட்டுக்கொண்டு, அவள், “அப்பா!” என்றாள். குட்டி மிரியாம், அவள், “நீ எங்களுடைய சிறிய தம்பியை, குழந்தையை, நீ கொண்டு போகக் கூடாது, முதலைகளால் நிறைந்திருக்கிற நைல் நதியிலா இதைக் கொண்டு போய் வைக்கப்போகிறீர்?” என்றாள். 206 அவன் அவளுடைய சிறிய கூந்தலை அதைப் போன்று பின்னால் தள்ளிவிட்டான். மேலும் அவள் …அவளுக்கு அழகான கண்கள், அழகான சிறிய முடியும் இருந்தது. எனவே அவன் அவளை கன்னத்தில் முத்தமிட்டான். அவன், “தேனே, அது என்னையும் கூட, பாதிப்படையச் செய்கிறது. அது என்னையும் கூட, பாதிப்படையச் செய்கிறது, ஆனால் நாம் இதைச் செய்துதான் ஆகவேண்டும்” என்றான். 207 நீங்கள் பாருங்கள், சிறிய பையன்களே, பெண் பிள்ளைகளே, சில வேளைகளில் நம்மை பாதிப்புள்ளாக்குகிற காரியங்களை செய்ய வேண்டியதாயிருக்கும், ஆனால் எப்படியாகினும், நாம் அதைச் செய்துதான் ஆகவேண்டும். பெண்கள், “ஏய், நீ எப்பொழுதாவது ஒரு சிகரெட்டை புகைத்திருக்கிறாயா?” என்று கேட்கும்போது, நீங்களோ, “இல்லை” என்று கூறலாம். 208 “சரி, ஒன்றை புகைத்துப் பார்! ஓ, நான் உன்னுடைய நண்பன், உனக்குத் தெரியும். ஆம், நீ அதை முயற்சி செய்து பார்.” 209 ஆனால் உங்களை, அது சிறிது மனவருத்திற்குள்ளாக்கலாம், ஆனால், “ஹூ-ஹூ. அது எனக்குத் தேவையில்லை” என்று கூறலாம். புரிகிறதா? பார்த்தாயா? “அது எனக்கு தேவையில்லை” எனலாம். “இன்று மாலை என்னுடன் படக்காட்சிக்கு போக வருகின்றாயா?” என்று கேட்கலாம். 210 “இல்லை, வேண்டாம். ஹூ-ஹூ. நான் படக்காட்சிக்கு செல்வதில்லை” பார்த்தீர்களா? அது உங்களை சற்று மனவருத்திற்குள்ளாக்கலாம். புரிகிறதா? 211 “ஓ, நீ ஒரு பழங்கால நடவடிக்கைகளை உடைய கோழை” என்பார்கள். அதை நீங்கள் நம்பாதீர்கள். அது உன்னை சிறிது மனவருத்திற்குள்ளாக்கும். அதிலிருந்து உன் தலையை மாத்திரம் திருப்பிக் கொள்; நீ செய்யவேண்டிய சரியான காரியம் அதுவேயாகும், நீங்கள் பாருங்கள். எப்பொழுதும் அதையே செய்யுங்கள், சரியான காரியத்தையே செய்யுங்கள். சரி. 212 இப்பொழுது பெண்கள் இந்த குதிங்கால் நடனம் மற்றும் அதைப் போன்ற காரியங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள், அதை நீங்கள் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர்; நீங்கள் அவர்களிடம், “கற்றுக்கொள்ள முடியாது, முடியாது” என்றே கூறுங்கள். நீங்கள் அதை செய்யக்கூடாது, பாருங்கள். 213 “ஓ, பாருங்கள், அது மிகவும் வேடிக்கையான ஒரு விளையாட்டாய் இருக்கிறது.” அது எவ்வளவு வேடிக்கையாக இருந்தாலும் அதைக் குறித்து கவலைப்படாதே. நீ சரியானதையே செய்ய வேண்டும், எனவே நீ எப்பொழுதுமே சரியானதையே செய். இப்பொழுது, அதை இப்பொழுது நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதை நீங்கள் மறக்காதீர்கள், நீங்கள் மறப்பீர்களா? 214 இப்பொழுது, அவர்கள் இப்பொழுது என்ன செய்தனர்? அப்பொழுது அவர்கள் அந்தச் சிறிய குழந்தையை எடுத்து, அதில் வைக்க ஆயத்தமாயினர். குட்டி ஆரோன் வந்து, அவன், “அப்பா, நம்முடைய குழந்தையை நீர் என்ன செய்யபோகிறீர்?” என்றான். 215 அதற்கு அவன், “ஆரோன், தேனே, இங்கே என் மடியின் மீது உட்கார்” என்றான். “இதோ பார், ஆரோன், இக்குழந்தையை நாமே வைத்துக்கொள்வோமானால், நாம் என்ன செய்யப்போகிறோம்?” [சபையார், “அதை இழந்துபோவோம்” என்கின்றனர்—ஆசி.] “அதை இழந்துபோவோம். ஆனால் இதை நமக்கு அளித்த அவருடைய கரங்களிடத்திலேயே இதை நாம் திருப்பி அளித்தால், நாம் என்ன செய்வோம்?” [“அதை காத்துக் கொள்வோம்.”] “நாம் அதைக் காத்துக்கொள்வோம்.” அது உண்மை. “ஆனால், அப்பா, நீர் எப்படி அதை செய்யப் போகிறீர்?” 216 “எனக்கு தெரியவில்லை, எப்படி அது நடைபெறப்போகிறது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் தேவன் அதைச் செய்யப் போகிறார்” என்றான். புரிகிறதா? 217 ஆகவே அப்பொழுது அவர்கள் அந்த சிறிய குழந்தையை அதற்குள் வைத்தார்கள், ஆகவே அவன் செல்கிறான். அவர்கள் இப்பொழுது வாசலண்டை செல்கிறார்கள், அவர்கள் வாசலண்டை சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் வாசலண்டை செல்கிறார்கள், அவன் இந்த ஒரு-வழியாக தெருவில் பார்க்கிறான், அந்த வழியாக தெருவில் பார்க்கிறான். அங்கே ஒருவரும் இருக்கவில்லை, யாரும் வரவுமில்லை. எனவே அவன், “வா, யோகெபேத், ஆரோன், வா, வா, மிரியாம், வாருங்கள். நாம் செல்வோம்” என்றான். 218 அவர்கள் தங்கள் சிறிய நாணற்பெட்டியை எடுத்துக்கொண்டு நதியண்டையில் கற்கள் வரிசையாக தளமாக இருக்கிற இடத்திற்குச் செல்கிறார்கள். ஓ, வெளிச்சம் வருவதற்கு நீண்ட நேரம் இருந்தது. இங்கே குட்டி ஆரோன் வருகிறான், குட்டி மிரியாமும் அங்கே பின்னால் பற்றிப் பிடித்துக்கொண்டு, குட்டி சகோதரனும் சகோதரியும், அவர்கள் அழுதுகொண்டிருந்தனர். பரிதாபமான எளிய யேகொபேத், “தேம்பி, தேம்பி, தேம்பி, தேம்பி” அழுதவாறே சென்றுகொண்டிருக்கிறாள். “உஷ்-உஷ்-உஷ்-உஷ்-உஷ்! அவர்கள் வீதியை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜாக்கிரதையாயிருங்கள். உஷ்! ஜாக்கிரதையாயிருங்கள்.” இதோ தெருவில் நடந்து செல்கிறார்கள். “உஷ்- உஷ்-உஷ். ஜாக்கிரதையாயிருங்கள்.” குழந்தையை ஆயத்தம் செய்கின்றனர். அம்மா குழந்தையைத் தூக்கிக்கொண்டிருந்தார், மேலும்—மேலும் அப்பா நாணற்பெட்டியைத் தயார் தூக்கிக்கொண்டிருந்தார். 219 அவர்கள் நதிக்குச் செல்கின்றனர். ஓ, அது ஒரு மிகப்பெரிய நதி, கிட்டத்தட்ட, உலகத்திலே இருக்கிற பெரிய மகத்தான நதிகளில் இரண்டாவதாகும். எனவே, மிகப் பெரிய நதி, எப்பொழுதும் தண்ணீர் வேகமாக ஓடும், பெரிய பெரிய வயதான முதலைகள் நிறைந்த நதி. ஓ, அவைகள் கொழுத்திருந்தன. வ்யூ! அவர்கள் சிறு பிள்ளைகளை அவைகளுக்கு இரையாக கொடுத்திருந்தனர். ஆகவே அவைகள் கொழுத்திருந்தன. மேலும்—மேலும் அவள் கூறுகிறாள், யோகெபேத் தன்னுடைய கணவனாகிய அம்ராமிடம், “ஓ, இந்த முதலைகள் அதைப் பிடித்துக்கொண்டால் என்ன செய்வது? இங்குள்ள முதலைகள் அதைத் தொட்டால் என்ன செய்வது?” என்றாள். 220 அவன், “‘கவலைப்படாதே, இந்தத் தாரின் மேல் தங்கள் மூக்கை வைக்குமானால், அவைகள் ஓடிவிடும், புரிகிறதா. காரணமென்றால் தார் நாற்றமடிக்கும், பார். அதனால் நாற்றத்தை தாங்க முடியாது” என்றான். “அதனால் மானிட மாமிச வாசனையை முகர்ந்து பார்க்க முடியாது, அதனால் அது போய்விடும். அவைகள் ஓடிப்போகுமளவிற்கு அந்த தார் அவ்வளவு துர்நாற்றம் வீசும். ஆதலால் ஒன்றுமே ஆகாது. நீ கவலைப்படாதே” என்றான். ஆகவே அவர்கள்…ஆகவே அம்ராம் அந்த சிறிய நாணற்பெட்டியைக் கீழே வைத்தான். அவள் கூறினாள்…“இப்பொழுது குழந்தைக்கு பால் கொடு” என்றான். 221 ஆகவே அந்த தாய் அந்த குழந்தையை எடுத்து பாலூட்டுகிறாள், மேலும் அவள் குழந்தைக்கு காலை உணவாக, அதிகாலையிலே, அதற்கு பாலைக் கொடுக்கிறாள். பிறகு அவள் [சகோதரன் பிரான்ஹாம் முத்தமிடுகிற சத்தத்தை உண்டாக்குகிறார்—ஆசி.] அதற்கு முத்தமிடுகிறாள். பிறகு, “இப்பொழுது, ஆரோனே, நீ இதற்கு முத்தமிடு” என்றாள். ஆரோன் அதற்கு முத்தமிடுகிறான். பிறகு மிரியாமிடம் அதைக் கொண்டுபோகிறாள், அவளும் அதற்கு முத்தம் கொடுக்கிறாள். பிறகு தாய் அதற்கு முத்தமிட்டு, “ஓ,” அவள், “என்னால்…” என்றாள். 222 “இப்பொழுது, உஷ்-உஷ்-உஷ்! இப்பொழுது கவனியுங்கள், நாம் யுத்த வீரர்களாக இருக்க வேண்டும். புரிகிறதா? நாம் யுத்த வீரர்களாக இருக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் எல்லாரும் இதை மறுபடியுமாக முத்தமிட விரும்புகிறீர்களா?” மறுபடியுமாக, சுற்றியுள்ள, எல்லோரும் அதற்கு முத்தமிட்டார்கள். பிறகு அவர்கள் அதை பெட்டிக்குள் வைத்தார்கள். 223 ஆகவே அந்தத் தாய் ஒரு சிறிய போர்வையை, ஒரு சிறிய தலையணையைச் செய்தாள். அதன் மேல் வைத்தாள். அவள், “என்னுடைய அருமையான சிறிய குழந்தையே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக” என்றாள். “உஷ்-உஷ்-உஷ்! இப்பொழுது, தேவன் அதைப் பார்த்துக்கொள்வார். கவலைப்படாதே.” 224 சிறிய மூடியை மூடினார்கள். ஆகவே முதலாவது காரியம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா, அப்பா தன்னுடைய கோட்டையும், தன்னுடைய சட்டையையும் கழற்றத் தொடங்குகிறார். இதோ அவர் போகிறார், தண்ணீருக்குள் நீந்திச் செல்கிறார். 225 இந்தச் சமயத்தில், பரலோகத்தில் என்ன நடந்துகொண்டிருந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? அல்லேலூயா! உங்களுக்குத் தெரியுமா, இங்கே காரியங்கள் நடைபெறுகின்றபோது, அங்கே பரலோகத்தில், கூட, ஏதோ நடந்துகொண்டிருக்கும். ஆமென்! தேவன் தம்முடைய சிங்காசனத்திலிருந்து எழுந்து, நடந்து சென்று, “காபிரியேல்! காபிரியேல்! நீ எங்கேயிருக்கிறாய்?” என்று கூப்பிடுவதை என்னால் காண முடிகிறது. காபிரியேல், “கர்த்தாவே, இதோ நான் இருக்கிறேன்” என்றான். 226 “இங்கே வா! உனக்கு ஒன்றை நான் காண்பிக்க விரும்புகிறேன்!” “தூதர்களே எல்லாரும் இங்கே சுற்றி வாருங்கள், ஒரு நிமிடம், நான் உங்களுக்கு ஒன்றை காண்பிக்க விரும்புகிறேன். என்னை விசுவாசிக்கிற ஜனங்களை நான் கொண்டிருக்கிறேன். ஆம், என்னில் நம்பிக்கை வைக்கிற ஜனங்களை நான் கொண்டிருக்கிறேன். இங்கே வாருங்கள், ஒரு நிமிடம்! தூதர்களே உங்கள் எல்லோருக்கும் இது நல்லதாக இருக்கும், இதை ஒரு பார்வை பாருங்கள். பாருங்கள்!” “அது எங்கேயிருக்கிறது?” “அதோ அங்கே கீழே. நோக்கிப் பாருங்கள்.” “ஆமாம், ஆம். ஆம், நான் அதைக் காண்கிறேன்.” 227 “இதோ இங்கே கீழே பார். அங்கே நீண்ட நாணற் செடிகளில் அவைகளினுடைய—அவைகளினுடைய—அவைகளினுடைய முனைகளையும், அவைகளின் கொடிகளையும் மற்ற காரியங்களையும் பார்த்தீர்களா?” “ஆமாம்.” “அங்கே பார்!” “அது என்ன?” 228 “அங்கே ஒரு மனிதன் தன்னுடைய கரங்களையுயர்த்தி, தன்னுடைய முழங்காலில் நின்று, என்னைக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறான். அங்கே அழுதுகொண்டிருக்கிற தாயும், இரு சிறு பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவர்கள் கடைசி வரை என்னிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். காபிரியேல், நீ அங்கே சென்றதை நினைவில் வைத்திருக்கிறாயா? அந்த மனிதனை ஞாபகங் கொண்டிருக்கிறாயா?” 229 “ஆம், அந்த இரவில் அந்த அறையில் அவனை சந்தித்து பேசினேன். ஹூ-ஹூ.” 230 “அவன் இன்னும் என்னில் நம்பிக்கை வைத்திருக்கிறான். என்னை விசுவாசிக்கின்ற ஜனங்களை நான் கொண்டிருக்கிறேன்! இறுதி வரை என்னில் நம்பிக்கையாயிருக்கிற ஜனங்கள் எனக்கு இருக்கின்றனர்!” [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை ஆறு முறை தட்டுகிறார்—ஆசி.] “அவனைப் பார்த்தாயா? அவனைப் பார்.” “ஆம், ஓ, அது வீரமல்லவா!” 231 ஆகவே அந்த தகப்பன் அந்த சிறிய படகை தள்ளிவிடுவதற்காக தண்ணீரில் நடக்கிறான். “காபிரியேல்!” என்று அவர் கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. “என்ன, கர்த்தாவே?” 232 “பத்தாயிரம் தூதர்களை இப்பொழுது காட்சியில் கூப்பிடு. சீக்கிரமாக இப்பொழுதே கட்டளை கொடுத்து அனுப்பு. வானத்தின் சேனைகளையெல்லாம் கூப்பிடு. அவைகள் வானத்தின் பலகணி வழியாக கீழிறங்கச் செய்து நைல் நதியண்டை அவைகளைக் கொண்டு வந்து நிறுத்து. ஒரு முதலையும் அந்த சரக்குப் பெட்டியை தொடக் கூடாதென்று நான் கட்டளையிடுகிறேன்! ஒன்றுமே அதைத் தொடாது! அந்த பெட்டியின் அருகே ஒரு சிறு கட்டைக்கூட வராதவாறு பார்த்துக்கொள்.” அல்லேலூயா! 233 காபிரியேல், “அது அப்படியே செய்யப்படும்” என்றான். என்னே! அவன் ஒரு எக்காளத்தை ஊதினான்! பத்தாயிரம் தூதர்கள் கைகோர்த்து அங்கு வந்து நின்றனர்! “மாலுமியானவரே. கர்த்தாவே, நீர் எங்கேயிருக்கப் போகிறீர்?” 234 “மறுமுறையில் நான் இருப்பேன்.” எப்பொழுதுமே அவர் பெற்றுக்கொள்ளுகிற கடைசியில் தான் இருக்கின்றார். “நான் அங்கே மறுமுனையில் காத்திருப்பேன். எனக்கு ஒரு நோக்கம் உண்டு. ஜனங்கள் என்னில் நம்பிக்கை வைக்கும்போது, நான் ஏதோ, ஒரு நோக்கத்தை உடையவனாக இருக்கிறேன்; அது அவர்களோடு எல்லாம் சரியாக இருக்கும்.” அது சரி, அவர் மறுமுனைக்குச் செல்கின்றார். 235 மோசேயை என்னால் காண முடிகிறது…இல்லை குட்டி ஆரோன், அவர்கள் அழுது கொண்டே தெருவில் செல்கின்றனர். “உஷ்-உஷ்-உஷ்-உஷ்-உஷ்! அதைக் கவனியுங்கள்.” 236 மேலும் குட்டி மிரியாம், அவள் அங்கே இன்னமும் நின்று, கவனித்துக் கொண்டிருக்கிறாள், அவள், “ஓ! ஓ!” என்றாள். 237 “மிரியாம், சீக்கிரமாக வா. விடியற்காலமாகிறது. சீக்கிரம் வா, நாள் விடிகிறது என்று சேவல்கள் கூவுகின்றன. சீக்கிரம் வா, பகல் வெளிச்சம் வருகிறது. தேனே, சீக்கிரம் வா, நாம் போவோம்!” என்றான். 238 “ஓ, அப்பா, அப்பா! தயவு செய்து ஒரு முறை. நான் நின்று என்ன நடக்கிறது என்பதை நான் காணட்டும். சிறிது நேரம் கழித்து நான் வீட்டிற்கு வருகிறேன்” என்றாள். 239 “ஓ,” [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய விரலை சொடுக்குகிறார்—ஆசி.] “அது அருமையான யோசனை, மிரியாம். அது சரியாகத்தான் இருக்கிறது. நீ நின்று என்ன நடக்கப்போகிறது என்று பார்த்துக் கொண்டு இரு” என்றான். “அது சரி, நான்—நான் அதை கவனிக்கிறேன்.” 240 “இப்பொழுது, நீ சிறிது நேரம் கழித்து வேகமாக வீடு திரும்பி வா. என்ன நடக்கிறது என்பதை மாத்திரம் பார். என்ன நடக்கிறது என்ற, செய்தியை, நீ வீட்டிற்கு கொண்டு வா.” “சரி, அப்பா.” மேலும் அவர்கள் வேகமாக, செல்ல வேண்டியதாய் இருந்தது. 241 சிறிய மிரியாம் அவள் நின்று கவனித்துக் கொண்டிருக்கிறாள். முதலாம் காரியம் என்ன தெரியுமா, வெளிச்சம் வருகின்றது. “ஒ, ஓ, ஓ, அங்கே என்ன வருகிறது? அது—அது ஒரு மரத்துண்டு. இல்லை. அது ஒரு முதலையா? ஓ, அது திரும்பிவிட்டது.” 242 ஹா-ஹா! அந்த முதலை எதைக் கண்டது? அந்த முதலை பல மக்கள் காணததைக் கண்டது. பார்த்தீர்களா? அந்த சிறிய சரக்கு, அங்கே மிதந்துகொண்டிருந்தது. அதற்கு எந்த ஒரு மாலுமியும் இல்லை என்று அவர்கள் எண்ணினர்; அதற்கு எந்த ஒரு தலைவனும் இல்லை என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் அதற்கு இருந்தது. அவர்கள் சுற்றிலும் கூடியிருந்தனர். 243 இங்கே ஒரு சிறிய முதலை வருகின்றது, “ஓ, அங்கே பார்!” என்றது. இதோ அது அந்த விதமாக மிதந்துகொண்டே வருகிறது. அது போய்…ஓ, இல்லை. வேண்டாம், வேண்டாம். அந்த சரக்குக்கு அருகில் அவனால் செல்லவே முடியாது. அங்கே விடுதலை செய்பவர், விடுவிப்பவர் நின்றார், முப்பது இலட்சம் யூதர்களுக்கு விடுதலை தேவைப்பட்டது. [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை ஐந்து முறை தட்டுகிறார்—ஆசி.] பாதாளத்தில் இருக்கின்ற எல்லா பிசாசுகளாலும் அவனைத் தொட முடியவில்லை. இந்த சிறிய கீல் பூசப்பட்ட நாணற்பெட்டி, இங்கே நதியிலே மிதந்து கொண்டு வருகிறது. 244 முதலாவது காரியம் என்ன தெரியுமா, அது ஒரு சுழலில் சிக்கிக்கொள்கிறது. “ஓ!” மிரியாம், “ஓ! ஓ! அதைப் பார்! அந்த சுழலை, அதைப் பார்! அந்த விதமாகவே அதைப் பார்!” என்றாள். முதலாவது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, தீடிரென்று அது வெளியே சென்றது. 245 அந்த வழியாகத்தான் அது செல்லுகிறது. சில சமயங்களில் நாமும், ஒரு சுழலில் சிக்கிக்கொள்கிறோம், இந்த சிறிய பட்டை. கவலை கொள்ளாதீர். ஒருவர் கவனித்துக்கொண்டிருக்கிறார். “தேவனுடைய தூதர்கள் அவருக்கு பயந்தவர்களைச் சூழ பாளயமிறங்கியுள்ளனர்.” அவர்களில் பத்தாயிரம் பேர் பவனிசெல்லவிருக்கும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 246 குட்டி மிரியாம், அவள் சென்று, ஒரு பெரிய பாறையின் மேல் ஏறி, அவள் இந்த விதமாக நோக்கிப் பார்க்கின்றாள். ஆகவே அவள் கீழே ஓடுகிறாள், அவள் நாணற்பெட்டியை கவனிக்கிறாள். மேலும் அவள் இங்கே, இந்த கொடி புதர்களினுள் செல்கின்றாள். சிறிது நேரம் கழித்து அந்தப் பெட்டி அப்படியே சிக்கிக்கொண்டது. “ஓ! ஓ, நான் ஆச்சரியப்படுகிறேன்!” என்றாள். 247 (இப்பொழுது அவளுடைய தகப்பன் அவளிடம் கூறினான், “இப்பொழுது அதை நீ கவனித்துக்கொண்டிருக்கிறாய் என்பதை யாரும் அறியாதவாறு பார்த்துக்கொள். யாராவது அங்கே வந்தார்களானால், அதை நீ பார்க்காதது போல இருந்து, வேறு வழியாகச் செல். அதை நீ கவனித்துக்கொண்டிருக்காதது போல சென்றுகொண்டேயிரு, தொடர்ந்து அவ்வாறே செல்” என்றான். அவளும், “சரி” என்றாள்.) 248 அவள் கரைக்கு கீழே செல்கிறாள். அது சிக்கிக்கொள்கிறது. முதலாவது காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, ஒரு பெரிய மீனவர் குழு அங்கு உள்ளது. மேலும் அவள் கீழே நடந்து செல்லும் ஒரு சிறுமியைப் போல அவள் நடந்துகொள்கிறாள். அது இப்பொழுது பகல் பத்து மணியாக உள்ளது, உங்களுக்குத் தெரியுமா, ஆகவே அவள் நதியோரமாகவே நடந்து சென்று கொண்டிருந்தாள். அது எங்கே செல்கிறதென்று காண, அவள் தன்னுடைய கண்களைத் திருப்பி, பக்கவாட்டில், தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கிறாள். 249 சிறிது நேரம் கழித்து மற்றொரு குழுவை அவள் கடந்து செல்கிறாள். அவள் கவனித்துக் கொண்டேயிருக்கிறாள்; இன்னும் சிறிது தூரம் செல்கிறாள். தொடர்ந்து செல்கிறாள், சிறிது தூரம் செல்கிறாள். 250 சிறிது நேரம் கழித்து ஒரு பெரிய மதிலண்டை வந்தாள். “ஓ, என்னே, இந்த சுவற்றிற்கு பின்னால் செல்கிறதே!” என்றாள். அவளால் என்ன செய்ய முடியும்? என்ன செய்ய வேண்டுமென்று அவளுக்குத் தெரியவில்லை. அவளால் சுவற்றின் மீது ஏற முடியவில்லை, எனவே அவள் தண்ணீருக்குள் நீந்திச் சென்று, இந்த விதமாக ஏறிச் சென்று, மேலே ஊர்ந்து செல்கிறாள். அவள் அங்கே மேலேறி, தொடர்ந்து அவள் நடந்துகொண்டேயிருக்கிறாள். 251 முதலாவதாக காரியம் என்னவென்று உங்களுக்கும் தெரியுமா, அவள் ஒரு அழகான தோட்டத்தில் இருக்கின்றாள். பூக்கள் எங்கும் பூத்துக் குலுங்குகின்றன, அது மிகவும் அழகாக இருக்கிறது. இப்பொழுது அப்படியே ஒரு நிமிடம் கவனியுங்கள். சிறுமிகளே, இப்பொழுது கவனியுங்கள். அழகான பூக்கள், ஓ, எல்லா மரங்களும் அழகாக ஒழுங்காக கத்தரிக்கப்பட்டிருந்தன. அது மிகவும் அழகாக காணப்பட்டது! அது ஒரு பூங்காவாக இருந்தது. “ஓ,” அவள், “அங்கே, அதைப் பார்! ஓ என்னே! நான் இங்கே அரண்மனை பூங்காவில், பார்வோனுடைய அரண்மனை பூங்காவில் இருக்கிறேன். இங்கே நான் என்ன செய்யப் போகிறேன்? என்னை அவர்கள் இங்கே கண்டுபிடித்தார்களானால், ஓ, என்னே, அவர்கள் எனக்கு என்ன செய்வார்கள்?” என்றாள். 252 மேலும் அவள் கவனித்தாள். அதோ அந்த சிறு நாணற்பெட்டி போகிறது, மேலும் அது ஒரு விதமாக தண்ணீரில் அங்கே நின்று, அங்கே தண்ணீரில், மிதக்கத் தொடங்குகிறது. ஏன் என்று நான் வியக்கிறேன். யாரோ ஒருவர் பேசிக்கொண்டிருப்பதை அவள் கேட்கிறாள். அவள் புதர்களுக்கு பின்னால் நழுவி மறைந்துகொள்கிறாள். அவள் அமர்ந்து அந்த விதமாக பார்த்தாள், உங்களுக்குத் தெரியுமா, குட்டி மிரியாம் வெளியே எட்டி, அதைப் பாரக்கிறாள். 253 முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, பெரிய கறுப்பு மனிதர் ஒரு பந்தலை இதைப் போன்று சுமந்துகொண்டு வருகின்றனர். பணிப் பெண்கள் பின்தொடர்கிறார்கள், அவர்கள் பாடிக்கொண்டேயிருக்கின்றனர். இதோ ஒரு ஸ்திரீ வருகிறாள், அவள் தன்னுடைய தலையைச் சுற்றி ஒரு பெரிய பொன்னாலான பட்டையை அணிந்திருந்தாள், அதில் (இதைப் போன்று) வாயைத் திறந்து கொண்டிருந்த ஒரு பெரிய பாம்பின் உருவம் முன்னாலே இருந்தது. அவள் அழகான ஒரு ஸ்திரீயாக காணப்பட்டாள், அவள் அங்கே வருகிறாள். அவள் அழகான ஆடைகளையும், மேலே, மற்றவைகளையும் அணிந்திருந்தாள். பணிப்பெண்களில் ஒருவள், “மேன்மைக்குரிய அரசியே, தண்ணீர் இந்த காலை வேளையில் வெப்பமாக இருக்கும் என்று நீர் நினைக்கிறீரா?” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. 254 அதற்கு மிரியாம், “‘மேன்மைக்குரியவரா’? ஓ, அது ராஜ பதவியாய் இருக்க வேண்டும், அப்படியானால் நான் பூங்காவில்தான் இருக்க வேண்டும். என்னை அவர்கள் இங்கு கண்டு பிடித்தார்களானால், எனக்கு என்ன செய்வார்கள்?” என்றாள். 255 சரி, அவள் வருகின்றாள், இந்த பெரிய கறுப்பு மனிதர் கம்பத்தை எடுத்து இதைப் போன்று பிடித்துகொண்டு, இந்த விதமாக தண்ணீரின் முனைக்கு நடந்து வருகின்றனர், அவள் காலணிகளை கழற்றினாள். ஒரு பணிப் பெண்ணிடம் துவாலைகள் இருந்தன, மற்றவர்கள் சோப்பை வைத்திருந்தனர். தன் காலை குளியலுக்காக அந்த அரசி வந்துகொண்டிருந்தாள். எனவே அவள் அங்கே சென்று, அவள் தன்னுடைய குளியலுக்கு ஆயத்தமாக துவங்குகிறாள். அவள் தன் காலணிகளை கழற்றுகிறாள். அவள், “என் கால் விரல்களை தண்ணீரில் வைத்து தண்ணீர் வெப்பமாக இருக்கிறதா என்று பார்க்கிறேன். ஓ, அது நன்றாக இருக்கிறது, அப்படியே…அங்கே இருப்பது என்ன?” என்றாள். 256 “ஓ!” மிரியாம், சிறிய மிரியாம், “ஓ! ஹு-ஹா, அவள் அந்த நாணற்பெட்டியைக் கண்டு பிடித்துவிட்டாள்” என்றாள். “ஓ.” அவள். “அது முதலையாயிருக்குமோ?” என்றாள். 257 அங்கிருந்த அந்த பெரிய பலசாலியான மனிதர்களில் ஒருவன், “ஒரு நிமிடம், நான் கண்டுபிடிக்கிறேன்” என்றான். தண்ணீருக்குள் தெறிக்க, தெறிக்க, தெறிக்க நடந்து செல்கிறான். இதைப் போன்று பெட்டியை எடுத்துக்கொண்டு, நடந்து வருகிறான். “மேன்மைக்குரியவரே!” என்றான். பின்னர் அதை பணிப்பெண்ணிடம் கொடுத்தான். ஆகவே அந்த பணிப்பெண் அதை எடுத்துச் சென்று, அதை அவளிடம் இந்த விதமாக கொடுக்கிறாள், அவள் அதை கீழே வைக்கிறாள். 258 அவள், “அது என்ன? வ்யூ, நாறுகிறதே! முழுவதும் தார் பூசப்பட்டுள்ளதே. இங்கே பார், அதன் மேலே ஒரு சிறு துவாரம் காணப்படுகிறதே” என்றாள். 259 மிரியாம், “ஓ! ஓ, அதோ என்னுடைய சிறிய சகோதரன் செல்கிறான்! அதோ என்னுடைய சிறிய தம்பி செல்கிறான்!” என்றாள். 260 ஆகவே அவர்கள் இந்த விதமாக அதைத் திறந்தனர். “ஓ, அது ஒரு குழந்தையாயிருந்தது!” அது…தொடங்குகிறது, உலகத்தில் இருந்ததிலேயே அழகான சிறிய குழந்தை! ஆகவே, ஓ, வெறுப்பை உண்டாக்கக் கூடிய அதே தேவன், அன்பை உண்டாக்கக் கூடியவர்; தேவன் ஒரு மானிட இருதயத்தில் வைக்கவேண்டிய எல்லா அன்பையும், ஒரு தாய் ஒரு குழந்தைக்காக காட்டும் அன்பிலே வைத்ததை, அவர் அந்தப் பெண்ணினுடைய இருதயத்தில் வைத்தார். ஆகவே அவள், “இது எபிரெய…களில் ஒன்று, அது என்னவென்பதை நான் அறிவேன். என்னுடைய குரூர எண்ணம் கொண்ட தகப்பன்! அவர் மிகவும் கேவலமாக நடந்து கொள்கிறார்! எல்லா எபிரெயக் குழந்தைகளும் கொல்லப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆகவே தாய்மார்களில் ஒருத்தி எங்கேயாவது தன் குழந்தை கரை ஒதுங்கி பிழைத்துக்கொள்ளும் எனக் கருதி தங்களுடைய குழந்தையை நதியில் விட்டிருக்கிறாள். ஓ, அவர் மிகவும் தீய எண்ணம் படைத்தவர்! பாருங்கள், ஆனால் அவர் இதைக் கொல்லமாட்டார், ஏனெனில் இந்த ஒன்று என்னுடையதாகும்” என்று கூறினாள். ஹூ-ஹூ, தேவன் எவ்விதம் செய்கிறார் என்பதைப் பாரத்தீர்களா? 261 அவள் அந்தக் குழந்தையை எடுத்து, [சகோதரன் பிரான்ஹாம் முத்தமிடும் சத்தத்தை உண்டாக்குகிறார்—ஆசி.] அவள் அவனை முத்தமிடுகிறாள். அப்பொழுது அந்தக் குழந்தை அழுதது. அது அழுதபோது, அவளுடைய இதயம் நெகிழ்ந்துபோனது. அவள், “பாவம் சிறிய பிள்ளை” என்றாள். “நான் இவனை வைத்துக்கொள்வேன், நான் இவனை…அழைக்கப்போகிறேன், நான் அவனுக்கு ஒரு பெயரைக் கொடுக்கப்போகிறேன்” என்றாள். அங்கே தான் அவன் தன்னுடைய பெயரை பெற்றுக்கொண்டான். 262 அவனுடைய பெயர் என்னவாயிருந்தது? [சபையார், “மோசே” என்கின்றனர்—ஆசி.] மோசே. மோசே என்றால் “ஜலத்தினின்று எடுக்கப்பட்டவன்” என்று அர்த்தம். புரிகிறதா? 263 அவள், “இப்பொழுது நான் இவனை மோசே என்றழைக்கப்போகிறேன், இவன் என்னுடைய சொந்த குழந்தையாக இருப்பான். நான் அவனை பாதுகாத்துக்கொள்வேன். ஆனால் இப்பொழுது” என்றாள். அவள், “நான் ஒரு மணமாகாதவள். என்னால்—என்னால்—என்னால் இவனுக்கு பாலூட்ட வழியேயில்லை” என்றாள். பால் புட்டிகள் மற்றக் காரியங்கள் அவர்களிடத்தில் அப்பொழுது இருக்கவில்லை. இப்பொழுது இருக்கிறதுபோல அப்பொழுது ஸ்திரீகள் சிகரெட் பிடித்துக்கொண்டும், மற்றக் காரியங்களைச் செய்துகொண்டு, தங்களைக் கெடுத்துக்கொள்ளவில்லை. ஆகவே, “சரி, உங்களுக்குத் தெரிந்த ஒரு…” என்றாள். “நான் என்ன—என்ன செய்வேன்?” என்றாள். எனவே அவள், “நான்…” என்றாள். 264 அவர்களில் ஒருத்தி, “மேன்மைக்குரிய அரசியே, நான் உங்களுக்குச் சொல்லுவேன். உம்முடைய குழந்தைக்குப் பால் கொடுத்துக் காக்கும் செவிலித் தாயை நான் ஏற்பாடு செய்கிறேன்” என்றாள். “ஓ,” அவள், “அது மிகவும் அருமையானது” என்றாள். சிறிய… 265 அங்கே புதற்றண்டையில் நின்றிருந்த தூதன், ஏதோ பேசி, “மிரியாமே இதோ உன் தருணம்! இதோ உனக்குரிய வாய்ப்பு!” என்றான். குட்டி மிரியாம் ஓடி வந்தாள். “ஒரு காரியத்தையும் இப்பொழுது கூறாதே, எதையும் சொல்லிவிடாதே. நீ வெளியே போய், நீ ‘ஒரு செவிலித்தாயைக் கண்டுபிடிப்பாய்’ என்று மட்டும் கூறி, உன்னுடைய தாயாரைக் கூட்டிக் கொண்டு வா” என்றான். சரி, ஆகவே அவள் அதையேக் கூறினாள். அவள், “மேன்மைக்குரிய அரசியே!” என்றாள். 266 இப்பொழுது, சாதாரணமாக, “இங்கே நீ என்ன செய்துக் கொண்டிருக்கிறாய்?” என்றுதான் அந்த அரசி கேட்டிருப்பாள். ஆனால், பாருங்கள், தேவன் அதை முழுவதுமாக மறைத்துக்கொண்டிருந்தார். ஏன்? அவர் பத்தாயிரம் தூதர்களை அங்கே பணியில் வைத்திருந்தார். பார்த்தீர்களா? அவருடைய திட்டம் அங்கே சரியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவர் பத்தாயிரம் தூதர்கள் அங்கே நின்றுகொண்டிருக்கக் செய்தார். 267 ஆகவே முதலாவது காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, “உம்முடைய…” என்றாள். அவள், “ஆம், அருமையான குட்டிப் பெண்ணே, நீ இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” என்றாள். 268 அதற்கு இவள், “இப்பொழுது தான் உம்மை குழந்தையுடன் நான் கண்டேன்,” என்றாள். “உமக்காக உம்முடைய குழந்தையை நன்றாக கவனித்துக் கொள்ளக்கூடிய ஒரு அருமையான தாயை எனக்குத் தெரியும்” என்றாள். 269 அவள், “போய், அவளை அழைத்தக் கொண்டு வா, இந்த குழந்தையை பராமரிக்க வாரம் முந்நூறு டாலர்கள் தருகிறேன் என்று அவளிடம் சொல், இந்த அரண்மனையில் இருக்கின்ற எல்லா அறைகளையும் நான் அவளுக்கு அளிக்கிறேன். ஆகவே இந்த குழந்தைக்கு பாலூட்டுகின்ற ஒரு எபிரெய ஸ்திரீ உனக்குத் தெரிந்தால், அதாவது ஒரு செவிலித்தாய் எங்கேயிருந்தாலும் அவளை அழைத்துவா, இது என்னுடைய குழந்தை” என்றாள். “ஆம், மேன்மைக்குரிய அரசியே, நான் உமக்கு ஒரு தாயை கொண்டு வருவேன்” என்றாள். 270 அவள், “ஒரு நிமிடம் பொறும்! நீ அரண்மனைக்குள்ளாக செல்வதற்கு முன், நீ ஒரு இரகசிய கடவுச் சொல்லை உடையவளாயிருக்க வேண்டும். பார், உனக்கு அந்த இகரசிய கடவுச் சொல் தெரியாது. ஒவ்வொருநாளும் ஒரு இரகசிய கடவுச் சொல் நாங்கள் கூறி வைத்திருப்போம். இப்பொழுது, இன்றைக்குரிய இரகசிய கடவுச் சொல் என்னவென்று உனக்குத் தெரியுமா? ‘நீண்ட கவைக் கொம்பும், ஒரு வைக்கோல் போரும்.’” ஆகவே, “நீ கதவின் வழியாக சென்று வர இதைத்தான் கூற வேண்டும்” என்று கூறினாள். 271 ஆகவே இந்தச் சிறிய மிரியாம், வீட்டிற்கு தன்னால் முடிந்தவரை மிக வேகமாக ஓடினாள், சுவற்றின் மேலேறி குதிக்கிறாள், தெருவில் செல்கிறாள், இந்த வழியில் செல்கிறாள், மற்றும் கீழே இந்த வழியில், அவள் செல்ல முடிந்தளவு வேகமாக சென்றாள். அவள் வீட்டிற்குள் ஓடிச் செல்கிறாள். 272 மேலும்—மேலும் அம்ராம் அப்பொழுது தான் வீட்டிற்கு வந்திருந்தான், யோகெபேத். மேலும், ஓ, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் குறித்து, அவர்கள் மிகவும் கவலையுள்ளவர்களாக காணப்பட்டனர். அவள், “ஓ, என் குழந்தை! என் குழந்தை!” என்றாள்.அவள்… 273 அவன், “இப்பொழுது கவனி” என்றான். “சிறிது நேரத்திற்கு முன்தான் நான் தெருவில் வந்தேன், அந்த பரிதாபமான தாய் நாள் முழுக்க எவரையுமே நித்திரை செய்யவிடவில்லை. அவர்கள் இக்காலை இந்த சுற்றுப்புறத்தின் வழியாக வந்து, அவர்கள் அங்கிருந்த எல்லா குழந்தைகளின் தலைகளையும் சுவற்றில் மோதிக் கொன்றனர்.” மேலும், “எப்படி அவர்கள் ஓலமிட்டு அழுது கொண்டிருந்தனர்! இப்பொழுது, உங்களுடைய குழந்தை, எங்கே உள்ளது என்று தெரியாது. நம்முடைய குழந்தை எங்கேயிருந்தாலும், தேவன் அதைப் பார்த்துக்கொள்வார்” என்றான். 274 அப்பொழுது ஏதோ சென்றது…[சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை தட்டுகிறார்—ஆசி.] “ஓ! ஓ! இதோ இப்பொழுது அவர்கள் கதவண்டையில் நிற்கிறார்கள்.” ஆகவே, அவர்கள் சென்று பார்க்கின்றனர். இல்லை, அது அவர்கள் இல்லை. அது மிரியாமாயிருந்து. 275 அவள், “ஓ! ஓ, மிரியாம்! அருமையானவளே, உள்ளே வா! குழந்தைக்கு என்னவாயிற்று?” என்று கேட்டாள். அவள், “அம்மா, எனக்கு மிகவுமாக பசியாயுள்ளது” என்றாள். “ஆனால் குழந்தைக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டாள். 276 அவள், “அம்மா, நான் பட்டினியாயிருக்கிறேன்” என்றாள். “ஓ, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அல்லேலூயா! அம்மா, நான் பட்டினியாயிருக்கிறேன்” என்றாள். “ஆனால் குழந்தைக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டாள். 277 “அம்மா, நான் மிகவும் பசியாயிருக்கிறேன், வீட்டில் இருக்கிற எல்லாவற்றையும் என்னால் சாப்பிட முடியும்” என்றாள். 278 “நீ சாப்பிட நாங்கள் எதையாவது கொண்டு வருவோம், ஆனால் குழந்தைக்கு என்ன ஆயிற்று?” [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தின் மேல் மூன்று முறை தட்டுகிறார்—ஆசி.] 279 “அம்மா, குழந்தைக்கு எந்த ஒரு குறையும் இல்லை. சாப்பிட எதையாவது எனக்குத் தாருங்கள். ஓ, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்!” என்றாள். “ஆனால் அதற்கு என்ன ஆயிற்று?” 280 “சரி, எனக்கு சாப்பிட எதையாவது எனக்குத் தாருங்கள், நான் பட்டினியாயிருக்கிறேன்” என்றாள். உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? 281 அவள், “மிரியாம்! நாங்கள் உன் அம்மா, அப்பா. குழந்தை எங்கே?” என்று கேட்டாள். [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தின் மேல் மூன்று முறை தட்டுகிறார்—ஆசி.] 282 அதற்கு அவள், “அம்மா, நான் உனக்கு கூறிவிட்டேன். குழந்தையை, நான் அதைக் கண்டேன், அது நன்றாக இருக்கிறது. இப்பொழுது, அம்மா, சாப்பிட ஏதாவது எனக்குத் தாருங்கள்; நான் பட்டினியாயிருக்கிறேன். உங்களுக்குத் தெரியும், நான்—நான் பட்டினியாயிருக்கிறேன்” என்றாள். நீங்கள் பள்ளியிலிருந்து திரும்பி வந்தவுடன் கேட்பதுபோல, உங்களுக்குத் தெரியும்; ஓ, ஏதாவதொன்று உங்களுக்கென இருக்க வேண்டும். ஆகவே அவள் சென்று ஒரு இறைச்சி கலந்த ரொட்டியை கொண்டு வந்தாள். தொடர்ந்து, “இப்பொழுது கூறு” என்றாள். 283 அவள், “யம், யம், யம்” என்று சாப்பிட்டுக் கொண்டே, உங்களுக்குத் தெரியும், அதேப்போன்றே சாப்பிட்டாள். “அம்மா?” என்றாள். “சரி, குழந்தைக்கு என்ன ஆயிற்று?” என்றாள். 284 “ஏன்,” “அம்மா…” என்றாள். இவள் நடந்த யாவற்றையும் அவளுக்கு கூறினாள். பிறகு, “‘அம்மா, உங்களுடைய சிறந்த துணிமணிகளை எடுத்துக்கொண்டு, உங்களுடைய கைப்பெட்டியை ஆயத்தப்படுத்துங்கள், ஏனெனில் நீதான் குழந்தையை பராமரிக்கப் போகிறாய்” என்றாள். ஓ! ஓ! ஓ! “என்ன?” 285 நீங்கள் அதை இழந்தால், மறுபடியுமாக அதை கண்டெடுப்பீர்கள். அது சரியா? நீ அதை வைத்துக் கொள்வாயானால், அதை நீ இழந்து போவாய். நீ அதைக் கொடுத்தால், அதை இழந்தால், நீ அதைப் பெற்றுக்கொள்வாய். அது சரியா? 286 ஆகவே சிறிய மிரியாம் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தாள். “ஆம்,” என்று கூறி, “இன்றைக்கு நீங்கள் அரண்மனைக்குச் செல்லப் போகிறீர்கள். அது மாத்திரமல்ல, ஆனால் உம்முடைய சொந்த குழந்தையை வளர்க்க, உமக்கு வாரம் முந்நூறு டாலர்களும், தேசத்திலேயே சிறந்த அறைகள் உங்களுக்கு அளிக்கப்படும், உங்களுக்கு, கொடுக்கப்படும்” என்றாள். 287 உலக சரித்திரத்திலேயே தன்னுடைய சொந்தக் குழந்தையையே வளர்த்து பராமரிக்க ஒரு தாய்க்குச் சம்பளம் அளிக்கப்பட்டது. தேவன் எப்படிச் அதை செய்கிறார் என்று பார்த்தீர்களா? [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய கரங்களை மூன்று முறை தட்டுகிறார்—ஆசி.] அல்லேலூயா! தன் சொந்தக் குழந்தையையே வளர்த்து அதைப் பராமரிக்க வாரம் முந்நூறு டாலர் சம்பளமும், தேசத்திலேயே சிறந்த அறைகளும் கொடுக்கப்படுதல். தேவன் காரியங்களைச் செய்கிறார், அவர் செய்கிறார் அல்லவா? ஜெபிப்பதினால் பலன் உண்டா? [சபையார், “ஆம்” என்கின்றனர்.] ஜெபித்தல் நன்றல்லவா? [“ஆமென்.”] 288 ஆகவே, அவள் தன்னுடைய சிறிய கைப் பெட்டியை தயார் செய்தாள். நாம் சீக்கிரமாக செல்லுவோம், இன்னும் ஒரு நிமிடத்தில் நாம் முடிக்கப்போகிறோம். எனவே நாம்…ஆகவே அவள் தன் கைப் பெட்டியை ஆயத்தம் செய்து, தன்னால் முடிந்த வரை, சாலையில் வேகமாகச் சென்றாள். மேலும் முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, அவள் வந்தபோது; ஒரு வயோதிக காவலாளி தன்னுடைய மிகப் பெரிய ஈட்டியுடன் அங்கே நின்றுகொண்டு, “யார் அங்கே செல்வது?” என்று கேட்டான். அப்பொழுது அவள், “நீண்ட கவைக் கொம்பும் ஒரு வைக்கோல் போரும்” என்றாள். “செல்,” என்றான். தேவன் காரியங்களை எப்படிச் செய்கிறார் என்று பார்த்தீர்களா? 289 அவள் அடுத்த காவலண்டை சென்றாள். அவன் தன் பட்டயத்தை உருவி, “யார் நீ? அங்கு செல்வது யார்?” என்றான். அப்பொழுதும் அவள், “நீண்ட கவைக் கொம்பும், ஒரு வைக்கோல் போரும்,” என்றாள். “செல்” என்றான். என்னே! தேவன் எவ்விதமாய்க் காரியங்களைச் செய்கிறார் என்று பார்த்தீர்களா? 290 மேலே போ, அங்கே அரண்மனையினூடாக போய் பார்; மேலே செல்ல துவங்கும்போது, எல்லா போர்ச் சேவகரும் வெளியே வந்து, தங்கள் பட்டயங்களை உருவி நின்றனர். “யார் அங்கே செல்கிறது?” என்றனர். “நீண்ட கவைக் கொம்பும் ஒரு வைக்கோல் போரும்” என்றாள். “உள்ளே செல்.” 291 முதலாவது காரியம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா, ஒரு மனிதன் வெளியே வந்து, “மேன்மைக்குரிய அரசி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற சிறிய பெண் நீ தானா?” என்று கேட்டான். “ஆம்” என்றாள். 292 “இன்று காலை கண்டெடுக்கப்பட்ட குழந்தைக்கான, பாலூட்டி பராமரிக்கப் போகின்ற செவிலித்தாய் இவள்தானா?” என்று கேட்டான். “ஆம்” என்றாள். 293 “சரி, அவளை உள்ளே அழைத்து வா” என்றான். ஆதலால் அவள் குழந்தையை…இல்லை தாயை உள்ளே கொண்டு வந்தாள். 294 மேலும்—மேலும் அந்த சிறிய இளவரசி வெளியே நடந்து வந்து, “இந்த குழந்தைகளைப் பற்றி ஏதாவது உனக்குத் தெரியுமா?” என்று அவள் கேட்டாள். அவள், “ஆம், மேன்மைக்குரிய அரசியே” என்றாள். அப்பொழுது அவள், “இந்தக் குழந்தையைப் பார். இது அழகாய் இருக்கின்றதல்லவா?” என்றாள். “ஆம், மேன்மைக்குரிய அரசியே. ஆம்.” “இந்த குழந்தைக்கு பாலூட்டுவது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா?” என்றாள். “ஆம், மேன்மைக்குரிய அரசியே. நிச்சயமாக.” 295 “சரி,” அவர்கள், “நான் உனக்கு ஒரு வாரத்திற்கு முந்நூறு டாலர்கள், உனக்கு கூலியாகத் தருகிறேன்” என்றார்கள். ஹும்! தேவன் நல்லவர் தானே? பிறகு அவள், “அரண்மனையில் உள்ள சிறந்த அறைகள் உனக்குத் தரப்படும், உணவு உனக்கு அனுப்பப்படும். நீ வெளியில் வந்து, உனக்காக சமைக்க வேண்டிய அவசியமும் உனக்கு இல்லை. இப்பொழுது இதோ குழந்தை, கவனமாயிரு, கீழே போட்டுவிடாதே” என்றாள். “ஓ, கவலைகொள்ளாதீர், நான் கைவிடமாட்டேன். கவலைப்படாதீர், நான் இதைக் கைவிடமாட்டேன்.” “சிறந்த முறையில் நீ இதை பராமரிக்க வேண்டும்.” 296 “நீங்கள் கவலைப்படாதீர்கள், நான் பார்த்துக் கொள்ளுவேன். இது மிகச் சிறந்த முறையில் பராமரிக்கப்படும்.” நிச்சயமாக, அது அவளுக்கு சொந்தமானதாயிருந்தது, பாருங்கள். “நான் அதை மிகச் சிறந்த முறையில் கவனித்துக்கொள்வேன்.” “இது ஒரு அழகான குழந்தை என்று நீ பார்க்கிறாயா?” அவள், “மிகவும் அழகாயுள்ளது,” என்றாள். “அது சரி.” 297 கதவு மூடினது, மிரியாம், அவளது தாய் மற்றும் குட்டி மோசேயும் உள்ளே சென்றனர். கதவு மூடப்பட்டவுடனே, அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். அவள், “டஸ்க்-டஸ்க்-டஸ்க்! அவள் உன்னைத் தன்னுடைய குழந்தை என்று நினைத்துக்கொண்டாள். ஹா-ஹா-ஹா-ஹா-ஹா!” ஓ, என்னே! அவள் அதைக் கொஞ்சினாள். 298 அவள் என்ன செய்தாள்? அவள்…அவள் அதை வைத்திருந்தாளானால், அவள் என்ன செய்திருப்பாள்? [சபையார் “இதை இழந்து போயிருப்பாள்” என்கின்றனர்—ஆசி.] காரணம், அதை அவளுக்கு அளித்த அவரிடமே திருப்பி அளித்ததாள், அவள் அதில் (என்ன?) கண்டாள், அவள் அதை வைத்திருக்க முடியும். இப்பொழுது, நாம் அதை இழந்து…நம்முடைய ஆத்துமாவை நாமே வைத்துக்கொள்வோமானால் என்ன சம்பவிக்கும்? [“நாம் அதை இழந்து போவோம்.”] நாம் அதை இழந்துபோவோம். நாம் அதை நமக்களித்த அவரிடமே திருப்பி அளிப்போமானால், என்ன சம்பவிக்கும்? [“நாம் அதை காத்துக்கொள்வோம்.”] நாம் அதை காத்துக் கொள்வோம். அது சரியா? 299 எத்தனை பேர் இங்கே பீடத்தைச் சுற்றி வந்து ஜெபிக்க விரும்புகிறீர்கள்? அதைச் செய்ய நீங்கள் விரும்புகிறீர்களா? அவர்களையும், அந்தச் சிறிய குழந்தையை அவர் காத்துக்கொண்டது போல உங்களையும் இயேசு காத்துக்கொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா? எப்படி…இப்பொழுது சிறிய பிள்ளைகளாகிய நீங்கள் எல்லாரும் இங்கே இந்தப் பீடத்தை சுற்றி வாருங்கள். நீங்கள் அதைச் செய்வீர்களா? பீடத்தை சுற்றி வந்து, சுற்றிலும் முழங்காற்படியிடுங்கள். நாமெல்லாருமாக ஜெபிப்போம். எல்லா சிறிய பிள்ளைகளும் இங்கே வாருங்கள். இதைக் குறித்த என்னுடைய கதையை எல்லாரும் நீங்கள் விரும்பினீர்களா? [சபையார், “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] நீங்கள் அதை விரும்பினீர்களா? சரி, இப்பொழுது நீங்கள் பீடத்தை சுற்றி வாருங்கள். இப்பொழுது வாருங்கள். சிறு பிள்ளைகளே நீங்கள் எல்லோரும் வந்து, சுற்றிலும் முழங்காற்படியிடுங்கள், அங்கே கீழே—அங்கே பீடத்தண்டையிலே முழங்காற்பட்டியிடுங்கள். அதுதான். பின்னால் இருக்கின்ற சிறு பிள்ளைகளே நீங்கள் எல்லோரும், இப்பொழுது இங்கே வாருங்கள், நாங்கள் ஜெபிக்கப்போகிறோம். சரி. நீங்கள் வந்து ஜெபம் செய்ய வேண்டும். வந்து பீடத்தை சுற்றி முழங்காற்படியிடுங்கள். அது சரி. இப்பொழுது, அது நல்லது. அதெல்லாம் சரிதான். 300 இப்பொழுது, தாய்மார்களே, தந்தைமார்களே, நீங்களும் கூட வர விரும்புகிறீர்களா, நீங்கள் யாவரும் இடையிலுள்ள நடைப்பிரகாரத்தில் முழங்காற்படியிட விரும்புகிறீர்களா? 301 இப்பொழுது இங்கிருக்கிற சிறு பிள்ளைகளே உங்களை நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். கவனியுங்கள். அவர் மோசேயை நேசித்தது போல இயேசுவும் உங்களை நேசிக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தூதர்களும் இதைப் போன்று உங்களை கவனிக்கிறார்கள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, தேவன் உங்களுக்கு ஒரு ஆத்துமாவை கொடுத்தார். அவர் கொடுக்கவில்லையா? இப்பொழுது, உங்கள் ஆத்துமாவை நீங்களே வைத்துக்கொள்வீர்களானால், அதற்கு என்ன நேரிடும்? [பிள்ளைகள், “அதை இழந்துபோவோம்,” என்கின்றனர்—ஆசி.] நீங்கள் அதை இழக்கப்போகிறீர்கள். ஆனால் இந்தக் காலையில் இயேசுவினிடமே அதை நீங்கள் திரும்ப அளித்தீர்களானால், நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? [“அதைக் காத்துக்கொள்வோம்”] அதைக் காத்துக் கொள்ளப் போகிறோம்—போகிறோம். நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டும். இப்பொழுது நீங்கள் உங்களுடைய ஆத்துமா இரட்சிக்கப்பட விரும்புகிறீர்கள், நீங்கள் விரும்பவில்லையா? உண்மையான தாய்மார்களாகவும், உண்மையான ஸ்திரீகளாகவும் நீங்கள் வளர விரும்புகிறீர்களா, நீங்கள் விரும்பவில்லையா; உண்மையான மனிதனாகவும், பிரசங்கிகளாகவும் ஆக விரும்புகிறீர்களா? அதைச் செய்ய நீங்கள் விரும்பவில்லையா? இப்பொழுது, நீங்கள் அப்படி ஆக விரும்புவீர்களானால், அப்பொழுது உங்களுடைய ஆத்துமாவை இயேசுவுக்கு அளியுங்கள். அதைச் செய்வதற்கான வழி இதோ இருக்கிறது. நீங்கள், “அன்புள்ள இயேசுவே, உமக்கு அளிப்பதற்கென, நான் பெற்றுள்ளதெல்லாம், என்னுடைய ஆத்துமாவேயாகும், ஆனால் மோசேக்கு நீர் செய்தது போன்று நீர் என்னையும் கவனித்துக்கொள்ளும்” என்று நீங்கள் கூறுங்கள். 302 இப்பொழுது, இங்கே வந்து முழங்காற்படியிட விரும்பும் பெரியவர்களாகிய உங்களில் சிலர், தாய்மார்களில் சிலரும் கூட, ஒருவேளை, இந்தக் காலையில் நீங்கள் வந்து முழங்காற்படியிட விரும்பலாம். சரி, இது உங்களுக்காகவும் கூட, திறந்துள்ளது. இங்கே வந்து முழங்காற்படியிட, நீங்கள் விரும்புவீர்களானால் நல்லது. அது அருமையானது. இங்கே ஒரு தாய் தன்னுடைய சிறிய பையனோடு வருகிறாள். இன்னும் வேறு சிலர் உள்ளனரா? 303 ஒரு தந்தையும், தகப்பனும், உங்களில் இன்னும் யாராவது, அம்ராம் இருந்தைப்போல நீங்கள் ஒரு ஜெபிக்கும் மனிதனாக இருக்க விரும்பினால், நீங்களும் கூட வந்து, முழங்காற்படியிடுங்கள். 304 தாய்மாரே, யோகெபேத்தைப் போல நீங்கள் இருக்க விரும்பினால், ஏன், நீங்களும் கூட இங்கே வந்து முழங்காற்படியிடலாமே. 305 நிச்சயமாக, அது எல்லோருக்கும்தான். காரணம் (என்ன?) நீங்களும் கூட, ஒரு ஆத்துமாவைப் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் அதை வைத்துக்கொண்டால் என்ன சம்பவிக்கும்? [சபையார், “அதை இழந்துபோவோம்” என்கின்றனர்—ஆசி.] அதை இழந்துவிடுவீர்கள். உங்களுக்கு அதை அளித்த அவரிடமே அதை நீங்கள் திருப்பி அளித்தால், அப்பொழுது என்ன சம்பவிக்கும்? [“அதை இரட்சித்துக்கொள்வீர்கள்.”] நித்திய ஜீவனுக்கென்று, அதை இரட்சித்துக்கொள்வீர்கள். அது உண்மையே. இப்பொழுது உள்ள நீங்கள் யாவரும், நீங்கள் யாவரும் சேர்ந்து வரமாட்டீர்களா, இந்த சிறியவர்களோடும், நம்மோடும், இப்பொழுது நம்மோடுள்ள யாவரோடும், நாம் ஜெபம் செய்வோமாக. 306 அன்னையருடைய தினம், ஒரு அற்புதமான நாள். ஆகவே ஒருவேளை இன்றிரவில், நான் என்னுடைய பொருளை மாற்றி, அந்த தாய் என்ன செய்தாள், அந்த தாய் எப்படி செய்தாள் என்று நான் சொல்லலாம். இஸ்ரவேலர் எல்லாரையும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வழிநடத்திச் செல்ல அவள்தான் தன்னுடைய சிறு பையனுக்கு கல்வி கற்பித்தவளாயிருந்தாள். ஓ, அவள் ஒரு உண்மையான தாயாயிருந்தாள். அவள் ஒரு உண்மையான தாயாயிருக்கவில்லையா? [பிள்ளைகள், “ஆம்” என்கின்றனர்—ஆசி.] இப்பொழுது, உனக்கும் கூட, ஒரு உண்மையான தாய் இருக்கிறாள், தாய் உனக்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறாள். அவர் ஒரு உண்மையான தந்தை. தந்தை உனக்காக ஜெபித் துக்கொண்டிருக்கிறார். இப்பொழுது இயேசு நமக்கு உதவி செய்யும்படியாக, நாம் எல்லாருமாக சேர்ந்து ஜெபிக்கப்போகிறோம். சகோதரன் நெவில், நீர் வந்து எங்களுடன் முழங்காற்படியிடுவீரா? 307 நாம் யாவரும், எல்லா இடங்களிலும், நம்முடைய தலைகளை வணங்குவோமாக. இப்பொழுது சகோதரி கெர்டி…[இசைப்பேழையை இசைப்பவர், அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள் என்று பாடலை இசைக்கத் துவங்குகிறார்—ஆசி.] 308 அன்புள்ள பரலோகப் பிதாவே, முன்பு கடந்து போன பழைய நாட்களைக் குறித்து, இந்த எளிமையான கதையில், ஒரு உண்மையான தகப்பனும் தாயும், ஒரு உண்மையான விசுவாசியும், உம்மிடத்தில் வந்து, அவர்கள் உம்மை ஆராதித்தனர். அவர்கள் உம்மை விசுவாசித்தனர். அப்பொழுது அந்த நேரத்தில் தேசத்தில் ஒரு துன்பம் இருந்தது. ஆகவே இங்கே இந்தக் காலையில் ஒரு நவீன சிறிய மோசே முழங்காலில் இல்லை என்பது நமக்கு எப்படித் தெரியும்! தீர்க்கதரிசினியாகிய மிரியாமைப் போல ஒரு நவீன குட்டி மிரியாமும் கூட, இந்தக் காலை இங்கே முழங்காற்படியிடவில்லை என்பதும் எப்படி நமக்குத் தெரியும்! 309 ஓ அன்புள்ள பிதாவே, இந்தச் சிறிய பிள்ளைகள் உம்மை நேசிக்கின்றனர், அவர்கள் வந்து, அவர்கள் பெற்றுள்ள ஒரு ஆத்துமா இரட்சிக்கப்பட வேண்டுமென்று தெளிவாக உணர்ந்து, சிலுவையண்டை முழங்காற்படியிட்டுள்ளனர், அவர்கள் அதை இப்பொழுது உமக்கு அளிக்கின்றனர். ஏனெனில், “நீங்கள் அதை இழந்துபோனால், நீங்கள் அதைக் கண்டடைவீர்கள்; அதை வைத்துக் கொண்டால் அதை இழந்துபோவீர்கள்” என்று சற்று முன்னர் உம்முடைய வார்த்தையில் நாங்கள் வாசித்துள்ளோம். ஆகவே, பிதாவே, தங்கள் ஆத்துமாவை தங்களிடமே வைத்துக்கொள்ள இவர்கள் விரும்பவில்லை. அவர்கள் தங்களுக்கென்று ஜீவிக்க விரும்பவில்லை. அவர்கள் தங்களுடைய ஆத்துமாவை உம்மிடம் அளிக்க விரும்புகின்றனர், அதனால், அதைக் கொடுப்பதன் மூலம், அவர்கள் நித்திய ஜீவனைக் கண்டைவார்கள், கர்த்தாவே, இதை அருளும் இதை அருளும். 310 இந்த பீடத்தை சுற்றிலும் இருக்கிற எல்லா சிறிய பையன்களையும் சிறுமிகளையும் ஆசீர்வதியும். இந்தக் காலையில் இங்கே இருக்கும் தாய்மார்களையும் தகப்பன்மார்களையும் ஆசீர்வதியும். ஓ, உம்முடைய அன்புள்ள கிருபையும், இரக்கமும் அவர்கள் மேல் இருப்பதாக. எங்களுடைய எல்லா பாவங்களிலிருந்தும் குறைபாடுகளிலிருந்தும், எங்களை மன்னியும், கர்த்தாவே. எங்கள் மத்தியிலிருந்து சுகவீனத்தை எடுத்துப்போடும். 311 தேவனே, தூதர்களை அனுப்பும்! அல்லேலூயா! தேவனே, காபிரியேலுக்கும், பவனிசெல்லவிருந்த பத்தாயிரம் தூதர்களுக்கும் கட்டளையிட்டவரே, இந்தச் சிறிய பரிதாபமான பிள்ளைகள் இந்த பீடத்தினண்டையில் முழங்காற்படியிட்டுள்ளதை அவர்கள் கண்டால், எத்தனையோ தூதர்கள் வருவார்களே! இந்த பீடத்தைச் சுற்றிலும் இந்தச் சபை முழுவதிலும், தேவ தூதர்கள் நிற்க்கின்றனர். பதிவு செய்யும் தூதனும் இங்கே இருந்துகொண்டு, அவர்களின் பெயர்களை ஒரு புத்தகத்தில் பதிவு செய்துகொண்டிருக்கிறான். அவர்கள் தங்கள் ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்குள் கண்டையும்படியாய் அவர்கள் அதை இழந்துகொண்டிருக்கிறார்களே! கர்த்தாவே, அதை அருளும். 312 இந்த நாள் முதற்கொண்டு, இனிமேல், அவர்களுடைய சிறிய ஜீவியங்கள் இனிமையாகவும், தாழ்மையாகவும் இருப்பதாக. நீர் அவர்களை பரலோக வீட்டிற்கு அழைத்துக்கொள்ளும் அந்த நாள் வரை அவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கும், தங்களுடைய பரலோகப் பிதாவிற்கும் கீழ்ப்படிதலுள்ள பிள்ளைகளாக இருப்பார்களாக. தங்களுடைய சிறிய பெட்டிகளில் இருக்கையில், ஒவ்வொரு சுழலினூடாக, அவர்களை வழி நடத்தும். ஒவ்வொரு முறையும் புதர்களில் அது அகப்பட்டுக்கொள்ளும்போது, தேவனுடைய தூதர்கள், தேவனுடைய அன்பென்னும் நீரோட்டத்தில் அவைகளை தள்ளிவிடுவார்களாக. கர்த்தாவே, இதை அருளும். பாதையின் முடிவில், ஒரு அருமையான வீட்டை இவர்கள் கண்டு, அந்த நாளிலே, அங்கே தேவன் வாசலில் நின்று வரவேற்கும் அந்த மகிமையில் தங்களுடைய தாயையும், தாங்கள் நேசித்தவர்களையும் அங்கே காண்பார்களாக. பிதாவே, இதை அருளும். 313 எங்களுடைய எல்லா பாவங்களையும் தப்பிதங்களையும் எங்களுக்கு மன்னித்தருளும். இந்த நாள் முதற்கொண்டு முழுவதும் உம்முடையவர்களாக இருக்கத்தக்கதாக எங்களுக்கு உதவி செய்தருளும். இந்தச் சிறிய பிள்ளைகளை நாங்கள் இப்பொழுது உம்முடைய கரங்களில் சமர்ப்பிக்கின்றோம். தாய்மார்களுக்கென அளிக்கப்பட்டுள்ள இந்த நினைவு நாளிலே, இந்த அன்னையரின் தினத்திலே சரியான தாய்மார்களாக இவர்கள் இருக்கத்தக்கதாக, கர்த்தாவே, இவர்களோடு இந்த தாய்மார்களையும் சமர்ப்பிக்கிறோம். ஆகவே இவர்கள், இந்த நாள் முதற்கொண்டு, சிறந்த தாய்மார்களாக இருப்பார்களாக. பிள்ளைகள் சிறந்த பிள்ளைகளாக இருப்பார்களாக. கர்த்தாவே, நாங்கள் எல்லோரும் சிறந்தவர்களாக இருந்து, உமக்கு மகத்தான சேவை புரிவோமாக. பிதாவே, இதை அருளும், ஏனென்றால் நாங்கள் இயேசுவின் நாமத்தில் இதைக் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். இப்பொழுது நாமெல்லாரும் ஒரு சிறிய பல்லவியைப் பாடுவோமாக. 314 இயேசு உங்களை இரட்சித்தார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் எழுந்து நிற்கையில், இப்பொழுது இயேசு உங்களை கவனித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? இந்த விதமாக இப்பொழுது, உங்களுடைய கரங்களை அவரிடத்திற்கு உயர்த்துங்கள்.தந்தையினிடத்திற்கும், தாயினிடத்திற்கும், அவர்கள் எல்லோரிடத்திற்கும், நீங்கள் திரும்ப வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இந்த வழியாகத் திரும்புங்கள். இப்பொழுது இங்கே, தாயையும், தந்தையையும் நோக்கிப் பாருங்கள். சிறிய பையன்கள் மற்றும் சிறுமிகளாகிய நீங்கள் இப்பொழுது எல்லோரும் எழுந்து நில்லுங்கள். இப்பொழுது, எத்தனைப் பேர் இயேசுவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டு, குட்டி மோசேக்கு அவர் செய்ததுபோல உங்களையும் அவர் விசாரித்து கவனித்துக்கொள்ள இப்பொழுதிலிருந்து இயேசுவில் நம்பிக்கை வைக்கப்போகிறீர்கள், உங்கள் கரங்கள் உயர்வதை நான் பார்க்கட்டும். நீங்கள் ஒவ்வொருவரும். அது அருமையானதாகும்! இப்பொழுது என்ன சம்பவித்தது? உங்கள் ஆத்துமாவை நீங்களே காத்துக்கொண்டால் உங்களுக்கு என்னவாகும்? [சபையார், “அதை இழந்துபோவோம்” என்கின்றனர்—ஆசி.] அதை இழந்துபோவோம். ஆனால் அதை இயேசுவுக்கு அளித்தீர்களானால், என்ன சம்பவிக்கும்? [“அதை காத்துக்கொள்வோம்.”] நீங்கள் அதை காத்துக்கொள்வீர்கள். இப்பொழுது, இந்தக் காலை இயேசு உங்களை ஏற்றுக்கொண்டிருப்பாரானால், என்னவாகும்? நீங்கள் இப்பொழுது இயேசுவின் பிள்ளைகள், நீங்கள் அவ்வாறில்லையா? நீங்கள் இயேசுவினுடைய சிறிய பையனும் பெண்ணுமாயிருக்கிறீர்கள். 315 இங்கே கண்ணீருடன் நின்று கொண்டிருக்கும் இந்தக் குட்டி நபர்களை கவனியுங்கள். தேவனுக்கு அது தெரியாது என்று எனக்கு சொல்வீர்களா? ஆமென். நாளைய புருஷரும் ஸ்திரீகளுமே! நில்லுங்கள். பாவத்தின் களங்களிலிருந்து அவர்களைக் உள்ளே கொண்டு வாருங்கள்; அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், சிறியவர்களை இயேசுவண்டை கொண்டு வாருங்கள். ஓ, நான் எவ்வளவாக இயேசுவை நேசிக்கிறேன், இப்பொழுதே வாருங்கள்! ஓ, நீங்கள் எல்லாருமே. …நான் எவ்வளவாக இயேசுவை நேசிக்கிறேன், இப்பொழுது நம்முடைய கரங்களை உயர்த்துவோம். ஓ, நான் எவ்வளவாக இயேசுவை நேசிக்கிறேன், ஓ, நான் எவ்வளவாக இயேசுவை நேசிக்கிறேன், ஏனெனில் அவர் முதலில் என்னை நேசித்தார். 316 அது அழகானதல்லவா? இப்பொழுது, இவ்வுலகத்தின் சிறிய பிள்ளைகளை இயேசு நேசிக்கிறார். சகோதரியே, எங்களுக்கு சுருதியைக் கொடுங்கள். சிறிய பெண்களாகிய நீங்கள், இப்பொழுது நீங்கள் எல்லாரும் இந்த பக்கமாக, என்னை நோக்கித் திரும்புங்கள். இவ்வுலகத்தின் சிறிய பிள்ளைகளை இயேசு நேசிக்கிறார் என்று நான் பாட விரும்புகிறேன். எத்தனைப் பேர் இதை அறிவீர்கள்? சரி, இப்பொழுது நாம் பாடுவோமாக. சிறிய பிள்ளைகளை இயேசு நேசிக்கிறார், உலகத்தின் எல்லா பிள்ளைகளையும்; சிகப்பு, மஞ்சள், கறுப்பு, வெள்ளை அவருடைய பார்வையில் இவர்கள் விலையேறப் பெற்றவர்கள், இவ்வுலகத்தின் சிறிய பிள்ளைகளை இயேசு நேசிக்கிறார். 317 இப்பொழுது, நீங்கள் எல்லோரும் இப்பொழுது சேனையில் இருக்கிறீர்கள். நீங்கள் அதை அறிவீர்களா? நீங்கள் தேவனுடைய சேனையில் இருக்கிறீர்கள் என்பதை அறிவீர்களா? இப்பொழுது, நீங்கள் இப்பொழுது என்னை நோக்கிப் பாருங்கள். இதை என்னுடன் சேர்ந்து இப்பொழுது பாடுங்கள், ஏனெனில் நீங்கள் இப்பொழுது யுத்த வீரர்கள். உங்களுக்கு அது தெரியுமா? சிலுவையின் போர் வீரர்கள்! இப்பொழுது, நான் ஒருபோதும் அணிவகுத்துச் செல்லாமல்…அந்த ஒன்று உங்களுக்குத் தெரியுமா? சரி. பழைய ஞாயிறு பள்ளி பாடல், நீண்ட காலத்திற்கு முன்பு நான் அதை கற்றேன். நான் ஒருபோதும்… இப்பொழுது நீங்கள், என்னோடு பாடுங்கள். [நான் கர்த்தருடைய சேனையில் இருக்கிறேன் என்று பாடுகையில் சகோதரன் பிரான்ஹாம் செய்கைகளை செய்து காண்பிக்கின்றார்—ஆசி.] நான் காலாட்படையில் அணி வகுத்துச் செல்லாமல் போகலாம், குதிரைப் படையில் சவாரி செய்யாமற் போகலாம், பீரங்கியில் சுடாமலிருக்கலாம்; எதிரியின் மேல் பறக்காமல் இருக்கலாம், ஆனால் நான் கர்த்தருடைய சேனையில் இருக்கிறேன். நான் கர்த்தருடைய சேனையில் இருக்கிறேன், ஓ, நான் கர்த்தருடைய சேனையில் இருக்கிறேன்! இப்பொழுது என்னோடு சேர்ந்து பாடுங்கள்! இப்பொழுது எல்லோரும் சேர்ந்து பாடுவோம். இப்பொழுதே! நான் காலாட்படையில் அணி வகுத்துச் செல்லாமல் போகலாம், குதிரைப் படையில் சவாரி செய்யாமற் போகலாம், பீரங்கியில் சுடாமலிருக்கலாம்; எதிரியின் மேல் பறக்காமல் இருக்கலாம், ஆனால் நான் கர்த்தருடைய சேனையில் இருக்கிறேன். 318 அதை நீங்களாகவே பாட முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? இங்கே வா, லாஸி, இப்பொழுது இங்கே வா. நான் என்ன செய்கைகளை செய்கிறேனோ, அதே காரியங்களை நீங்களும் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்பொழுது, இங்கே பீடத்தின் பின்னே, சுற்றிலுமாய் வாருங்கள். இங்கே வாருங்கள். நீங்கள் ஒவ்வொருவரும், இங்கே நான் நிற்கின்ற இடத்திற்கு வாருங்கள், பாருங்கள். இங்கே அணிவகுத்துச் செல்லுங்கள்; பீடத்திற்கு வெளியே யாரும் இருக்க வேண்டாம். இங்கே என்னுடன் நடந்து வாருங்கள். அது தான். சரி. சரியாக இந்த விதமாக. இப்பொழுது இந்த விதமாக சுற்றித் திரும்புங்கள், இந்த விதமாக, இந்தக் கூட்டத்தாரை நோக்கிப் பாருங்கள். அது தான். இயேசுவை அறிந்துகொண்ட பிறகு அருமையான சிறிய பையன்களும், பெண் பிள்ளைகளும் என்ன செய்வார்கள் என்பதை நான் உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். இப்பொழுது, பையன்களும் பெண் பிள்ளைகளும், இங்கே திரும்பி வாருங்கள். இப்பொழுது நீங்கள்…அதுதான். இப்பொழுது அங்கே பாருங்கள். 319 இப்பொழுது நான், “நான் இராணுவத்தில் அணிவகுத்துச் செல்லாமற்போகலாம்,” என்று கூறும்போது, நீங்கள்…“காலாட் படையில் அணிவகுத்து,” நீங்களும் கூட, அணி வகுப்பு செய்ய வேண்டும். நான், “நான் குதிரைப் படையில் சவாரி செய்யாமற் போகலாம்,” என்று கூறும்போது, நான் செய்கிற அதே செய்கைகளை நீங்களும் செய்யுங்கள். இப்பொழுது என்னிடத்திலிருந்து சற்று தள்ளி நில்லுங்கள், இப்பொழுது பின்னால் தள்ளி நில்லுங்கள், இடம் தேவை. பின்னால் தள்ளி நில்லுங்கள், பின்னால் தள்ளி நில்லுங்கள், இப்பொழுது நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்கள். இப்பொழுது வாருங்கள், நாம் இதைப் பாடுவோமாக. [பாடுகையில் சகோதரன் பிரான்ஹாமும் பிள்ளைகளும் செய்கைகளைச் செய்கின்றனர்—ஆசி.] நான் காலாட்படையில் அணி வகுத்துச் செல்லாமல் போகலாம், (கவனியுங்கள்!) குதிரைப் படையில் சவாரி செய்யாமற் போகலாம், பீரங்கியில் சுடாமலிருக்கலாம்; எதிரியின் மேல் பறக்காமல் இருக்கலாம், ஆனால் நான் கர்த்தருடைய சேனையில் இருக்கிறேன். ஓ, நான் கர்த்தருடைய சேனையில் இருக்கிறேன், நான் கர்த்தருடைய சேனையில் இருக்கிறேன்! (ஆயத்தமாக!) நான் காலாட்படையில் அணி வகுத்துச் செல்லாமற் போகலாம், குதிரைப் படையில் சவாரி செய்யாமற் போகலாம், பீரங்கியில் சுடாமலிருக்கலாம்; எதிரியின் மேல் பறக்காமல் இருக்கலாம், ஆனால் நான் கர்த்தருடைய சேனையில் இருக்கிறேன். 320 ஆமென்! அப்படியே நில்லுங்கள். எத்தனைப் பேர் அதை விரும்புகிறீர்கள்? “ஆமென்” என்று கூறுங்கள். 321 இப்பொழுது, பரலோகப் பிதாவே, இந்தச் சிறிய பிள்ளைகளை இன்று ஆசீர்வதியும். கர்த்தாவே, அவர்கள் உம்முடையவர்கள். அவர்கள் தங்களுடைய ஜீவியங்களை உம்மிடம் அளித்துள்ளனர். மோசேயைக் குறித்தும், எப்படி நீர் அவனைப் பாதுகாத்தீர் என்பதைக் குறித்த அந்த சிறிய கதையை இவர்கள் கேட்டனர். அவர்களுக்கு ஆதரவாக இருந்து, அவர்களை வளர்த்த ஒரு அருமையான தாயையும் தந்தையையும் குறித்து அவர்கள் கேட்டனர். ஆகவே இந்த சிறு பிள்ளைகளுக்கு நல்ல தாய்மார்களும், தகப்பன்மார்களும் உள்ளனர். பிதாவே, நீர் தாமே அவர்களை காலம் என்னும் நீரோட்டத்தினூடாக வழிநடத்திச் சென்று அவர்களை கவனித்துக்கொள்வீராக, தேவ தூதர்கள் தாமே அவர்களைப் பாதுகாக்க வேண்டுமாய் நான் ஜெபிக்கிறேன். தாரும்…அதன்பின்னர் முடிவிலே ஏற்றுக்கொள்ளப்படும்படியாக, இந்த கடைசி நாட்களிலே, கர்த்தாவே, அவர்கள் தாமே உம்முடைய ராஜ்ஜியத்திலே ஏற்றுக்கொள்ளப்படுவார்களாக. நாங்கள் இதை கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். 322 நீங்கள் உங்களுடைய இருக்கைகளுக்கு திரும்பிச் சென்று நீங்கள் எப்படி நலமாக உணருகிறீர்கள் என்பதை உங்கள் தகப்பனிடமும் தாயிடமும் சொல்வீர்களாக. ஆமென். 323 “அவர்கள் அலைந்து திரிந்த தங்களுடைய நாட்களெல்லாம் வழி நடத்தப்பட்டனர்.” (உங்களுக்குக் கூட அந்த ஒன்று தெரியுமா?) அலைந்து திரிந்த அவர்களுடைய…அவர்கள் வழி நடத்தப்பட்டனர், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அவர்கள் வழி நடத்தப்பட்டனர்; கர்த்தருடைய கரத்தினால் நிச்சயமான வழிநடத்துதலில், அவர்கள் கானானின் கரைக்கு கொண்டு வரப்பட்டனர். எல்லாருமாக! இரவிலே அக்கினியின் அடையாளமும், பகலிலே மேகத்தின் அடையாளமும், சற்று முன், மேலே வட்டமிட்டுக்கொண்டிருந்த, நம்முடைய வழியில் அவை பயணிக்கும்போது, நமக்கு ஒரு தலைவனாக, ஒரு வழிகாட்டியாக, வனாந்திரத்தை கடந்து செல்கின்ற வரையிலும் இருக்கும், ஏனென்றால் தம்முடைய நல்ல சொந்த நேரத்தில், நம்முடைய தேவனாகிய கர்த்தர், முடிவில் வெளிச்சத்திற்கு நம்மை நடத்துவார். 324 எத்தனை பேர் இந்தக் காலையில் சுகவீனமாயிருந்து ஜெபித்துக்கொள்ள விரும்புகிறீர்கள்? நாங்கள் உங்களுடைய கரங்களை காணட்டும். நமக்கு சிறிது தாமதமாகிவிட்டதால், நம்முடைய சுகமளிக்கும் ஆராதனையை நாம் இன்றிரவிற்கு தள்ளி வைப்போம், இப்பொழுது ஜெபம் செய்வோம், ஏனென்றால் நமக்கு சற்று தாமதமாகிவிட்டது. 325 சிறிய கதையை நீங்கள் கேட்டு மகிழ்ந்தீர்களா? [சபையார், “ஆமென்!” என்கின்றனர்—ஆசி.] சிறிய பிள்ளைகளுக்கு இது நன்றாக இருந்தது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? [“ஆமென்!”] ஆம். நாம்—நாம் பல முறை இவர்களை கவனிக்காமல் கடந்து வந்துவிடுகிறோம். அதை நாம் செய்யக் கூடாது. பாருங்கள், ஞாயிறு பள்ளி வகுப்பை நடத்த எனக்கு தருணம் கிடைப்பதில்லை, ஆகவே இவர்களிடம் பேச இக்காலை வேளை ஒரு தருணம் இருந்தது. உங்களை களைப்படையச் செய்ய நான் விரும்பவில்லை, ஆனால் இந்த சிறிய கதையை உங்களுக்கு கூற நான் விரும்பினேன். 326 சிறு பிள்ளைகளே, நினைவில் கொள்ளுங்கள், இது நீங்கள் எங்கேயோ படித்த ஒரு பழைய சிறுகதையல்ல. அது சத்தியம். அதுதான் அந்த சத்தியம்! தேவன் அதைச் செய்தார். அவர் இப்பொழுது உங்களுடனே இருக்கின்றார். சரி. 327 நம்முடைய கலைந்து செல்லும் பாடலை, நாம் மெதுவாக பாடுகையில், நாம் இப்பொழுது நம்முடைய தலைகளை வணங்குவோமாக. “ஒவ்வொரு சத்துருவுக்கும் எதிராக ஒரு கேடயமாக, இயேசுவின் நாமத்தை உன்னோடு கொண்டு செல்.” சரி. இயேசுவின் நாமத்தை உன்னோடு கொண்டு செல், துன்பமும் துயரமுமான பிள்ளையே.